Friday, August 21, 2026

'காவியத்தலைவி ' காலத்தில் கரைந்தார்!


நடிகை செளகார் ஜானகியின் மறைவு பற்றிய தகவலை முகநூல் மூலம் அறிந்தேன். எனக்குப் பிடித்த நடிகைகளில் இவரும் ஒருவர். பாத்திரம் எதுவானாலும் அதனை ஏற்றுத் திறமையாகச் செய்வதில் வல்லவர். நடிகைகளில் துணிச்சலும், தன் திறமை மீதான செருக்கும், ஆங்கிலப் புலமையும் மிக்கவர். 

இவர் வாழ்க்கையே ஓர் எதிர்நீச்சல்தான். இளம் வயதில் கைக்குழந்தையுடன், மண முறிவு ஏற்பட்ட நிலையில், துணிச்சலுடன் வாழ்வை எதிர்நோக்கித் தன்னைத் தமிழ்த்திரையுலகில் நிலை நாட்டியவர்.  தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்தவர். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டாலும், தமிழ்த்திரையுலகில் மிகுந்த புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.


இவர் ஒரு சாயலில் ஜப்பானிய அல்லது சீனப்பெண் போல் இருப்பார். ஒரு முறை இவர் ஜப்பான் சென்றிருந்தபோது, ஜப்பானியப் பெண்கள் அணியும் ஆடையுடன், குடையுடன் வீதியில் சென்றபோது இவர் அழகில் மயங்கி, ஜப்பானியப் பெண்ணாக எண்ணி ஜப்பானியர்கள் இவரைச் சூழந்து கொண்டதாக, பொம்மை என்னும் சினிமாச் சஞ்சிகையில் இவர் எழுதிய கட்டுரையொன்றினை , என் மாணவப் பருவத்தில் வாசித்த நினைவுண்டு.

அகிலனின் 'பாவை விளக்கு' நாவலில், நாயகன் தணிகாசலத்தின் (நடிகர் திலகம் சிவாஜி) மனைவியாக வரும் அவரது முறைப்பெண் கெளரி வேடத்தில் மிகவும் இளமையான தோற்றத்தில் தெரியும் செளகார் ஜானகியின் தோற்றமும், அவர் பாடும் 'வெட்கமாக இருக்குது' பாடலும் அவரை நினைத்தால் நினைவுக்கு வரும் பாடல்களில் ஒன்று.

முழுமையான வாழ்வு செளகார் ஜானகியின் வாழ்வு. அவரது வாழ்வு கொண்டாடப் பட வேண்டியது. கொண்டாடுவோம். அதுவே அவருக்கு நாம் செலுத்தும் நிறைவான அஞ்சலியாக இருக்க முடியும். இருக்கும்.


எனக்குப் பிடித்த செளகார் ஜானகியின் படப் பாடல்கள் சிலவற்றை , அவர் நினைவாகக் கீழே தந்திருக்கின்றேன். கேட்டுப்பாருங்கள். உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். இவை அவரது பல்வகைப்பட்ட நடிப்பையும் வெளிப்படுத்தும் பாடல்கள்.

அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா (எதிர் நீச்சல், இசை - வி.குமார், வரிகள் - கவிஞர் வாலி, குரல் - டி.எம்.எஸ் & பி.சுசீலா) https://www.youtube.com/watch?v=VbtMpYhXx5E

வெட்கமாக இருக்குது  (படம் - பாவை விளக்கு,  இசை : கே.வி. மகாதேவன்வ் வரிகள்: மருதகாசி, குரல்: சூலமங்கலம் ராஜலட்சுமி) - https://www.youtube.com/watch?v=abjDeRzJQD0

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா (படிக்காத மேதை, இசை - கே.வி.ம்காதேவன், குரல் - டி.எம்.எஸ் & சூலமங்கலம் ராஜலக்சுமி, வரிகள் - கவிஞர் கண்ணதாசன்) -  https://www.youtube.com/watch?v=RkbR2mU7LQo

அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள் (உயர்ந்த மனிதன், இசை - எம்.எஸ்.வி, வரிகள் - கவிஞர் வாலி, குரல் - பி.சுசீலா)  - https://www.youtube.com/watch?v=3KYi-Srq4_o

பார்த்த ஞாபகம் இல்லையோ ( புதிய பறவை, இசை - விஸ்வநாதன் & ராமமூர்த்தி, வரிகள் - கவிஞர் கண்ணதாசன், குரல் - பி.சுசீலா)  - https://www.youtube.com/watch?v=74N1KygkSZw

புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் (இரு கோடுகள், இசை - வி.குமார், வரிகள் - கவிஞர் வாலி, குரல் - ஜமுனாராணி & பி.சுசீலா)  - https://www.youtube.com/watch?v=uLHbAcA3q1w

மாலைப்பொழுதின் மயக்கத்திலே  - (பாக்கியலக்சுமி, இசை - விஸ்வநாதன் & ராமமூர்த்தி, பாடல் வரிகள் - கவிஞர் கண்ணதாசன், குரல் - பி.சுசீலா) https://www.youtube.com/watch?v=tLbOo25BEC8

இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு (படம் -   ஒளி விளக்கு , இசை - எம்.எஸ்.வி, பாடல் வரிகள் - கவிஞர் வாலி, குரல் - பி.சுசீலா) - https://www.youtube.com/watch?v=CKSqovG7Hmc

மாம்பழத்தோட்டம் மல்லிகைக்கூட்டம்  ((படம் -   ஒளி விளக்கு , இசை - எம்.எஸ்.வி, பாடல் வரிகள் - கவிஞர் வாலி, குரல் - சீர்காழி கோவிந்தராஜன் & எல்.ஆர்.ஈஸ்வரி) - https://www.youtube.com/watch?v=I29pig7uqoo

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு - (காவியத்தலைவி, இசை - எம்.எஸ்.வி , குரல் - பி.சுசீலா, வரிகள் - கவிஞர்  கண்ணதாசன்) -https://www.youtube.com/watch?v=CC0M1oRrbpY

கண் போன போக்கிலே கால் போகலாமா (பணம் படைத்தவன், இசை - எம்.எஸ்.வி, வரிகள் - கவிஞர் வாலி, குரல் - டி.எம்.எஸ்) - https://www.youtube.com/watch?v=3yxZYAAJb_M

No comments:

யாழ்ப்பாணம் போவோமா?

[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...