Sunday, December 11, 2022

ஒரு கடிதம்!

அண்மையில் தமிழகத்தில் அமெரிக்கன் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வாளராகவிருக்கும் க.ஆனந்தராஜன் அவர்கள் 'எனது 'குடிவரவாளன்' நாவலைப்பற்றி 'நவீனத் தமிழாய்வு; என்னும் பன்னாட்டுக் காலாண்டு ஆய்விதழில் எழுதிய ஆய்வுக்கட்டுரை பற்றி எழுதியிருந்தேன். அது பற்றி அவர் எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதிலவர் எனது 'அமெரிக்கா', 'குடிவரவாளன்' ஆகிய இரு நாவல்களை மையமாக வைத்துத் தான் முனைவர் பட்ட  ஆய்வு செய்வதாகவும், அமெரிக்கன் கல்லூரியில் எனது அமெரிக்கா நாவல் அமெரிக்கன்  கல்லூரியின் பாடத்திட்டத்திலும் உள்ளதாகவும் எழுதியிருந்தார்.  மகிழ்ச்சி தந்த விடயமிது. அவரது முனைவர் பட்ட ஆய்வு வெற்றியடைய வாழ்த்துகள்.



அவர் அனுப்பிய மின்னஞ்சல் கீழே:

Anantharajan G
Sat, Dec 10 at 2:10 a.m.

ஐயா வணக்கம், நான் எழுதிய ஆய்வுக் கட்டுரையைப் பற்றி தங்களது இணையப் பக்கத்தில் பகிர்ந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்வைத் தந்தது ஐயா. ஆய்வுக்கட்டுரை மட்டுமன்றி தங்களின் அமெரிக்கா மற்றும் குடிவரவாளன் ஆகிய இரு புதினங்களும் எனது முனைவர் பட்ட ஆய்விற்கான நூல்களாக உள்ளன. அதுமட்டுமன்றி, அமெரிக்கா புதினமானது எமது அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையின் பாடத்திட்டத்திலும் உள்ளது ஐயா.


 

 

 




No comments:

எழுத்தாளர்களே! உங்களுக்காகச் சில வார்த்தைகள்!

எழுத்துலக ஆளுமைகள் தம் பக்தகோடிகளை உருவாக்க, வளர்க்கப் பாவிக்கும் முக்கியமான ஐந்து வழிகள்:   1. கோஸ்ட் ரைட்டிங் (Ghost Writing) 2. பிரபலமான...

பிரபலமான பதிவுகள்