Saturday, April 18, 2026
வ.ந.கிரிதரனின் பாடல்: இயற்கையைப் பேணுவோம். வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
வ.ந.கிரிதரனின் பாடல்: இயற்கையைப் பேணுவோம்.
வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.
விரிந்து கிடக்கிறது இயற்கை எங்கும்.
விரியும் அழகில் என்னை மறக்கின்றேன்.
விரிவான் என்னை எப்பொழுதும் மயக்கும்.
வியக்க வைக்கும் பசுமைமிகு வயல்கள்.
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.
என்னை மறப்பதில் புத்துணர்வு ஊறுமே.
தன்னை மறப்பதில் பெருகுவதும் இன்பமே.
இருப்பைக் களிப்புடன் தொடர வைக்கும்
இயற்கையை எப்பொழுதும் விரும்புவேன் நான்.
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.உணர்வால் தாழ்ந்து கிடக்கும் சமயங்களில்
உற்சாகம் பெறுவதற்கு உதவுவது இயற்கை.
மனம் சோர்ந்து கிடக்கும் பொழுதுகளில்
மனச் சோர்வு அகற்றுவதும் இயற்கை.
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.
இன்பத்தை வாழ்வுக்கு வழங்குவது இயற்கை.
இருப்புக்கு அர்த்தம் தருவதும் இயற்கை.
இயற்கையைப் பேணுவது நமது கடமை.
இயற்கையைப் பேணுவோம், வளம் சேர்ப்போம்.
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.
Subscribe to:
Post Comments (Atom)
வ.ந.கிரிதரனின் பாடல்கள் - 'கடற்புள்ளே' (மூன்றாவது தொகுப்பு)
எனது 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' யு டியூப் சானலில் வெளியான பாடல்களின் மூன்றாத் தொகுதி 'கடற்புள்ளே!' என்னும் தலைப்பில் கிண்டில் /...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
No comments:
Post a Comment