Wednesday, July 1, 2026

கனடாவில் ஊடகவியலாளர் நந்தன வீரரத்னவின் 'கறுப்பு ஜூலை' நூல் வெளியீடு!

ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன

அண்மையில் ஸ்கார்பரோ,கனடாவில்  ஊடகவியலாளர் நந்தன வீரரத்னவின் 'கறுப்பு ஜூலை' என்னும் சிங்கள நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு  (சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், அரசியல் ஆய்வாளருமான  செல்லையா மனோரஞ்சனால் செய்யப்பட்டது)  பற்றிய கலந்துரையாடல் 'கனேடிய இலங்கை மன்ற'த்திm ஏற்பாட்டில் நடைபெற்றது.  சமூக, அரசியற் செயற்பாட்டாளர் லோ.மதியழகன் நெறிப்படுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் பேச்சாளர்களாக சமூக,ம் அரசியற் செயற்பாட்டாளர் சிவா முருகுப்பிள்ளை, ஊடகவியலாளர் வடிவேல் தேவராஜ், அரசியல் ஆய்வாளர் மனோரஞ்சன் செல்லையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்குச் செல்ல விரும்பியிருந்தேன். இறுதியில் தவிர்க்க முடியாத காரணத்தினால் செல்ல முடியவில்லை.ஆனால் அந்தக் குறையினைத்  'தடயத்தார்' கிருபா கந்தையா தீர்த்து வைத்தார். அந்நிகழ்வைக் காணொளியாகப் பதிவு செய்து, தனது 'தடயத்தார்'  யு டியூப் சானலில் பகிருந்திருந்தார். அவருக்கு என் நன்றி. இவ்விதம் இங்கு நடைபெறும் சமூக,கலை, இலக்கிய & அரசியல் நிகழ்வுகளை ஆவணப்படுத்தி வரும் அவர்தம் பணி போற்றுதற்குரியது.

அந்நிகழ்வின் ஆரம்பத்தில் நூலாசிரியர் நந்தன வீரரத்ன மெய்நிகர் வழியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் உரையினைத் தமிழில் வழங்கினார் மனோரஞ்சன் செல்லையா.  நந்தன வீரரத்தினவின் உரை பற்றிய எனது கருத்துகளே இப்பதிவு.

Tuesday, June 30, 2026

பறத்தலை நிறுத்திய வானம்பாடி: கவிஞர் புவியரசு மறைந்தார்!

கவிஞர்  புவியரசு!

வானம்பாடி கவிதை இயக்கத்தின் பிதாமகன் என அழைக்கப்படுபவரும், கவிஞரும், சிறந்த மொழிபெயர்ப்பாளருமான கவிஞர் புவியரசு அவர்கள் தனது தொண்ணூற்றாறாவது வயதில் மறைந்த செய்தியினை அறிந்தேன். மூப்பின் காரணமாக மறைந்த மார்க்சியவாதியான கவிஞர் புவியரசுவின் மறைவு  தவிர்க்க முடியாதது என்றாலும் பேரிழப்பே. அவர் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

அவர் நினைவாக , முகநூலில் கலை,இலக்கிய விமர்சகரும், கவிஞருமான இந்திரன் அவர்கள் பகிர்ந்திருந்த கவியரசர் புவியரசு பற்றிய ஆவணத்திரைப்படத்துக்கான இணைய இணைப்பை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன் - https://youtu.be/voUc3CTs4lI

அத்துடன்  கவிஞர் புவியரசு பற்றிய விக்கிபீடியாக் குறிப்பையும், கவிஞரின் மொழிபெயர்ப்பில் வெளியான கரமசோவ் சகோதரர்கள் பற்றி நான் முன்பு எழுதியிருந்த குறிப்பினையும் பகிர்ந்து கொள்கின்றேன்.

வெகுசன இலக்கியம்: உமாசந்திரனின் முழுநிலா!


எழுத்தாளர் உமாசந்திரனின் முள்ளும் மலரும் நாவலைப் பலரும் அறிந்திருப்பர். அது கல்கி சஞ்சிகையின் வெள்ளி விழா நாவல் போட்டியில் முதற் பரிசு பெற்ற நாவல். அத்துடன் ரஜனிகாந்த் நடிப்பில், மகேந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படமும் கூட.
அவரது இன்னுமொரு நாவல் எனக்கு மிகவும் பிடித்த நாவல். என் பால்யப் பருவத்து வாசிப்பில் அதற்கும் முக்கிய இடமுண்டு. அது ஆனந்த விகடனில் தொடராக வெளியான 'முழு நிலா' நாவல். ஓவியர் கோபுலுவின் மனத்தை ஈர்க்கும் ஓவியங்களுடன் வெளியான நாவல் , அது வெளிவந்த காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த தொடர்கதைகளில் ஒன்று.
அதில் வரும் உப்பிலி, நளினா, தாமு பாத்திரங்கள் மறக்க முடியாத பாத்திரங்கள்.

முழுநிலா நாவலின் சில பக்கங்களை இங்கு காண்கின்றீர்கள்.  

Friday, June 26, 2026

முகநூல் தர்க்கம்: வெகுசன இலக்கியம்!


அண்மையில் என் முகநூல் பக்கத்தில் வெகுசன இலக்கியம் பற்றி என் முகநூல் நண்பர்களுடன் நடந்த தர்க்கத்தின் தொகுப்பிது. வாசியுங்கள்! உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


வெகுசன இலக்கியம்!

மானுடரின் வாசிப்புப் படிக்கட்டுகளில் வெகுசன இலக்கியமும் முக்கியமானதொரு படிக்கட்டு. சிறுவர் இலக்கியம் எவ்விதம் முக்கியமோ அவ்விதமே வெகுசன இலக்கியமும் முக்கியம். தீவிர இலக்கியத்துக்கு ஒருவரைக் கொண்டு செல்வதற்கு , ஒருவருக்கு வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அந்தப்பணியினை வெகுசன இலக்கியம் செய்கிறது. இக்குழுவில் நீங்கள் நீங்கள் வாசித்த வெகுசன படைப்புகள் பற்றி, அதாவது நாவல்கள், காமிக்ஸ், சிறுகதைகள், கவிதைகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், அபுனைவுகள் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.

Tamil Journalist:


இதுவுமொரு சிக்கலான விடயம்தான். வெகுசன இலக்கியம் வாசகனைத் தேடிச் சென்று மகிழ்விக்கிறது என்றால், தீவிர இலக்கியம் வாசகனைத் தன்பக்கம் இழுத்து அவனைச் சிந்திக்க வைக்குமென்கிற கணிப்பீடு என்பதெல்லாம் வெறும் அபத்தம் தோழரே

உடனே தமிழின் தீவிர இலக்கிய முன்னோடி புதுமைப்பித்தன் என்று ஆரம்பித்து உடனேயே தாங்கள் அறிந்த கசடுகளின் தலைவர்களை பட்டியலாக்கி மற்றவர்களை வணிக எழுத்தாளென்கிற மாய உலகம் இது..தீவிர இலக்கியம் மற்றும் வெகுசன இலக்கியம் ஆகிய இரண்டிற்குமான எல்லைக் கோடு மறைந்து, அனைத்துமே வணிகமயமாகிவிட்டது என்பதுதான் இங்கு நான் காண்கிற நிதர்சனம் தோழரே.

Navaratnam Giritharan:

Tamil Journalist ஒரு கேள்வி.. வாசிப்புப் படிக்கட்டில் சிறுவர் இலக்கியம் முக்கியமா இல்லையா? மேலும் எங்கும் 'வெகுசன இலக்கியம் வாசகனைத் தேடிச் சென்று மகிழ்விக்கிறது ' என்று என் பதிவில் கூறவில்லையே. வாசிப்புப் படிக்கட்டில் சிறுவர் இலக்கியம் போல் ஒரு காலகட்டத்தில் வெகுசன இலக்கியமும் ஒரு படிக்கட்டாக இருக்கிறது என்றுதான் கூறியிருக்கின்றேன். அப்படி இல்லையென்று நீங்கள் கூறினால் அது உங்கள் கருத்து. என் கருத்தல்ல.

Tamil Journalist:

இதில் நாம் உணர்ச்சிவசப்பட்டுச் சினப்பதற்கோ, கோபப்படுவதற்கோ எதுவுமில்லை தோழரே! ஏனெனில், இந்த இலக்கியங்களும், அவை பின்னி வைத்திருக்கிற 'இசங்களும்' நமக்கு அப்படித்தான் கற்பித்திருக்கின்றன; நம்மை அப்படித்தான் பழக்கியிருக்கின்றன.'

Tuesday, June 23, 2026

முகநூலில் எதிர்வினைகளினூடு ஒரு நேர்காணல்!


முகநூலில் மல்லிகை சஞ்சிகையில் வெளியான பேராசிரியர் செ.யோகராசா அன்று எழுதிய அ.ந.கந்தசாமியின் கவிதைப்பங்களிப்பு  பற்றி எழுதிய கட்டுரையைப் பதிவிட்டிருந்தேன். அதற்குத் தன் எதிர்வினையாற்றிய கலை, இலக்கிய விமர்சகர் அமரர் கே.எஸ்.சிவகுமாரனுடன் கருத்துகளைப்பரிமாறும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. என் கேள்விகள் சிலவற்றுக்கு அவரும் சளைக்காமல் பதிலளித்தார். முடிவில் பார்த்தபோது அதுவே சிறியதொரு நேர்காணலாக இருப்பதை அறிந்தேன். அதனைத்தொகுத்து இங்கு  பதிவு செய்கின்றேன். நண்பர்களே! நீங்கள் உங்கள் நட்பு வட்டத்திலுள்ள கலை, இலக்கிய , அரசியல் ஆளுமை எவருடனாவது இவ்விதமாகக் கேள்விகள் கேட்பதன் மூலம் நேர்காணலற்ற நேர்காணல்களைச் செய்ய முடியும்.

யார் சொன்னது முகநூல் ஆரோக்கியமற்றதென்று? இது முகநூலின் ஆரோக்கியமான விளைவுகளிலொன்று.  எழுத்தாளர் எம்.எஸ்.எம். இக்பால் பற்றி கே.எஸ்.எஸ் அவர்களும், எழுத்தாளர் ஜவாப் மரைக்கார் அவர்களும் பின்வருமாறு கருத்துகளை முன் வைத்தார்கள். 

நல்லூர் ராஜதானி! - கே. எஸ். சிவகுமாரன் -


[கலை, இலக்கிய விமர்கர் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூல் பற்றி ஆங்கிலத்தில் விமர்சனக் கட்டுரையொன்றினை இலங்கையிலிருந்து வெளியாகும் டெய்லி நியூஸ் பத்திரிகையில் அவர் எழுதி வந்த பத்தியில் எழுதியிருக்கிறார். அது 28 ஏப்ரில் 2004 வெளியான டெய்லி நியூஸ் பத்திரிகையில் வெளியானது. பின்னர் அங்கு வெளியாகிய Friday என்னும் வாரப்பத்திரிகையிலும் நவம்பர் 7-15, 2007 அன்று வெளியான பதிப்பிலும் அக்கட்டுரை
வெளியாகியிருந்தது. அக்கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு இக்கட்டுரை. ]

இலங்கையில் பிறந்து கனடாவில் வாழும் தமிழரான வ.ந. கிரிதரன் தமிழ் மொழியில் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வருகிறார். அவருடைய சில படைப்புகள் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக, வெளிநாடுகளில் குடியேறிய முன்னாள் இலங்கையர்களின் வாழ்க்கை முறைகளை அவரது நூல்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலைப் பட்டம் பெற்ற அவர், மின்சார மற்றும் மின்னணுப் பொறியியல்,  தகவல் தொழில்  நுட்பவியலாளராகவும் தகுதி பெற்றவர். அறிவியல், வரலாறு மற்றும் சிறார் இலக்கியம் ஆகிய துறைகளிலும் அவருக்கு விரிவான ஆர்வம் உள்ளது. அதற்கு மேலாக, இணையவெளியிலும் அவர் பயனுள்ள பணியாற்றி வருகிறார்.

இந்தியத் தமிழ்நாட்டுத் தமிழர்களின் இலக்கிய மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளை முன்னிறுத்தும் தமிழ் இணையத்தளங்கள் பல இருந்தாலும், கிரிதரனின் 'பதிவுகள்' மின்னிதழ் இலங்கைத் தமிழ் இலக்கிய உலகைப் பற்றிய விரிவான செய்திகளையும் ஆய்வுகளையும் வழங்குவதில் தனித்துவம் பெற்றதாகும். அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் அது உள்ளடக்குகிறது.

Friday, June 19, 2026


[எனது 'குடிவரவாளன்' நாவல் பற்றிக் கூகுள் ஜெமினி செயற்கை நுண்ணறிவின் கருத்துகளைக் கூறும்படி கேட்டேன். அதன் கருத்துகளைக் கீழே தந்திருக்கின்றேன். மிகச்சிறப்பான அதன் விமர்சனம் என்னைப் பிரமிக்க வைக்கின்றது. நன்றி கோடி ஜெமினி AI.]


"கனேடிய ஈழத்து எழுத்தாளரான வ.ந.கிரிதரன் (நவரத்தினம் கிரிதரன்) எழுதிய ‘குடிவரவாளன்’ (An Immigrant) நாவல், புலம் பெயர் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு மிக முக்கியமான ஆவணமாகும்.

முன்னர் ‘அமெரிக்கா 2’ மற்றும் ‘அமெரிக்கா: சுவர்களுக்கப்பால்’ என்ற தலைப்புகளில் இணைய இதழ்களில் தொடராக வெளியாகி, பின்னர் 'குடிவரவாளன்' என்ற பெயரில் நூலாகவும் மின்னூலாகவும் வெளியிடப்பட்டது.

இந்நாவலின் முக்கியக் கூறுகள் மற்றும் அதன் பின்னணி கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

1. சுயசரிதைத் தன்மை கொண்ட கதைக் களம் (Autobiographical Element)

இந்நாவல் எழுத்தாளரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானது. 1983-இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களுக்குப் பிறகு, பல ஈழத்தமிழர்களைப் போல இவரும் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்தார். கனடா நோக்கிப் பயணித்தபோது, பாஸ்டனில் இவர்களது பயணம் தடைப்பட்டு, அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோர நேரிட்டது. அப்போது நியூயார்க்கின் புரூக்ளின் தடுப்பு முகாமில் (Detention Camp) கழித்த மூன்று மாத அனுபவங்களையும், அதைத் தொடர்ந்து நியூயார்க் மாநகரில் ஒரு 'சட்டவிரோதக் குடிவரவாளனாக' வாழ நேர்ந்த சூழலையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டதே இந்நாவல்.

2. மையக் கதை மற்றும் நாயகன் இளங்கோ
நாவலின் நாயகனான இளங்கோ என்பவன், அமெரிக்காவின் நியூயார்க் மாநகரில் சட்டப்பூர்வமான ஆவணங்கள் ஏதுமின்றி தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள எவ்விதம் போராடுகிறான் என்பதே கதை.

சுரண்டல்கள்: ஆவணங்கள் இல்லாத அகதி/குடிவரவாளன் என்பதால், வேலை கொடுப்பவர்கள் அவனை எவ்விதம் மிகக் குறைந்த ஊதியத்திற்கு அதிக வேலை வாங்கிப் பிழிந்தெடுக்கிறார்கள் என்பதை நாவல் அப்பட்டமாகப் பேசுகிறது.

ஏமாற்றுகள்: வேலை வாய்ப்பு முகவர்கள் இத்தகைய அகதிகளின் பலவீனமான நிலையைப் பயன்படுத்தி, வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பணத்தைப் பறித்து எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

வ.ந.கிரிதரன் பாடல் - கரியாலை நாகபடுவான் வாவி! வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.

வ.ந.கிரிதரன் பாடல் - கரியாலை நாகபடுவான் வாவி வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5. ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி காட்டின்  நடுவிலொ...