Monday, April 20, 2026

கலாமோகனின் 'துவாரம்' சிறுகதைத்தொகுப்புப் பற்றி....


நேற்று எழுத்தாளர் கற்சுறாவிடமிருந்து எழுத்தாளர் கலாமோகனின் 'துவாரம' சிறுகதைத்தொகுப்பினைப் பெற்றுக்கொண்டேன். அதனை வெளிப்படுத்தும் புகைப்படம்.

இது கற்சுறா தம்பதியினரின் (கற்சுறா & ஜெபா) 'மற்றது' பதிப்பகம் வெளியிட்ட கலாமோகனின் சிறுகதைகளின் தொகுப்பு -1. எதிர்காலத்தில் ஏனைய தொகுப்புகள் வெளியிடப்பட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

கலாமோகன் புகலிடத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாளர்களில் ஒருவர். பன்முக, பன்மொழிப்படைப்பாளி (பிரெஞ்சு மொழியிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன)

'தாயகம்' (கனடா) வெளியானபோது அதில் கலாமோகன், ஜெயந்தீசன், நேசமித்திரன் என்னும் பெயர்களில் நிறைய பன்முகப்படைப்புகளை (சிறுகதை, கவிதைம், கட்டுரை & மொழிபெயர்ப்பு என) எழுதியவர்.

 கலாமோகன்

தொகுப்பை முழுவது வாசித்த பின்னர் என் தொகுப்பு பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொள்வேன். மேற்பார்வையில் தொகுப்பின் வடிவமைப்பில் அதிகக் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றியது. தமிழ்ச் சிறுகதைத்தொகுப்புக்குத் தேவைக்கு அதிகமாக ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தது ஏன் என்றும் தோன்றியது. பின்னட்டைக் குறிப்பு, உள்ளே முதலிள் வரும் எழுத்தாளர் பற்றிய அறிமுகக் குறிப்புகளைத் தமிழில் தந்திருக்கலாம். எதற்காக ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டிருக்கின்றார்கள்?

கலாமோகனின் 'நிஷ்டை' சிறுகதைத்தொகுப்பு திறனாய்வாளர்களின் கவனத்தைப்பெற்ற தொகுப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தொகுப்பும் அவ்வகையில் கவனத்துவம் பெறும் தொகுப்பாக அமையும் என்று நிச்சயமாக நம்புகின்றேன்.


 


No comments:

கலாமோகனின் 'துவாரம்' சிறுகதைத்தொகுப்புப் பற்றி....

நேற்று எழுத்தாளர் கற்சுறாவிடமிருந்து எழுத்தாளர் கலாமோகனின் 'துவாரம' சிறுகதைத்தொகுப்பினைப் பெற்றுக்கொண்டேன். அதனை வெளிப்படுத்தும் புக...