Monday, August 24, 2026

வேண்டாம் என்பதும் சரி வேண்டும் என்பதும் சரி ஒரே பொருள் தெரியுமா?



"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல" - குறள் -

தமிழில் மட்டுமல்ல மொழிகளில் இலக்கணம்  மீறிய சொற்கள் பல வழக்கில் உள்ளன. வழக்கில் உள்ளதால் அவற்றை இலக்கணம் உள்வாங்கியுமுள்ளது.  முன்றில் என்பது தவறானது. இல்முன் என்பதே சரி. அதற்காக அதைப்பாவிப்பதை யாரும் நிறுத்தவில்லை.  சொல்லுக்குச் சொல் இலக்கணப்பிழையைக் கண்டு பிடிக்க முயற்சி செய்வது பயனைத்தராது.  

தமிழறிஞர் மு.வரதராசன் தொடர்ச்சியாகத்  தன் நாவல்களில் வேண்டா என்றுதான் எழுதுவார். வேண்டாம் என்று எழுத மாட்டார். எனென்றால் வேண்டும் என்பது இலக்கணப் பிழை. வேண்டா என்பதே சரியானது. ஆனால் வழக்கில் வேண்டாம் நிலைத்து  நிற்கிறது. இலக்கணப்பிழை என்றாலும் அதை வேண்டும் என்பதற்கு எதிர்ச்சொல்லாகத்தான் இன்னும் பாவித்து வருகின்றோம். வேண்டு ஆம் தான் வேண்டாம். அப்படியென்றால் வேண்டும் என்பதும், வேண்டாம் என்பதும் ஒரே பொருள். ஆனால் நாம் பாவிப்பது அதன் எதிர்க்கருத்தில். வழக்கில் எதிர்க்கருத்தில் தொடர்ந்து பாவிப்பதால் அது நிலைபெற்று விட்டது.

உண்மையில் மு.வ.வின் நாவல்களை வாசிக்கும்போது அவர் சரியாக, இலக்கணச் சுத்தமாக வேண்டா என்று பாவித்திருப்பது , வேண்டாம் என்று இலக்கணப்பிழையுடன் வாசித்துப் பழகிய எனக்கு நெருடலாகத்தானிருந்தது. 

உதாரணத்துக்கு ஒன்று:

"இப்போது எண்ணிப் பார்க்கிறேன். தாய்போல் பாசம் காட்டி வளர்த்த அந்த மனம் எவ்வளவு துன்பப்பட்டிருக்கும்? நீ தாய் அல்ல உன் பாசம் வேண்டா என்று மறுப்பதாக அல்லவா என்னுடைய கொடுஞ்செயல் இருந்திருக்கும்." (அகல்விளக்கு அத்தியாயம் நான்கு)

சில சமயங்கள் இலக்கணம் மீறப்படுவது மட்டுமல்ல , கருத்தும் மாற்றியமைக்கப்படுகின்றது.  இன்று யாரையாவது பார்த்து வேண்டா என்று பாவியுங்கள் என்று கூறிப்பாருங்கள் அவர்கள் என்ன சொல்லுவார்கள் என்று நினைக்கின்றீர்கள். 'உனக்கு இதுவும் வேண்டும், இன்னமும்  வேண்டும்' என்பார்கள்.

No comments:

வேண்டாம் என்பதும் சரி வேண்டும் என்பதும் சரி ஒரே பொருள் தெரியுமா?

"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல" - குறள் - தமிழில் மட்டுமல்ல மொழிகளில் இலக்கணம்  மீறிய சொற்கள் பல வழக...