Saturday, November 16, 2019

தொகுப்புகள், சிறப்பு மலர்கள் மற்றும் 'கணையாழி' சஞ்சிகையில் வெளியான எனது படைப்புகள் (ஒரு பதிவுக்காக)

- தொகுப்புகள், சிறப்பு மலர்கள் மற்றும் 'கணையாழி' சஞ்சிகையில் வெளியான எனது படைப்புகள் (ஒரு பதிவுக்காக) -

தொகுப்புகள்:

சிறுகதைகள்
1. சிறுகதை: ஒரு மா(நா) ட்டுப் பிரச்சினை - வ.ந.கிரிதரன் - மித்ர பதிப்பக வெளியிட்ட 'பனியும், பனையும்' சிறுகதைத்தொகுப்பு. புகலிடத்தமிழர்களின் சிறுகதைகளை உள்ளடக்கியது.
2. சிறுகதை: 'சாவித்திரி ஒரு ஶ்ரீலங்கன் அகதியின் குழந்தை' - ஞானம் சஞ்சிகை (இலங்கை) வெளியிட்ட புலம்பெயர்தமிழர்களின் சிறப்பிதழ் (சிறப்பிதழ் என்றாலும் இது தனியான தொகுப்பு நூல்.)
3. அறிவியற் சிறுகதை 'நான் அவனில்லை' - வ.ந.கிரிதரன் - (அமரர் சுஜாதா அறக்கட்டளையும், ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடாத்திய - உலக ரீதியிலான - அறிவியற் சிறுகதைப் போட்டியில் வட அமெரிக்காவுக்கான ரூபா 5000 பரிசினைப் பெற்ற சிறுகதை. ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட அறிவியற் சிறுகதைத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.)

கட்டுரைகள்
1. "அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!" - வ.ந.கிரிதரன் - (வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாண்டு இலக்கியப்பணியினைச் சிறப்பிக்கும் முகமாக வெளியான 'வெங்கட் சாமிநாதன் வாதங்களும் , விவாதங்களும்' தொகுப்பு நூலில் இடம்பெற்ற கட்டுரை)
2. பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன் - 'கணையாழிக் கட்டுரைகள் (1995 - 2000) தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரை.
3.- அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் - கணையாழிக் கட்டுரைகள் (1995 - 2000) தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரை.
4. கணித்தமிழின் விளைவும், பதிவுகளின் உதயமும்! - வ.ந.கிரிதரன் - (எழுத்தாளர் பென்னேஸ்வரன் டெல்லியில் வெளியிட்ட 'வடக்கு வாசல்' சஞ்சிகையின் 'இலக்கிய மலர் 2008' இல் வெளியான கட்டுரை:)
5. 'கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்!' - வ.ந.கிரிதரன் - (ஊடகவியலாளர் செந்தில்நாதனின் ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட தமிழ்க்கொடி 2006 ஆண்டு மலருக்காக எழுதிய கட்டுரை)
6. 'நாவலர் பண்ணை பற்றிய நினைவுகள்' - வ.ந.கிரிதரன் - (அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன் - சொ.அ.டேவிட் ஐயா - சமூக இயல் பதிப்பகம், ஐக்கிய இராச்சியம்

கவிதைகள்
1. கவிதை: நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்' - (எழுத்தாளர் மாலன் இந்திய சாகித்திய அமைப்புக்காகத் தொகுத்த 'புவி எங்கும் தமிழ்க் கவிதை' தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதை.)
2. கவிதை " குதிரைத் திருடர்களே!" - வ.ந.கிரிதரன் - (எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்த சமகால இருமொழிக்கவிதைத்தொகுப்பான a 'Fleeting Infinity (VOL 1) ((கணநேர எல்லையின்மை) அநாமிகா அல்ஃபபெட்ஸ் (Anaaamikaa alphabets) பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. அத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதை.)
3. கவிதை: மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ? - வ.ந.கிரிதரன் - (எழுத்தாளர் யோ.புரட்சி (இலங்கை) தொகுத்த 1000 தமிழ்க் கவிதைகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதை.)

சிறப்பு மலர்களில் வெளியான படைப்புகள்

சிறுகதைகள்
1. 'சொந்தக்காரன்' - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
2. வீட்டைக் கட்டிப்பார் - ஜீவநதி சஞ்சிகை (இலங்கை) வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் (புரட்டாதி 2012) வெளியான சிறுகதை.
3. சிறுகதை: அவன் 'ஐசிஎம்'மில் வேலை செய்கின்றான்! - வ.ந.கிரிதரன் - (- எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகக் கொண்டு , ஆண்டுதோறும் வெளியாகும் இலக்கிய இதழான கூர் 2012' கலை இலக்கிய மலரில் வெளியான சிறுகதை.)

கட்டுரைகள்
1. 'புலம்பெயர்தலும், புலம்பெயர் இலக்கியமும், தமிழரும்'. - வ.ந.கிரிதரன் - (எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகக் கொண்டு ஆண்டுதோறும் வெளியாகும் கூர் 2011(கனடா) இலக்கிய மலரில் வெளியான கட்டுரை:)
2. அ.முத்துலிங்கத்தின் இலக்கியப் பங்களிப்பு பற்றிய குறிப்புகள் - வ.ந.கிரிதரன் - ஞானம் சஞ்சிகை (ஏப்ரல் 2018) வெளியிட்ட 'எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60' சிறப்பு மலரில் இடம் பெற்ற கட்டுரை).
3. அ.ந.கந்தசாமியின் மனக்கண் - வ.ந.கிரிதரன் - தொகுப்பிதழாக வெளியான ழகரம் 5 (ஆனி 2016) இதழில் வெளியான கட்டுரை.
4. புகலிடத் தமிழ் நாவல் முயற்சிகள் - வ.ந.கிரிதரன் - மகுடம் சஞ்சிகை (இலங்கை) வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் (ஏப்ரல் - டிஸம்பர் 2016) வெளியான கட்டுரை.)
5. கனடாத் தமிழ் இலக்கியத்தில் 'தாயகம் (கனடா)\வின் பங்களிப்புப் பற்றியதொரு சுருக்கமான அறிமுகம்! - வ.ந.கிரிதரன் - (- எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகக் கொண்டு , ஆண்டுதோறும் வெளியாகும் இலக்கிய இதழான 'கூர் 2018' இதழில் வெளியான கட்டுரை.)
6. தேவன் (யாழ்ப்பாணம்) - யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கத்தின் வருடாந்தக் கலைவிழாவான 'கலையரசி 2015' நிகழ்வினையொட்டி வெளியான 'கலையரசி' மலரில் வெளியான கட்டுரை.
7.  'ஜான் மார்டெலி'ன் (Yann Martel) 'பை'யின் வாழ்வு (Life Of Pi)! - வ.ந.கிரிதரன் - கனடாத் தமிழ் எழுத்தாளர் இணைய மலர் 'சங்கப்பொழில்' (2015)

கவிதைகள்
1. கவிதை: காலவெளிப்பயணியின் நெடும் பயணம் - வ.ந.கிரிதரன் - ஓவியா பதிப்பக' உரிமையாளரும், எழுத்தாளருமான வதிலைப்பிரபா அவர்கள் வெளியிட்டு வரும் 'மகாகவி' சஞ்சிகையின் 'திசம்பர்' 2017 பன்னாட்டிதற் சிறப்பிதழில் வெளியான கவிதை.

* யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கம் ஆண்டு தோறும் நடாத்தும் கலையரசி கலைவிழாவை முன்னிட்டு , வெளியிடும் கலையரசி சிறப்பு மலரிலும் எனது கட்டுரைகள், சிறுகதை, கவிதை ஆகியன வெளியாகியுள்ளன.

கணையாழி சஞ்சிகையில் வெளியான எனது படைப்புகள்

1. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் (இதே தலைப்பில் வீரகேசரி வாரவெளியீட்டில் ஏறகனவே எனது கட்டுரையொன்று வெளிவந்திருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரை அதே பொருளை
மையமாக வைத்துப் புதிதாக எழுதப்பட்ட கட்டுரை.)
2. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன். (சூழல் பற்றிய கட்டுரை).
3. கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்
4. 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
5. ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன் (கணையாழி மே 2012)
6. கணையாழி அக்டோபர் 2019: தமிழ்நதியின் பார்த்தீனியம் - வ.ந.கிரிதரன் -
7. கணையாழி செப்டம்பர் 2017: கட்டுரை - 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -
8. கணையாழி நவம்பர் 2019: ஆஷா பகேயிஓன் பூமி பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள். - வ.ந.கிரிதரன் -

ngiri2704@rogers.com

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்