Sunday, August 2, 2026

ஏ தாழ்ந்த தமிழகமே!


திமுகவின் மும்மூர்த்திகள்

திமுகவின் உதயத்தை  தமிழகத்தின் பொற்காலமாக நான் கருதுவேன். சமநீதி, சம உரிமை, பகுத்தறிவும், சுயமரியாதை இவற்றின் அடிப்படையில் , தமிழகத்தின் மக்களை எழுத்து, திரைப்படம், உரை மூலம் தட்டியெழுப்பியது திமுக. அறிஞர் அண்ணா தனது ஆங்கில, தமிழ்ப்புலமையினால் ஆணித்தரமான , தர்க்கச்சிறப்புள்ள உரைகளை ஆற்றினார். தனது எழுத்துகள் மூலம் மக்களை எழுச்சி கொள்ள வைத்தார். கலைஞர் கருணாநிதி தனது எழுத்தால், உரையால் மக்களைத் தட்டியெழுப்பினார். பராசக்தி போன்ற திரைப்படங்கள் ஆற்றிய சமுதாயப் பங்களிப்பை அவ்வளவு எளிதாக ஒதுக்கி விட முடியாது. அதே சமயம் எம்ஜிஆர் தனது திரைப்படங்கள் மூலம் திமுகவை மக்கள் மத்தியில் பதிய வைத்தார், அவர் படங்களில் இடம் பெறும் கறுப்பு சிவப்பு நிறங்கள், உதய சூரியன், அண்ணாவின் உருவப்பட்ம், திமுகவின் கொள்கையை வெளிப்படுத்தும் வசனங்கள் , பாடல்கள் , அத்துடன் தனது அரசியற் செயற்பாடுகள் மூலம் அவர் முக்கிய பங்காற்றினார். இவர்கள் மூவரையும் திமுகவின் மும்மூர்த்திகல் என்பேன். இவர்கள் அனைவரையும்  இவ்விதம் செயற்பட வைத்ததற்குக் காரணம் தந்தை பெரியாரின் சமூக, அரசியற் பங்களிப்பே என்பதையும் தவிர்க்க முடியாது.

தமிழகத்து இளைஞர்கள்

திமுக  தன் செயற்பாடுகளை இவ்விதம் விஸ்தரித்துக்கொண்டபோது திமுகவின் தலைவர்கள் அனைவரும் இளைஞர்கள். அன்றைய தமிழகத்து இளைஞர்கள் தம் தலைவர்களின் எழுத்துகளைப் படித்தார்கள். உரைகளைக் கேட்டார்கள். படங்களைப் பார்த்தார்கள். அறுபதுகள், எழுபதுகளில் திமுக இளைஞர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் தமிழகத்துக்கு அப்பாலும், பல்வேறு நாடுகளில் வாழ்ந்த தமிழர்களையும் எழுச்சி கொள்ள வைத்தது.  இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் எவ்விதம் இவ்விதம் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்பதை நேரில் பார்த்திருக்கின்றேன். அண்ணா அறிவகம் போன்ற நூலகங்களை அவர்கள் திறந்தார்கள். அண்ணாவின் 'ஏ தாழ்ந்த தமிழகமே'' போன்ற நூல்கள் ஆற்றிய பங்கினை எவரும் புறக்கணித்து விட முடியாது. திமுக  பின்னால் அணி திரண்டவர்கள் எல்லாம் இளைஞ்ர்களும், பொதுமக்களும். கலைஞர் நாற்பது வயதினைக் கடந்த நிலையில் முதல்வரானவர். எம்ஜிஆர் முதல்வராக வருவதற்கு முன் பல ஆண்டுகள் அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்தவர். அனுபவங்களைப்பெற்றவர்/

இன்று...

இன்று நடப்பதென்ன? இன்றைய  இளைஞர்களின் செயற்பாடுகள் எவ்விதமுள்ளது? நடிகர் விஜய்யின் நற்பணி மன்றங்கள் சமுக சேவையினைச் செய்தாலும் அவர்  பின்னால் ஆயிரக்கணக்கில் அணி திரண்டுள்ள் இளைஞர்கள் எவ்விதத்தத்துவ அடிப்படையிலும் ஒன்று திரண்டவர்கள் அல்லர். நடிகர் விஜய்யால் கூடச் சுயமாக, ஸ்கிரிப்ட் இன்றி உரையாற்ற முடியாது, அப்படி உரையாற்ற முடிந்தால் அவர்தம் சினிமாப்பாணியில் பஞ்ச் வசனங்களை மட்டுமே பேச முடியும். வெறும் இன்ஸ்டாகிராம் ரீல்களைப் பார்த்து,  திரையில் நடிப்பைப்பார்த்து அவர் பின்னால் , உணர்ச்சியின் அடிப்படையில் அணி திரண்டிருக்கின்றார்கள். 

தமிழகத்தில் திமுகவின்  ஆதிக்கம் வடக்கர்களுக்குச் சிம்ம சொப்பனமாகவிருந்தது. எப்படியாவது திமுகவை இல்லாமல் ஒழித்து விட வேண்டுமென்று செய்த முயற்சிகள் எல்லாம் இதுவரை வீணாகிப்போயின. இந்நிலையில் நடிகர் விஜய்யைக் களமிறக்குகின்றார்கள். அதற்கு முன்னர் தொடர்ச்சியாக திமுக மீதும், கலைஞர்மீதும் சேற்றினை வாரியிறைத்தார்கள். திமுகவை ஓரங்கட்ட அனைத்து முயற்சிகளையும் எடுத்தார்கள். இன்று திமுகவின் எஞ்சிய தூண்களான அறிஞர் அண்ணா, எம்ஜிஆரைப்  புறக்கணிக்கும் செயற்பாடுகளைத் தொடங்கியிருக்கின்றார்கள். யார் சொன்னது ஆரியர், திராவிடர் போர் எப்போதோ முடிந்து விட்டதென்று? முதலில் திராவிடர்களை வடக்கிலிருந்து கலைத்தார்கள், தெற்கில் ஒன்று திரண்டிருந்தவர்களைத் தமிழுக்குள் வடமொழியைப் புகுத்தித்  தமிழைக் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பிரித்தார்கள். இன்று தமிழகத்து மக்களை அவர்களீன் முன்னோர் அடிப்படையில் தமிழர், தெலுங்கர், கன்னடத்திர், மலையாளிகள் என்று பிரிப்பதற்குப் படாதபாடு படுகின்றார்கள். தொடர்வது  நவீன ஆரிய, திராவிடப் போர்!

இன்று இளைஞர்கள் மாறி விட்டார்கள். ஒரு காலத்தில் நிறையப் படித்தார்கள். செவி மடுத்தார்கள்., சிந்தித்தார்கள். அவற்றின் வழி அரசியல் நிலைப்பாடுகளை எடுத்தார்கள்,. ஆனால் இன்று...?   இது தமிழக்த்தின் எதிர்காலம் பற்றியதோர் அச்ச உணர்வைத் தோற்றுவிக்கின்றது.

*டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி 


 

No comments:

யாழ்ப்பாணம் போவோமா?

[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...