Friday, August 21, 2026

வ.ந.கிரிதரன் பாடல்: உறவு! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.


வ.ந.கிரிதரன் பாடல்: உறவு! வ
.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5. டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி உறவுகள் அற்ற உலகில் அர்த்தமுண்டோ? உறவுகளே இருப்பின் ஆணி வேராம். உயிர் தந்த பெற்றவர் உறவு. உடன் பிறந்தவர் மத்தியில் உறவு. உடன் வரும் நண்பர்கள் உறவு. உள்ளங் கவர் காதல் உறவு. பொருள் மலிந்த உலகு இது. பொருளில் மறைந்து கிடப்பது சக்தி. பொருளில் உணர்வு வந்தது எப்படி? பொருளே சக்தியாம், பொருளே உணர்வாம். உறவுகள் அற்ற உலகில் அர்த்தமுண்டோ? உறவுகளே இருப்பின் ஆணி வேராம். உயிர்கள் மத்தியில் உள்ளது உறவு. பயிர்கள் மத்தியிலும் உண்டாம் உறவு. அயர்ந்து கிடக்கையில் ஆறுதல் தருவது உயர்ச்சி தருவம் எல்லாமே உறவுதான். உறவுக்காய் ஏங்கும் உள்ளங்கள் எத்தனை? துறவிலும் அழிந்து விடுவதில்லை உறவு. உறவும் இங்கே இல்லை என்றால் சிறப்பும் உண்டோ இருப்புக்கு இங்கு. உறவுகள் அற்ற உலகில் அர்த்தமுண்டோ? உறவுகளே இருப்பின் ஆணி வேராம்.

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: உறவு! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.

வ.ந.கிரிதரன் பாடல்: உறவு! வ வ .ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5. டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி உறவுகள் அ...