Wednesday, July 15, 2026

எழுத்தாளர் சேவற்கொடியோனின் 'பேசும் பொற் சித்திரமே'


எழுத்தாளர் சேவற்கொடியோனின் 'பேசும் பொற் சித்திரமே' அக்காலகட்டத்தில் நான் விரும்பி வாசித்த விகடன்  தொடர்கதை.  கணவர், மனைவியர்க்கிடையில் ஏற்படும் சந்தேகத்தின் பாதிப்புகளை விவரிக்கும் தொடர்கதை. ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியாகிய தொடர்நாவல்.


அவரது ஏனைய நாவல்களான 'உன் கண்ணில் நீர் வழிந்தால்', 'என் கண்ணில் பாவையன்றோ' ஆகிய நாவல்கள் தொடர்கதைகளாக விகடனில் வெளியானபோது வாசிக்கும் பருவத்தில் நானில்லை.

பல வருடங்களின் பின்னர்தான் எழுத்தாளர் சேவற்கொடியோனும், ஆனந்தவிகடன் ஸ்தாபகர்  வாசனின் மகனான எஸ்.பாலசுப்பிரமணியனும் ஒருவர் என்பதை அறிந்தேன். அக்காலகட்டத்தில் 'பேசும் பொற் சித்திரமே' நாவலின் மூலம் என் மனத்தில் இடம் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் சேவற்கொடியோன்.




இவர்தான் எழுத்தாளர் சேவற்கொடியோன். இயற்பெயர் எஸ்.பாலசுப்பிரமணியன். ஆனந்தவிகடனில் இவர் எழுதிய உன் கண்ணில் நீர் வழிந்தால், என் கண்ணில் பாவையன்றோ & பேசும் பொற் சித்திரமே ஆகிய நாவல்கள் வெளியான காலத்தில் வாசகர்களால் விரும்பி வாசிக்கப்பட்ட நாவல்கள்.
விகடன் முன்னாள் ஆசிரியரும், ஸ்தாபகர் எஸ்.எஸ். வாசனின் மகனுமான இவர் எஸ்.எஸ் பாலன் என்றும் அறிப்படுபவர். அமரராகி விட்டார்.
ஆனந்த விகடனில் முத்திரைக் கதைகளையும், மாணவப் பத்திரிகையாளர் பகுதிகளையும் அறிமுகப்படுத்தியவர் இவரே.










No comments:

ஒரு டொரோண்டோ நகரவாசியின் 'கோல்டென் மைல் மீளமைப்பு' (ReNew Golden Mile) திட்டம் பற்றிய அக்கறை! - வ.ந.கிரிதரன் -

டொரோண்டோ மாநகரசபை அண்மையில் ReNew Golden Mile திட்டம் பற்றிய சுற்றுச் சூழல் மதிப்பீட்டை முடித்திருந்தது. அது பற்றிப் பொதுமக்களின் கருத்துகளை...