என் பால்யப் பருவத்தில், என் வாசிப்பின் ஆரம்பப் படிக்கட்டுகளில் தமிழக வெகுசனச் சஞ்சிகைகள் ஆற்றிய பங்கு முக்கியமானது. என் வாசிப்பார்வத்தைத் தூண்டியவை.
அக்காலகட்டத்தில் ஆனந்த விகடன் மாதந்தோறும் மாவட்ட மலர்களை வெளியிட்டது. நான் விரும்பி வாசித்த மாவட்ட மலர்கள் அவை.
மதுரை, சென்னை, தர்மபுரி, நீலகிரி, குமரி, ஜம்மு - காஷ்மீர் என வெளியிடப்பட்ட மாவட்ட மலர்களின் அட்டைப்படங்களில் சிலவற்றை இங்கு காண்கின்றீர்கள்.
அம்மாவட்ட மலர்களில் அம்மாவட்டங்கள் பற்றிய அரிய தகவல்கள் நிறைய இருந்தன. அத்துடன் அம்மாவட்ட மண்ணின் சிறப்பை வெளிப்படுத்தும் பரிசு பெற்ற சிறப்புச் சிறுகதையொன்றுமிருக்கும்.
எனக்கு நினைவில் நிற்கும் மாவட்ட மலர்களில் ஒன்று தஞ்சை மாவட்ட மலர். அதில்தான் முதன் முதலில் எனக்கு எழுத்தாளர் மேத்தா அறிமுகமானார். அவரது தஞ்சை மண்ணின் மணத்தை வெளிப்படுத்தும் சிறுகதையொன்றும் அம்மாவட்ட மலரில் வெளியாகியிருந்தது. ஓவியர் கோபுலுவின் ஓவியத்துடன் இருந்ததாக ஞாபகம். கதையும் நாதஸ்வரக் கலைஞர் ஒருவரை மையமாகக்கொண்டதாகவும் அமைந்திருந்ததாகவும் நினைவிலுள்ளது. அதுவே மேத்தாவின் முதல் கதையா என்பது சரியாக நினைவிலில்லை.
No comments:
Post a Comment