Wednesday, September 28, 2022

கவிதை: வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (7): நாற்பரிமாண ஓவியக் கூறுகள் நாம் கண்ணம்மா!




விரிபெருவெளி!
நாற்பரிமாண ஓவியத்தை இங்கு
வரைந்தவர் யார் கண்ணம்மா!
மேற்பரிமாண ஓவியங்கள்
மேலுமுண்டா கண்ணம்மா!
பற்பலப் பரிமாண ஓவியங்கள்
பல இருப்பின் கண்ணம்மா,
சமாந்தர ஓவியங்களுக்குள்
செல்லும் வழிகள்தாமுண்டா
கண்ணம்மா!
பயணிப்பதற்கு வழிகள்தாமுண்டா
கண்ணம்மா! சொல்லம்மா!
என் கண்ணம்மா!

பெரு
வெளியின் விரிதல்போலென்
சிந்தை விரிவெளிதன் விரிதலில்
முகிழ்க்கும் வினாக்கள் கண்ணம்மா!
உன்னால் அறிந்திட முடிகின்றதா
கண்ணம்மா!
இவ்விதம் இருப்பதில், இவ்விதமெண்ணி
இருப்பதிலுள்ள சுகம் நீ அறிவாய்தானே
கண்ணம்மா!

வினாக்கள்
இவற்றை
இங்கெழுப்பியது முதலில் நீதானே
கண்ணம்மா!
உன் புரிதல் வேறு.
என் புரிதல் வேறு.
ஆயினும்
அவை நாணயமொன்றின்
பக்கங்கள்தாமே கண்ணம்மா.
எனக்கும் தெரியும்,
உனக்கும் புரியும் அது எதுவென்று.
எது அது? அது
ஓவியத்துக்
காட்சிக் கூறுகள் நாமென்பது.
அதுதான் அது.
ஓவியத்துக் கூறுகள் நாம்
ஓடுவதற்கு ஓரிடமுண்டா கண்ணம்மா?
ஒளிவதற்கு ஓரிடமுண்டா கண்ணம்மா?
ஓவியத்தெல்லைகளை
ஓடிக் கடப்பதற்கு
ஓரிடமுண்டா கண்ணம்மா?

நன்றி - https://www.geotamil.com/index.php/2021-02-11-18-02-23/7490-7

No comments:

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (5) - வ.ந.கிரிதரன்-

அத்தியாயம் ஐந்து:   இருப்பின்  புதிரொன்றும் , நங்கையுடனான சந்திப்பும்! "நான் மாதவன். யுனிட் 203இல் வசிப்பவன்.  போஸ்ட்மன் தவறுதலாக உங்கள...

பிரபலமான பதிவுகள்