Wednesday, April 1, 2026

மகாகவி பாரதியார் பாடல் - 'நான்'


எனக்குப் பிடித்த மகாகவி  பாரதியாரின் இன்னுமொரு பாடலிது. எனது குரலைப் பாவித்து , இசையமைத்துப் பாடியிருக்கின்றார் செயற்கை நுண்ணறிவாளர் SUNO 5.5. என்னுடன் கூடப் பாடும் பெண் பாடகி 'கணனிச்செல்வி' செயற்கை நுண்ணறிவின் குழந்தை.

மகாகவி பாரதியார்  பாடல் - 'நான்'   
இசை & வ.ந.கிரிதரனின் குரலில் : SUNO AI  ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன் 


வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானிழல் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியிலுள்ள உயிரெலாம் நான்

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;

கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உருவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில் நகர் கோபுரம் யாவுமே நான்இன்னிசை மாத ரிசையுளேன் நான்;
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர் தம் பொய்யெலாம் நான்;
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;

மந்திரங் கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்,
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்,
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்;
கண்டநற் சக்திக் கணமெலாம் நான்,
காரண மாகிக் கதித்துளோன் நான்

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்;
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற் சோதிநான்!

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;

No comments:

மகாகவி பாரதியார் பாடல் - எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே!

எனக்குப் பிடித்த மகாகவி  பாரதியாரின் இன்னுமொரு பாடலிது. எனது குரலைப் பாவித்து , இசையமைத்துப் பாடியிருக்கின்றார் செயற்கை நுண்ணறிவாளர் SUNO 5....