Monday, April 6, 2026

'வாழும் தமிழ்' என்னும் சொற்றொடர் பற்றி.... - வ.ந.கிரிதரன் -


 

எழுத்தாளர் ஜெயமோகன் அண்மையில் நியூயோர்க் மாநகரில் நடைபெற்ற 'வாழும் தமிழ்' நிகழ்வில் ஆற்றிய ஆங்கில உரையினையும், அதன் கூகுள் தமிழாக்கத்தையும் தனது வலைப்பதிவில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் 'வாழும் தமிழ்' என்னும் சொற்றொடர் பற்றிப் பின்வருமாறு கூறியிருந்தார்:

"அக்காலத்தில் காலம் செல்வம், ‘வாழும் தமிழ்’ என்ற பெயரில் ஓர் இலக்கிய நிகழ்வை, அதாவது ஒரு புத்தகக் கண்காட்சி மற்றும் இலக்கியச் சந்திப்பை ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அவரது அனுமதியுடன் இந்த விழாவின் பெயரை நாங்கள் அவரிடமிருந்து பெற்றோம். இந்த நிகழ்வு அவரது கனவுகளின் வளர்ச்சிநிலை. ‘வாழும் தமிழ்’ என்ற சொல்லை உருவாக்கிய செல்வத்தின் மனநிலையை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். இவ்வுலகின் எந்தவொரு சிறந்த மொழியையும் போலவே, தமிழும் இங்கு என்றென்றும் வாழப்போகிறது. நாம் அதை வாழவைக்கவில்லை. அப்படியென்றால், ‘வாழும் தமிழ்’ என்ற சொல்லின் பொருள் என்ன? செல்வம் அக்காலத்தில் ஒரு அகதியாக இருந்தார்; இலங்கையிலிருந்து பாரிஸுக்கும், பின்னர் டொராண்டோவுக்கும் குடிபெயர்ந்தார். தனிப்பட்ட முறையில் அவருக்கு அந்தச் சொல்லின் பொருள் என்ன? அது அவருக்கு ஒரு மந்திரமாக இருந்தது; முப்பது ஆண்டுகளாக அதைத் தன் நெஞ்சில் சுமந்து, தன் வாழ்நாள் முழுவதையும் அதற்காகவே செலவிட்டார்."

கி.வா.ஜகந்நாதன் 
இக்கூற்றில் ஜெயமோகன்  'வாழும் தமிழ்' என்னும் பெயரைக் 'காலம்' செல்வத்தின் அனுமதியுடன் பெற்றுக்கொண்டதாகவும், 'வாழும் தமிழ்' என்னும் சொல்லைச் செல்வம் உருவாக்கியதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். 

உண்மையில் 'வாழும் தமிழ்' என்னும் சொற்றொடரைக்  'காலம்' செல்வம்தான் உருவாக்கினாரா?  இது 'நனவிடை தோய்தல்' என்னும் சொற்றொடரை எழுத்தாளர் எஸ்.பொ உருவாக்கியதாகக் கூறப்பட்டதை நினைவூட்டியது. 'நனவிடை தோய்தல்' என்னும் சொற்றொடரை மகாகவி பாரதியார் . 

வாழும் என்னும் சொல்லை முன் வைத்து இன்னுமொரு சொல்லைக் குறிப்பிடுவது  நம் தமிழர் பழக்கம். வாழும் கலை ,. வாழும் சுவடுகள் (எழுத்தாளர் நடேசனின் நூல்) போன்ற சொற்றொடர்கள் தமிழில் நிறைய உள்ளன. இது போன்றதுதான் 'வாழும் தமிழ்' என்னும் சொறறொடரும். இதனை நான் அறிய முதன் முதலாகப் பாவித்தவர் எழுத்தாளரும், 'கலைமகள்' சஞ்சிகையின் முன்னாள் ஆசிரியர்களில் ஒருவருகான கி.வா.ஜகந்நாதன். இத்தலைப்பில் தமிழ் இலக்கியக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பொன்றை அவர் வெளியிட்டிருக்கின்றார். அதன் முதற் பதிப்பு 'கலைமகள்' நிறுவனத்தினரால் 1950இல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்நூல்லை  எழுபதுகளில் யாழ் பொதுசன நூலகத்திலிருந்து கடன்பெற்று வாசித்திருக்கின்றேன். 

'காலம்' செல்வம் கி.வா.ஜகந்நாதனின் 'வாழும் தமிழ்' நூல் பற்றி அறியாதிருக்கலாம். பொதுவாக வாழும் என்னும் சொல்லைப்பாவித்து நம்மவர்கள் சிறப்பித்து ஒன்றைக் கூறுவது போல் அப்பெயரைத் தனது வருடாந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வைத்திருக்கலாம். 

இருந்தாலும் இதுவோர் பெரிய தவறல்ல. ஆயினும் தகவற் பிழையொன்றைச் சுட்டிக்காட்டுவது அவசியம் என்பதால் இந்தப்பதிவு.





No comments:

கருந்துளை (Black Hole) குறும்படம் பார்த்தேன்! என்னையும் அதற்குள் இழந்தேன்!

[ "THE BLACK HOLE" Short Film Pick Featured by NineJunctions Written & Directed by Philip Sansom & Olly Williams (Phil and...