Friday, August 21, 2026

தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு பற்றிய செய்தியாளர் சந்திப்பு! - வல்லிபுரம் சுகுந்தன் (செயலாளர்)< தொல்காப்பிய மன்றம் (கனடா) -


[தொல்காப்பிய மன்றம் (கனடா) செப்டம்பரில் கனடாவில் நடைபெறவுள்ள 'இரண்டாவது தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு 2026 சம்பந்தமாக, செய்தியாளர் சந்திப்பொன்றை ஆகஸ்ட் 24 அன்று நடத்தவுள்ளது. அது பற்றிய தகவலை மன்றத்தின் செயலாளர் வல்லிபுரம் சுகுந்தன் பகிர்ந்திருந்தார். அதனை நண்பர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.]

வணக்கம்! கனடாத் தொல்காப்பிய மன்றத்தினால் 2026ஆம் ஆண்டு செப்டம்பர் 19, 20ஆம் தேதிகளில் 2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மார்க்கம் நகரின் பில் கோகர்த் மேல்நிலைப் பள்ளியில் (Bill Hogarth Secondary School) “தொல்காப்பியத்தை நாம் ஏன் கற்க-கற்பிக்க கொண்டாட-பரவலாக்க வேண்டும்” என்னும் பொருண்மையில் நடாத்தப்படவுள்ளது.
இம் மாநாடு, ஆயிரம் பேர் ஒன்றுகூடும் நிகழ்வாகக் கனடாவில் இயங்கிவரும் 90க்கும் மேற்பட்ட தமிழ் மன்றங்கள், ஊர்ச் சங்கங்கள், கல்விக்கூடங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பெருமளவிலான நிதி மூலதனத்துடன் நடாத்தப்படவுள்ளது.
இந்த மாநாட்டிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு (Press Meet) ஆகஸ்ட் 24, 2026 திங்கள் கிழமை இரவு 7 மணிக்கு JC's Banquet & Convention Centre , 1686 Ellesmere Rd, Scarborough, ON M1H 2V5 நடைபெறவுள்ளது.
தங்களை இந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு மாநாட்டைப் பரவலாக்கம் செய்து சிறப்பிக்குமாறு அழைக்கிறோம். நன்றி.
அன்புடன்
முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ், தலைவர் - (647) 881-3613
பேராசிரியர் இல. சுந்தரம் , மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் - (437) 979 3006
இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்புடன் நமது மாநாட்டுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது.
மாநாட்டுக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளைச் சார்ந்தோர் தவறாது கலந்துகொள்ள அழைக்கிறோம்.
நன்றி
அன்புடன்,
சுகந்தன் வல்லிபுரம், செயலாளர், தொல்காப்பிய மன்றம் - கனடா

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: உறவு! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.

வ.ந.கிரிதரன் பாடல்: உறவு! வ வ .ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5. டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி உறவுகள் அ...