Tuesday, July 14, 2026

எழுத்தாளர் பூமணி 

கரிசல் மண்ணின் உயிர்த்துடிப்புடன் கூடிய மொழியில் யதார்த்தவாதப் படைப்புகளைத் தந்தவர் பூமணி !

சில நாட்களுக்கு முன்புதான் இங்குள்ள டொரோண்டோ நூலகக் கிளையொன்றிலிருந்து எழுத்தாளர் பூமணியின் ஐந்து நாவல்களை உள்ளடங்கிய 'பூமணி நாவல்கள்'  தொகுப்பினை, நற்றிணை பதிப்பகம் வெளியிட்டது, இரவல் வாங்கி வந்திருந்தேன். நேற்று அவரது மறைவு செய்தி வருகிறது, ஆழ்ந்த இரங்கல்.

தமிழ் இலக்கிய உலகில் முக்கியமானதோர் ஆளுமை. யதார்த்தவாதப் பாணியில், கரிசல் மொழியினை உயிரோட்டம் மிக்கவையாகப் புனையப்பட்டவை இவரது புனைவுகள். 

இந்திய மத்திய அரசின் சாகித்திய அமைப்பின் விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றவர். தனது 'கருவேலம் பூக்கள்' கவிதையைத் திரைப்படமாக்கி இயக்கியவர். 'அசுரன்' திரைப்பட மூலக் கதையும் இவருடையதுதான். அது இவரது 'வெக்கை' நாவலின் தழுவல்.

நாவல், சிறுகதை, கவிதை , திரைப்படம் எனப் பன்முக ஆளுமையாளர். தன் வாழ்நாளில் தன் படைப்புகளுக்கான உரிய அங்கீகாரத்தைப் பெற்ற இவர் இயற்பியலில் இளநிலைப் பட்டம் பெற்ற அறிவியல் துறைப்பட்டதாரியும் கூட.


மேலும் சில விக்கிபீடியாத்   தகவல்கள்....

பூலித்துரை மாணிக்கவாசகம் என்பது  இவரது இயற்பெயர். இவரது 'அஞ்ஞாடி' புதினத்துக்கு 2014-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டதும், குறிப்பிடத்தக்கது. சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட திரைப்படம்.
இவரது 'வெக்கை' நாவல் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள  கோவில்பட்டி நகருக்கு மேற்கே உள்ள ஆண்டிபட்டியில்  பிறந்தவர்  பூமணி. தந்தை பூலிததுரை, தாய் தேனம்மை.  இவர், தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது நாவல்கள்

வெக்கை
நைவேத்தியம்
வரப்புகள்
வாய்க்கால்
பிறகு
அஞ்ஞாடி
கொம்மை (புதினம்)

சிறுகதைத் தொகுப்பு

வயிறுகள்
ரீதி
நொறுங்கல்கள்
நல்லநாள்

பெற்ற விருதுகள்

இலக்கியச் சிந்தனை பரிசு.
அக்னி விருது.
திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது.
இலக்கியத்துக்கான பங்களிப்புக்காக 2011-க்கான விஷ்ணுபுரம் விருது.
அஞ்ஞாடி புதினத்திற்கு 2014-இல் சாகித்திய அகாதமி விருது.[2]
விளக்கு விருது.

* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி

No comments:

கனடாவில் தமிழ் முதியவர்கள்!

கனடாவில் வசிக்கும் முதியவர்கள் பற்றிய விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா நண்பர்களே! அவ்வப்போது முதியவர்கள் மாடியிலிருந்து பாய்ந்து தம...