Thursday, August 6, 2026

காலத்தால் அழியாத கருததாழம் மிக்க பாடல் - நான் ஏன் பிறந்தேன்? - கவிஞர் வாலி


எம்ஜிஆரின் ஆளுமை இன்றுவரை நிலை பெற்றிருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அவரது படத்தில் இடம் பெறும் இதுபோன்ற கருத்தாழம் மிக்க,ஆரோக்கியமான உணர்வுகளைத் தூண்டும், வாழ்க்கைக்கு வழி காட்டும் பாடல்கள். எனக்கு மிகவும் பிடிக்கும்.
உளவியலின் படி மனத்தை ஒரு விடயத்தில் ஒன்ற வைப்பது மிகவும் சிரமம். ஆனால் இயற்கையை இரசிக்கும்போது, காதலுக்குரியவரை நினைக்கும்போது, பிடித்த சினிமாவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது அந்த குரங்கு மனமானது ஓரளவு ஒரு விடயத்தில் குவிந்து விடுகின்றது. அச்சமயத்தில் கூறப்படும் விடயங்கள் பார்ப்பவரின் ஆழ்மனத்தில் சென்று படிந்து விடுகின்றன. அப்படிப் படிந்து விட்டால் பின்னர் அது அவரை வாழ்க்கையில் வழி நடத்திச் செல்லும். இவ்விதம் பதியப்படும் விடயங்கள் நேர்மறையானவையாக இருந்தால் அவை நேர்மறையா விளைவுகளைத்தரும். எதிர்மறையானவையாக இருந்தால் எதிர்மறை விளைவுகளைத்தரும். அதனால்தான் எம்ஜிஆர் தொடர்ச்சியாகத் தன் படங்களில் நல்ல கருத்துகள் அடங்கிய பாடல்களை இடம் பெறச் செய்தார்.
அமெரிக்க அதிபர் ஜோன் எஃப் கென்னடியின் புகழ்பெற்ற , 'நாடு என்ன செய்தது என்று கேட்காதே. நீ அதற்கு என்ன செய்தாய்' என்னும் உரையின் தாக்கத்தால் கவிஞர் வாலி எழுதிய பாடல்.
யாழ் ராணி திரையரங்கில் பார்த்த திரைப்படங்களில் ஒன்று.

படம் - நான் ஏன் பிறந்தேன்?
இசை - சங்கர் - கணேஷ்
குரல் - டி.எம்.எஸ்
வரிகள் - கவிஞர் வாலி
நடிப்பு - எம்ஜிஆர்
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா
நாடென்ன செய்தது ந‌ம‌க்கு
என கேள்விகள் கேட்பது எதற்கு
நீயென்ன செய்தாய் அதற்கு
என நினைத்தால் நன்மை உனக்கு
நாடென்ன செய்தது ந‌ம‌க்கு
என கேள்விகள் கேட்பது எதற்கு
நீயென்ன செய்தாய் அதற்கு
என நினைத்தால் நன்மை உனக்கு
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா
மலையில் பிறந்த நதியால்
மக்கள் தாகம் தீர்ந்தது
மரத்தில் பிறந்த கனியால்
அவர் பசியும் தணிந்தது
மலையில் பிறந்த நதியால்
மக்கள் தாகம் தீர்ந்தது
மரத்தில் பிறந்த கனியால்
அவர் பசியும் தணிந்தது
கொடியில் பிறந்த மலரால்
எங்கும் வாசம் தவழ்ந்தது
அன்னை மடியில் பிறந்த உன்னால்
என்ன பயன் தான் விளைந்தது
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா
பத்துத் திங்கள் சுமந்தாளே
அவள் பெருமைப் படவேண்டும்
உன்னைப் பெற்றதனால் அவள்
மற்றவராலே போற்றப்பட வேண்டும்
க‌ற்ற‌வ‌ர் ச‌பையில் உன‌க்காக‌
த‌னி இட‌மும் த‌ர‌ வேண்டும்
உன் க‌ண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும்
உல‌க‌ம் அழ‌ வேண்டும்

No comments:

காலத்தால் அழியாத கருததாழம் மிக்க பாடல் - நான் ஏன் பிறந்தேன்? - கவிஞர் வாலி

எம்ஜிஆரின் ஆளுமை இன்றுவரை நிலை பெற்றிருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அவரது படத்தில் இடம் பெறும் இதுபோன்ற கருத்தாழம் மிக்க,ஆரோக்கியமான உ...