Wednesday, April 1, 2026
மகாகவி பாரதியார் பாடல் - 'நான்'
எனக்குப் பிடித்த மகாகவி பாரதியாரின் இன்னுமொரு பாடலிது. எனது குரலைப் பாவித்து , இசையமைத்துப் பாடியிருக்கின்றார் செயற்கை நுண்ணறிவாளர் SUNO 5.5. என்னுடன் கூடப் பாடும் பெண் பாடகி 'கணனிச்செல்வி' செயற்கை நுண்ணறிவின் குழந்தை.
மகாகவி பாரதியார் பாடல் - 'நான்'
இசை & வ.ந.கிரிதரனின் குரலில் : SUNO AI ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானிழல் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியிலுள்ள உயிரெலாம் நான்
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உருவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில் நகர் கோபுரம் யாவுமே நான்
Subscribe to:
Comments (Atom)
மகாகவி பாரதியார் பாடல் - 'நான்'
எனக்குப் பிடித்த மகாகவி பாரதியாரின் இன்னுமொரு பாடலிது. எனது குரலைப் பாவித்து , இசையமைத்துப் பாடியிருக்கின்றார் செயற்கை நுண்ணறிவாளர் SUNO 5....
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...