Sunday, April 26, 2026

வ.ந.கிரிதரனின் பாடல்: வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு!


வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5   
டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமொரு விளையாட்டே.

சதுரங்கத்தில் வெற்றி பெறுவதற்கே
சிந்தித்து நகர்தல் முக்கியமே.
மண்ணில் வெற்றி பெறுவதற்கே.
எண்ணி நகர்தல்; அவசியமே.

சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமிங்கே விளையாட்டே.

சதுரங்கம் என்பதொரு போர்க்களமே.
அதுபோல் வாழ்வுமொரு போர்க்களமே.
போர்க்களத்தில் வெற்றி பெறுவதற்கே
பொறுமை மிகவும் அவசியமே.

சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமிங்கே விளையாட்டே.

பொறுத்தார்  பூமி ஆள்வார்.
போர்க்களத்தில் பொறுத்தார் வெற்றியடைவார்.
சதுரங்கத்தில் சாதனை படைப்பார்.
எதுவந்தபோதும் எழுந்து வெல்வர்.

சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமொரு விளையாட்டே.வாழ்க்கையை விளையாடி வெல்வோம்.
வெல்வதும், தோற்பதும் இயல்பே.
சதுரங்க வாழ்விலும் சகஜமே.
எதுவந்த போதும் வென்றிடுவோம்.

சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமொரு விளையாட்டே.

No comments:

ஈழத்து சிறுகதை பகுப்பாய்வு ( 05) : வ.ந.கிரிதரனின் ‘ஆத்மாவின் புத்துயிர்ப்பு!’ - காலப் பேரழிவு, இருத்தலியல் மீறல் மற்றும் பின்நவீனத்துவ அறிவியல் புனைகதை! - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -

“ எவ்வளவு மாசுபடுத்த முடியுமோ அவ்வளவுக்கு மாசுபடுத்தப்பட்டு விட்டது இந்த அழகிய நீல வண்ணக் கோள் ... மானுட வரலாற்றில் மிகப்பெரியதொரு பாய்ச்சலை...