Wednesday, June 2, 2021

சூழல்களை மீறியவர்கள்! - வ.ந.கிரிதரன் -

கார்ல் மார்க்ஸ் வறுமையில் வாடியபோதுதான் மூலதனத்தை எழுதினார். அவரது குழந்தையொன்று இறந்தபோது  கூட வறுமை  அவரை வாட்டியது. இருந்தும் எழுதினார். மூலதனத்தை உலகுக்கு வழங்கினார்.  புகழ் பெற்ற 'முத்து' போன்ற நாவல்களை எழுதி, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஜோன் ஸ்டீன்பெக் வறுமையில் வாடியவர்தான். சார்ள்ஸ் டிக்கன்ஸ் குடும்ப வறுமை காரணமாகப் படிப்பை நிறுத்திப் பல்வேறு வேலைகளைச் செய்தார். மார்க்சிம் கோர்க்கியின் நிலையும் இதுதான். எழுத்தாளர் ப.சிங்காரம் தமிழகத்தில் சிங்கார வாழ்க்கை வாழவில்லை. தான் வாழ்ந்த வாழ்க்கைக்குள் இருந்தவாறே அவரது புகழ்பெற்ற நாவல்களை எழுதினார்.   இலங்கையில் கூட வாழ்க்கை முழுவதும் வறுமையில் வாடிய நிலையில்தான் எழுத்தாளர் அ.செ.முருகானந்தன் எழுதிக்கொண்டிருந்தார். இறுதியில் வறுமை அல்ல முதுமைதான் அதனை நிறுத்தியது. புதுமைப்பித்தனை வறுமை வாட்டியது. இறுதி வரை எழுதிக்கொண்டேயிருந்தார். அவர் அனுபவித்த வறுமையினை அனைவரும் அறிவர். அவ்வறுமையின் மத்தியிலும் அவர் எழுதியவை, மொழிபெயர்த்தவை வியக்க வைப்பவை. விந்தனையும் வறுமை விட்டு விடவில்லை. ஆனால் அது அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. மகாகவி பாரதியாரையும் வறுமை விட்டு வைக்கவில்லை. கூடவே அரசியல்ரீதியிலான நெருக்கடிகள். இவற்றுக்கு மத்தியில்தான் அவர் எழுதிக்குவித்தார். அதுவும் அவர் வாழ்ந்ததோ முப்பத்தொன்பது ஆண்டுகள்தாம்.

இப்படிக் கூறிக்கொண்டே போகலாம். மனிதர்களை அவர்களது இலட்சியங்கள், கனவுகள், விருப்பங்கள், வாசிப்பு போன்றவைதாம் வழி நடாத்துகின்றன. எத்தகைய சூழல்களில் அவர்கள் இருந்தபோதும், வாழ்ந்தபோதும் அவர்களை அவைதாம் வழிநடாத்திச் செல்லுகின்றன. இதனால் தான் வறுமையில் வாடியவர்களால், வாழ்க்கையே போர்க்களமாகப் போர்களுக்கு மத்தியில் வாழ்ந்தவர்களால், சிறைகளில் வாடியவர்களால், விடுதலைப்போராளிகளாகக் காடுகளிலும், மலைகளிலும் மறைந்து போராடியவர்களால் எல்லாம் எழுத முடிந்திருக்கின்றது. ஆனால் பெரும்பாலும், சாதாரண மனிதர்களால் இவ்விதம் செயலாற்ற முடிவதில்லை.

No comments:

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு வழிகாட்டி

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்ல...

பிரபலமான பதிவுகள்