பிரபஞ்சன்
அவர்கள் 'ஜெயித்த கதை' கட்டுரையின் இறுதியில் 'என் விருப்பமெல்லாம் ,
எழுத்தைப் போலவே , என் மரணமும் கெளரவமாக இருக்க வேண்டும் என்பதுதான்' என்று
குறிப்பிட்டிருந்தார். அவரது ஆசை அவரது மரணத்தில் நிறைவேறியுள்ளது.
நீண்ட காலத்துக்குப் பிறகு எழுத்தாளர் ஒருவருக்கு உரிய மரியாதைகொடுத்து
அவரது இறுதி அஞ்சலியை நடாத்தியதற்காகப் புதுவை மாநில அரசையும், அதன்
முதல்வரையும் பாராட்டுகின்றேன்.
தம் வாழ்நாளெல்லாம் தம் எழுத்தால் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களைப் பொதுவாக மாநில அரசுகள் கவனிப்பதில்லை. இந்நிலையில் அரச மரியாதையுடன் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு இறுதி அஞ்சலியினைச் செய்ததன் மூலம் புதுவை மாநில அரசு உயர்ந்து நிற்கிறது. தமிழக அரசும், ஏனைய மாநில அரசுகளும் இம் முன்மாதிரியைப் பின்பற்றட்டும். எழுத்தாளர்கள் வாழும் காலத்திலேயே அவர்களது படைப்புகளை இலகுவாக வெளியிடும் வகையிலான திட்டங்கள் பலவற்றை உருவாக்கட்டும். நூலகங்கள் இலகுவாக அவர்கள்தம் நூல்களை வாங்கும் திட்டங்களை உருவாக்கட்டும். எழுத்தாளர்களின் நூல்களுக்குக் கொடுக்க வேண்டிய நூலுரிமைப்பணத்தை உரிய முறையில் கொடுப்பதை உறுதி செய்யும் திட்டங்களை உருவாக்கட்டும்.
எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி இறந்தபோது ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அவரை வழியனுப்பியதை இத்தருணத்தில் நினைவு கூர்கின்றேன். தமிழ் மக்களும் எழுத்தாளர்களை மதிக்கும் பண்பினை வளர்த்துக்கொள்ள வேண்டும். மக்களுக்காக இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் அதற்கு முற்றிலும் உரித்துடையவர்களே.

No comments:
Post a Comment