Monday, January 18, 2021

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition



'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல். மேற்படி ஆய்வு நூல் பின்வரும் அத்தியாயங்களைக் கொண்டுள்ளது:

 அத்தியாயம் ஒன்று: 'நல்லூரும் சிங்கை நகரும்'!
அத்தியாயம் இரண்டு: 'நல்லூரும் யாழ்ப்பாணமும்'!
அத்தியாயம் மூன்று: 'நல்லூர் இராஜதானி: வரலாற்றுத் தகவல்கள்!'
அத்தியாயம் நான்கு: 'நல்லூர்க் கந்தசுவாமி கோயில்!'
அத்தியாயம் ஐந்து: 'நல்லூர்க் கோட்டையும் மதில்களும்!'
அத்தியாயம் ஆறு: 'வெளிக்கள ஆய்வுத் தகவல்கள்!'
அத்தியாயம் ஏழு: 'கோட்டைவாசலும், கோட்டையடியும் வெயிலுகந்த பிள்ளையார் ஆலயமும்!'
அத்தியாயம் எட்டு: 'பண்டைய நூல்களும், இந்துக் கட்டடக் கலையும்!"

அத்தியாயம் ஒன்பது: 'இந்துக்களின் நகர அமைப்பும் , சாதியும்!'
அத்தியாயம் பத்து: பண்டைய தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்!
அத்தியாயம் பதினொன்று: 'நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு!'

இந்நூல் மேலதிகமாகப் பின்வரும் கட்டுரைகளையும் உள்ளடக்கியுள்ளது:

1.சிங்கை நகர பற்றிய ஒரு நோக்கு - வ.ந.கிரிதரன்
2. கோப்பாய்ப் பழைய  கோட்டையின் கோலம் - வ.ந.கிரிதரன்
3. கால யந்திரத்தினூடாக நல்லூர்  - காத்யானா அமரசிங்ஹ

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition


நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. 

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் 23 - கிண்டில் பதிப்பு மின்னூலாக, அமேசன் தளத்தில் விற்பனை!

 

நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பாக அமேசன் தளத்தில் விற்பனை!


இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல் 'அமெரிக்கா'. தாயகம் (கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். தற்போது கிண்டில் மின்னூலாக விற்பனைக்கு வந்துள்ளது. இது ஒரு பதிவுகள்.காம் வெளியீடு. 

'அமெரிக்கா' மின்னூல் : https://www.amazon.ca/dp/B08T6186TJ

Friday, January 15, 2021

ebook: Nallur Rajadhani City Layout By Navarartnam Giritharan (V.N.Giritharan) - Kindle Edition


Nallur Rajadhani City Layout By Navaratnam Giritharan (V.N.Giritharan)  | Translation by Latha Ramakrishnan -  Kindle Edition

by Navaratnam Giritharan (Author)  
Nallur Rajadhani's city layout in the fifteenth century - A research paper written in Tamil by Navaratnam Giritharan (V.N.Giritharan) B.Sc (B.E) in Architecture. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.
 

Monday, November 16, 2020

கணையாழியில் வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்!

கணையாழி சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரைகளின் விபரங்களைக் கீழே காணலாம். 
 
1. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் (இதே தலைப்பில் வீரகேசரி வாரவெளியீட்டில் ஏறகனவே எனது கட்டுரையொன்று வெளிவந்திருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரை அதே பொருளை
மையமாக வைத்துப் புதிதாக எழுதப்பட்ட கட்டுரை.)
2. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன். (சூழல் பற்றிய கட்டுரை).
3. கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்
4. கணையாழி டிசம்பர் 2000: 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
5. கணையாழி மே 2012: ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்-
6. கணையாழி அக்டோபர் 2019: தமிழ்நதியின் பார்த்தீனியம் - வ.ந.கிரிதரன் -
7. கணையாழி செப்டம்பர் 2017: கட்டுரை - 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -
8. கணையாழி நவம்பர் 2019: ஆஷா பகேயிஓன் பூமி பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள். - வ.ந.கிரிதரன் -
9. கணையாழி மார்ச் 2020: விநாயக முருகனின் 'ராஜிவ்காந்தி சாலை'
10. கணையாழி ஏப்ரில் 2020: 'பிரமிளின் "காலவெளி": கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'
11. கணையாழி மே 2020: 'பாரதியாரின் சுயசரிதை மற்றும் அவரது முதற் காதல் பற்றி..'

Wednesday, October 28, 2020

பதிவுகள் 25 கட்டுரைகள் (தொகுதி மூன்று) மின்னூலாக இணையக் காப்பகத்தில்...


'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'பதிவுகள் இணைய இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளின் முதலாவது தொகுதி தற்போது மின்னூலாக இணையக் காப்பகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் இணைய இதழில் வெளியான பல்வகைப்படைப்புகளும் (கதைகள், கட்டுரைகள், கவிதைகள் & ஆய்வுக் கட்டுரைகள் போன்ற) மின்னூல்களாக தொடந்தும் ஆவணப்படுத்தப்படும்.

இதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்), கட்டுரைகளின் இரு தொகுதிகள் (82  கட்டுரைகள்) & 27 ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவை இணையக்காப்பகத்தில் (archive.org) மின்னூல்களாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
அவ்வகையில் வெளியாகும் மூன்றாவது கட்டுரைத்தொகுதி இத்தொகுதி.  இதுவரை வெளியான மூன்ற கட்டுரைத் தொகுதிகளிலும் 108 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மின்னூலை வாசிக்க, பதிவிறக்க: https://archive.org/details/pathivukal_collections_3_toc

இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள படைப்புகளின் விபரங்கள் வருமாறு:

புத்தாக்கம் செய்வோம்! பாதிப்புகளைக் குறைப்போம்! இணைந்து வாழ்வோம்!

  காலத்துக்குக் காலம் புதுப் புதுத்  தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் தருணங்களில் சமூக, ஊடகங்களில் புதிய சூழலியற் போராளிகள் உருவாகிவிடுகின்றனர...