Sunday, December 11, 2022

ஆய்வுக்கையேட்டில் வ.ந.கிரிதரனின் An Immigrant நாவல் (குடிவரவாளன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு) !

 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முனைவர்பட்ட  ஆய்வுகள் சம்பந்தமாக உருவாக்கியிருந்த கையேடு ஒன்று  அண்மைய கூகுள் தேடுதலில் என்னைக் கவர்ந்தது. அதற்கான முகவரி: https://www.msuniv.ac.in/images/academic/PhD/English.pdf

பதினைந்து பக்கங்களைக் கொண்ட அக்கையேட்டின் பக்கம் பதின்மூன்றே என் கவனத்தை ஈர்த்த பக்கம். அது புகலிடக் கற்கைநெறிகளைப்பற்றியது. அது ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலிரு பகுதிகளில் புகலிடக்கற்கை நெறி பற்றிய கொள்கை விளக்கங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.  

பகுதி மூன்றில் கவிஞர்கள் மகாகவி, எம்.எ.நுஃமான், சேரன் & ஆகா சாகிட் அலி ஆகியோரின் கவிதைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பகுதி நான்கு சிறுகதைகளைப்பற்றியது. எழுத்தாளர் ஜூம்பாகாகிரியின் படைப்புகள் கவனத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

பகுதி ஐந்து நாவல்களைப்பற்றியது. எழுத்தாளர்கள் இருவரின் நாவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேரி ஆன் மோகன்ராஜின் 'The Stars Change' நாவலும், எனது குடிவரவாளனின் ஆங்கில மொழிபெயர்ப்பான An Immigrant  , எழுத்தாளார் லதா ராமகிருஷணன் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் வெளியான நாவலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

 



No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்