வ.ந.கிரிதரன் பாடல் - கரியாலை நாகபடுவான் வாவி
வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி
காட்டின் நடுவிலொரு சொர்க்கச் சாவி
கரியாலை நாகபடுவான் என்னும் பெருவாவி.
நாகராம் தமிழரெம் புனிதபூமி அன்றோ!
நம்தமிழர் வரலாற்றின் சின்னம் அன்றோ.
படுவம் என்றால் பள்ளம், நீர்நிலை
படுவான் என்றாலும் பெருவாவி என்றும்
பொருள் உண்டு சங்கப் பாடலில்.
மேற்கு என்றும் மற்றோர் பொருளுமுண்டு.
பெருங்கற் பண்பாட்டுச் சின்னம் என்றே
காட்டின் நடுவிலொரு சொர்க்கச் சாவி
கரியாலை நாகபடுவான் என்னும் பெருவாவி.
மகாதேவா தாம்போது ஊடு சென்றால்
முழங்காவிலில் பல்லவராயன் கட்டு உண்டு
கட்டுக்கு அண்மையில் நாகபடுவான் குளமுண்டு
'கானமோட்டை'க் குளமும் அருகில் உண்டு.
காத்திட , ஆய்ந்திட வேண்டிய சின்னமது.
வரலாற்றை அறிதல் அவசியம் என்பதால்
தொல்லியல் ஆய்வுகள் தொடர்தல் அவசியமே.
தொல்லியல் எங்கள் தொன்மையைக் காட்டுமே.
காட்டின் நடுவிலொரு சொர்க்கச் சாவி
கரியாலை நாகபடுவான் என்னும் பெருவாவி.
1 comment:
www.smtcl-eu.com
Post a Comment