Tuesday, July 28, 2026

வ.ந.கிரிதரன் பாடல் - பொறுப்புணர்ந்து செயற்படுவீர்! வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5


வ.ந.கிரிதரன் பாடல் - பொறுப்புணர்ந்து செயற்படுவீர்! 
வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5
டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி 

திரையில் விம்பங்கள் கண்டு புல்லரிக்கின்றீர்.
தரையில் கால்படாத  விம்பங்கள் அறிவீரா?

நிழலை நிஜமாக எண்ணி நடைபோடுகின்றீர்.
நிஜத்தை அறிவதற்கும் ஆர்வமில்லை உமக்கு.
பகுத்தறியும் பண்பற்றுத்  தூங்குகின்றீர் மானிடரே..
தொகுத் துணர்ந்து தெளிவதுதான் எப்போது?

திரையில் விம்பங்கள் கண்டு புல்லரிக்கின்றீர்.
தரையில் கால்படாத  விம்பங்கள் அறிவீரா?

பதவி ஆற்ற பயிற்சி  அவசியம்.
பயிற்சி பெற்றால் பதவி ஆற்றலாம்.
பயிற்சி பெற்றே பதவிக்கு வாருங்கள்.
பதவிக்கு வருவது பயிற்சிக்கு அல்ல.

பகுத்தறியும் பண்பற்றுத்  தூங்குகின்றீர் மானிடரே..
தொகுத் துணர்ந்து தெளிவதுதான் எப்போது?

வசனங்களைப் பேசுவது நடிப்பதற்கு உதவலாம்.
வசனங்கள் மட்டுமே ஆட்சிக்கு போதா.
சனங்களின் வாழ்க்கையில் ஏற்றம் தந்திட
கனல்மிகு வசனங்கள் உதவுவது இல்லை.

பகுத்தறியும் பண்பற்றுத்  தூங்குகின்றீர் மானிடரே..
தொகுத் துணர்ந்து தெளிவதுதான் எப்போது?

பதவி ஆற்ற பயிற்சி  அவசியம்.
பயிற்சி பெற்றால் பதவி ஆற்றலாம்.
பயிற்சி பெற்றே பதவிக்கு  வாருங்கள்.
பதவிக்கு வருவது பயிற்சிக்கு அல்ல.

திரையில் விம்பங்கள் கண்டு புல்லரிக்கின்றீர்.
தரையில் கால்படாத  விம்பங்கள் அறிவீரா?

வருங்காலம் இளையவர் கையில் அறிந்துகொள்ளுங்கள்.
பெரும்பொறுப்பில் இருக்கின்றீர் இளையவரே நீங்கள்.
பொறுப்புணர்ந்து செயற்படுவது வாழ்வில் அவசியமே.
பொறுப்புணர்ந்து செயற்படுவீர்! பாதை சமைப்பீர்.

பகுத்தறியும் பண்பற்றுத்  தூங்குகின்றீர் மானிடரே..
தொகுத் துணர்ந்து தெளிவதுதான் எப்போது?

No comments:

யாழ்ப்பாணம் போவோமா?

[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...