Wednesday, April 15, 2026

பாடகரும் , தொழில் நுட்ப வளர்ச்சியும்!


தமிழ்த்திரைப்படங்களின் ஆரம்பக் காலகட்டத்தில்  பாடும் திறமை மிக்கவர்களே கதாநாயகர்களாக, கதாநாயகிகளாக நடிக்க முடியும் நிலை இருந்தது. அதனை மாற்றியது பின்னணிக் குரல் கொடுத்துப் பாடும்  'டப்பிங்' தொழில் நுட்பம்.  இன்று செயற்கைத் தொழில் நுட்பத்தின் வருகையுடன் இந்நிலையும் மாறுதலடைந்து வருகின்றது. இன்று செயற்கை நுண்ணறிவால் இசையமைத்துப் பாடவும் முடிகின்றது. ஒருவரின் குரலில் பாடும் திறமையும் அதற்குள்ளது. 

நடிகர்களின் குரல்களிலேயே பாடும் நிலையினை இலகுவாக்கி விட்டது செயற்கை நுண்ணறிவுத்  தொழில் நுட்பம். மேலும் சிலரின் குரல் நன்றாகவிருக்கும். ஆனால் பாடும் திறமை இருக்காது. சிலருக்குப் பாடும் திறமை இருக்கும், ஆனால் அவர்கள்தம் குரல் சிறப்பாக இருக்காது. இந்நிலையில் சிறந்த குரல்களைத்  தேர்ந்தெடுத்து அவற்றைப் பாவித்துப் பாடல்களைப் பாட வைக்கும் நிலை உருவாகியுள்ளது.இணையத்தொழில் நுட்பம் சமூக ஊடக ஆய்வாளார்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், நடிகர்கள், பதிப்பாளர்கள், இதழ்/பத்திரிகை ஆசிரியர்கள்  எனப் பலவகைப்பட்டவர்களையும் உருவாக்கி விட்டது. இப்பொழுது பாடுவதற்குக் குரல் ஒன்று மட்டும் இருந்தால் போதுமென்ற நிலை உருவாகியுள்ளது.  செயற்கை நுண்ணறிவின் ஆற்றல் மேன்மேலும் அதிகரிக்கையில் இது மிகவும் சாதாரணமாக விடும்.

'புதியன புகுதலும், பழையன கழிதலும்' காலமாற்றத்தின் தவிர்க்க முடியாததோர் அம்சம்!

* டிஜிட்டல் ஓவியம் - செயற்கை நுண்ணறிவு சாட் ஜிபிடி.

No comments:

யாழ்ப்பாணம் போவோமா?

[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...