Monday, December 27, 2021

பால்ய காலத்து அழியாத கோலங்கள் - ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி' - வ.ந.கிரிதரன் -


என் பால்ய காலத்து வாசிப்பனுபவங்களில் ராணிமுத்துப் பிரசுரங்களுக்கு முக்கியமானதோரிடமுண்டு. நான் ஆர்வமாக வாசிக்கத்தொடங்கியிருந்த காலகட்டத்தில்தான் ராணிமுத்து மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் அடிப்படையில் அக்காலகட்டத்தில் பிரபலமாக விளங்கிய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டு வந்தது. அவ்வகையில் வெளியான முதலாவது நாவல் அகிலனின் 'பொன்மலர்'. ஆனால் அப்புத்தகத்தை அப்பா வாங்கவில்லை. அப்பா வாங்கத்தொடங்கியது ராணிமுத்து பிரசுரத்தின் இரண்டாவது வெளியீட்டில் இருந்துதான். இரண்டாவதாக வெளியான நாவல் அறிஞர் அண்ணாவின் 'பார்வதி பி.ஏ' இவ்விரண்டு நாவல்களும் முதலும் இரண்டும் என்று ஞாபகத்திலுள்ளது. இதன் பின் வெளியான நாவல்களில் எங்களிடம் இருந்ததாக இன்னும் என் நினைவிலுள்ளவை:

எம்ஜிஆர் நினைவாக..


டிசம்பர் 24 எம்ஜிஆரின் நினைவு தினம். எம்ஜிஆர் திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை அவற்றில் இடம் பெறும் ஆரோக்கியமான கருத்துகள் உள்ளடங்கியுள்ள பாடல்கள்தாம். நல்ல கருத்துகளைக் கூறும் அப்பாடல்கள் வாழ்க்கைக்கு மிகவும் உதவும் தன்மை மிக்கவை. வழிகாட்டுபவை.

கனடாவுக்குக் குடிபெயர அரிய சந்தர்ப்பம்! - வ.ந.கி


கனடிய அரசாங்கத்தின் புதிய குடிவரவுத் திட்டங்களின்படி 2021-2023 காலகட்டத்தில் கனடா அரசு 400,000 ற்கும் அதிகமான புதிய குடிவரவாளர்களை வருடாவருடம் உள்வாங்கவுள்ளது. ஏற்கனவே 400,000ற்கும் அதிகமானவர்களை 2021ற்குரிய புதிய குடிவரவாளர்களாக ஏற்றுக்கொண்டு விட்டது. இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தவறாதீர்கள்.
 
மேலதிக விபரங்களுக்கு: https://www.youtube.com/watch?v=d1XmzBOI95k

எனக்குப் பிடித்த வரலாற்றுப் பாத்திரம்! - வ.ந.கிரிதரன் -


ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டு அரசியலில் பெண் ஒருவர் முக்கிய இடத்திலிருந்திருக்கின்றார் என்பதே வியப்பூட்டுவது. சாணக்கியம் நிறைந்த அரசியல் மதியூகியாக, அரசியல் ஆலோசகராக இப்பெண்மணி அன்றே விளங்கியிருக்கின்றார். அப்பெண்மணி யார்? இந்நேரம் நீங்கள் அவர் யாரென்பதை ஊகித்திருப்பீர்கள். அவர்தான் குந்தவைப்பிராட்டியார். முதலாம் இராசராச சோழனின் அக்கா குந்தவைப்பிராட்டியார். பொன்னியின் செல்வன் முதலாம் இராசராசனின் சகோதரியான குந்தவையார்தான் வாணர்குலத்து வீரனும், நாவலின் கதாநாயகனுமான வந்தியத்தேவனின் மனைவியாராகத் திகழ்ந்தவரும் கூட.

Friday, December 17, 2021

அறிமுகம்: வ.ந.கிரிதரனின் நேரம் - யு டியூப் சானல்!


நண்பர்களே! 'வ.ந.கிரிதரனின் நேரம்' என்னும் யு டியூப் 'சான'லொன்றினை ஆரம்பித்துள்ள விடயத்தை ஏற்கனவே அறியத்தந்திருந்தேன். இதுவரையில் அங்கு 15 காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கலை,இலக்கியம், சமூகம், அரசியல் & அறிவியல் எனப் பல்வேறு விடயங்களைப்பற்றிய எனது எண்ணப்பதிவுகளாக அவை இருக்கும். சிறிய காணொளிகளில் அவை அமைந்திருக்கும்.
ஏற்கனவே அவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகள் சிலவற்றை இங்கு பகிர்ந்திருந்தேன். இனியும் பகிர்ந்துகொள்வேன்.

Monday, December 13, 2021

(யு டியூப்) வ.ந.கிரிதரனின் நேரம்: மழையும், நானும்


நண்பர்களே! ஒரு பரீட்சார்த்த முயற்சியாக யு டியூப்பில் ஒரு சானலை ஆரம்பித்துள்ளேன். அதில் முதல் முறையாக ஒரு காணொளியை பதிவேற்றம் செய்துள்ளேன். அவ்வப்போது பல்வேறு விடயங்களைப்பற்றிய என் சிற்றுரைகள் இங்கு இடம் பெறும். என் படைப்புகள் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் இங்கு இடம் பெறும். 

https://www.youtube.com/watch?v=INNoa7GEEAA

இக்காணொளியினை நான் எனது ஐபோன் மூலம் உருவாக்கினேன். முதல் முயற்சியென்பதால் குறைகள் நிச்சயமிருக்கும். காலப்போக்கில் அவை குறைந்து நிறைகள் அதிகரிக்கும். காணொளியைப் பாருங்கள். உங்கள் கருத்துகள் எவையாயினும் அவற்றைப் பதிவு செய்யுங்கள். அவை நிச்சயம் எதிர்காலக் காணொளிகளுக்கு ஆரோக்கியமாக உதவும். நன்றி

கண்ணம்மாக் கவிதை: இருப்புப் பற்றியதோர் உரையாடல் கண்ணம்மாவுடன்! - வ.ந.கிரிதரன் -

காலவெளி பற்றிக் கதைப்பதென்றால், உன்னுடன் கதைப்பதென்றால் களி மிகும் கண்ணம்மா. கூர்ந்த கவனிப்பும், தெளிந்த கருத்துகளும், தேர்ந்த சொற்களும் உன்...

பிரபலமான பதிவுகள்