Wednesday, May 20, 2020

பத்துநாட்கள் - பத்து திரைப்படங்கள் (1): - சத்யஜித் ரேயின் 'சாருலதா' - வ.ந.கிரிதரன் -


முகநூலில் பத்து நாட்களுக்குத் தொடர்ச்சியாகப் பத்து திரைப்படங்களை  பதிவிட்டு ஞாபகப்படுத்த வேண்டும் என்று நண்பர் பரதன் நவரத்தின் கோரிக்கை விடுத்திருந்தார். அதனையேற்று நாளொன்றுக்கு ஒவ்வொரு திரைப்படம் பற்றிய விபரங்களைப் பதிவு செய்து வருகையில் ஏன்  அத்திரைப்படங்களைப் பதிவுகள் வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தக் கூடாது என்று தோன்றியது. இத்தருணத்தை இயக்குநர் சத்யஜித் ரேயின் திரைப்படங்களில் யு டியூப்பில் கிடைக்கும் அனைத்தையும் பார்ப்பதற்கு முடிவு செய்தேன். அவ்வகையில் முதலாவதாக அறிமுகம் செய்யும் திரைப்படம் அவரது 'சாருலதா' திரைப்படம்.

நல்லதொரு திரைப்படம் எவ்வகையில் அமைந்திருக்க வேண்டுமென்பதற்கு உதாரணங்களாக அமைபவை அவரது திரைப்படங்கள். திரைப்படமொன்றின் இயக்கம், கதை, ஒளிப்பதிவு, நடிப்பு , திரைக்கதை & இசை இவை யாவுமே எவ்விதம் அமைய வேண்டுமென்பதற்கு உதாரணங்களாக அமைபவை அவரது திரைப்படங்கள். பாத்திரங்களுகேற்ற சிறந்த , பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதுடன் அவர்களை எவ்விதம் இயக்க வேண்டுமென்பதை இன்றுள்ள இயக்குநர்கள், சினிமாத்துறைப் பல்வகைக் கலைஞர்களும் அறிந்துகொள்ள வேண்டும்.
சாருலதா ஒரு காவியம். ரவீந்திரநாத் தாகூரின் 'சிதைந்த கூடு' என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம். பார்க்கையில் சிறந்ததொரு கவிதையை வாசிப்பது போன்று சட்டத்துக்குச் சட்டம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் சத்யஜித் ரேய் உலக சினிமாவுக்கு இந்தியா வழங்கிய மாபெரும் கொடை. எழுத்து, இயக்கம், இசையமைப்பு என அவரது பல்வகைத்திறமை வாய்த்தவர்.

ஒன்று மட்டும் நிச்சயம். இந்தப் பத்துப் படங்களையும் பார்த்தீர்களென்றால் முடிவில் உங்களுக்குச் சிறந்த திரைப்படம் பற்றிய புரிதல் (இயக்கம், கதை, ஒளிப்பதிவு, இசை & நடிப்பு போன்றவற்றில்) நிச்சயம் ஏற்படும் என்பது மட்டும் நிச்சயம். எனவே பொழுதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 'சாருலதா'வுக்கான இணைய இணைப்பு : https://www.youtube.com/watch?v=gq3h4jSKWNw&feature=share&fbclid=IwAR0jevRZWuyjPGJO5Q9wto6wMWHcQxabfdcdnEIdSGsas15TWSvZMA3uqH0

திரைக்கதை & இயக்கம்: Satyajit Ray
மூலக்கதை: Rabindranath Tagore
தயாரிப்பு_ R.D.Bansal
இசை: Satyajit Ray
ஒளிப்பதிவு: Subrata Mitra

நடிகர்கள்:
Soumitra Chatterjee,
Madhabi Mukherjee,
Sailen Mukherjee,
Syamal Ghosa

No comments:

'பதிவுகள்.காம்': 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'

எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்  கொண்டு , 2000ஆம் ஆண்டிலிருந்து , 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரக மந்திரத...

பிரபலமான பதிவுகள்