Thursday, July 9, 2026

பல்கலைக்கழகங்களும், பாலியல் வன்முறைகளும்!


அண்மைக்காலமாகப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களால் புரியப்படும் பாலியல் வன்முறைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துச் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன.
இதில் எவ்வளவு தூரம் உண்மை, பொய் என்பது பூரண விசாரணைகளின் பின்புதான் தெரிய வரும்.

 அண்மையில் கூடப் பேராதனைப் பல்கலைககழகத்தில் பேராசிரியர் ஒருவர் இவ்விடயத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுத் தண்டிக்கப்பட்ட செய்திகளை அறிந்திருக்கின்றோம்.

பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அதிகாரம் தலைவிரித்தாடும் அனைத்துத் துறைகளிலும் இந்நிலை இருப்பதை அறிந்திருக்கின்றோம். அரச உதவிகளில் தங்கியிருக்கும் பெண்கள் குறிப்பாக விதவைகள் மீது அவ்வுதவிகளை வழங்குவதற்குப் பொறுப்பான அரசியல் அதிகாரிகளால் பாலியல் ரீதியிலான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதைச் செய்திகள் வாயிலாக அறிந்திருக்கின்றோம். அரசியல்வாதிகளால் இவ்வித அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகச் செய்திகள் வந்ததை அறிந்திருக்கின்றோம். 

இப்பொழுது அதிகமாகப் பல்கலைக்கழகங்களில் இவ்விதமான அழுத்தங்கள் மாணவிகள் மீது பிரயோகிக்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன.
இது ஒரு பாரதூரமான விடயம். பல்கலைக்கழகங்கள் எங்கள் குழந்தைகளின் வாழ்க்கைக்கு அடித்தளமிடும் ஆலயங்கள். இவ்விதமான நிலை ஏற்படுவது சகிக்கப்பட முடியாதது. 

ஊழல் எவ்வளவு தூரம் சமூகத்தை அரிக்கின்றதோ அவ்விதமே இப்பாலியல் ரீதியிலான வன்முறைகளும், அழுத்தங்களும். இவ்விதமான குற்றச்சாட்டுகள் விடயத்தில் பல்கலைக்கழகங்களின் உயர்மட்டங்கள் கடுமையான நடவடிக்கைகளைத் தயவு தாட்சணியமின்றி எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் உடனுக்குடன் முறையீடு செய்யும் பொறிமுறையினை இலகுவாக்குவதுடன், இவ்விடயங்களில் விசாரணைகள் துரிதமாக நடத்தப்பட்டு நீதி கிடைக்கும் நிலையினை ஏற்படுத்த வேண்டும். குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஒருபோதும் இவ்விதமான விடயங்களை மூடி மறைத்துக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் பல்கலைக்கழக உயர் மட்டம் ஈடுபடவே கூடாது.
நாளைய தலைவர்களான இளைய சமுதாயம் நல்லமுறையில் தம் கல்வியினை முடித்து வெளியேறும் நிலையினை உருவாக்க வேண்டியதும் அனைவரினதும் கடமை.

No comments:

யாழ்ப்பாணம் போவோமா?

[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...