Friday, October 11, 2019

டாக்டர் க.இந்திரகுமார் பற்றி....

அண்மையில் டாக்டர் க. இந்திரகுமார் பற்றிய எழுத்தாளர் த.இளங்கோவனின் பதிவொன்று அவரைப்பற்றிய நினைவலைகளை மீட்டி விட்டது. டாக்டர் க.இந்திரகுமார் என்றதும் உடனே என் நினைவுக்கு வருபவை எழுபதுகளில் வீரகேசரியில் 'மண்ணில் இருந்து விண்ணிற்கு' என்னும் தலைப்பில் அவர் எழுதிய விண்வெளி ஆய்வுகள் பற்றிய தொடர் கட்டுரைகளும், 'மண்ணில் இருந்து விண்ணிற்கு' என்னும் தலைப்பில் வீரகேசரி பிரசுரமாக வெளியான அவரது மேற்படி கட்டுரைகளின் தொகுப்பும்தான். இந்நூலுக்கு இலங்கை அரசின் சாகித்திய விருதும் கிடைத்துள்ளது. 

இவரது 'விண்வெளியில் வீரகாவியங்கள்' தினகரனில் தொடராக வெளியாகி, நூலுருப்பெற்றபோது தமிழக அரசின் விருதினையும் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


எழுத்தாளராக குறிப்பாக அறிவியல் விடயங்களைப்பற்றி எழுதிய எழுத்தாளராக, நடிகராக ('வாடைக்காற்று' -ஈழத்துத்திரைப்படம்; செங்கையாழியானின் நாவலான வாடைக்காற்றின் திரை வடிவம்), ஊடகவியலாளராக அவர் பன்முகத்திறமை வாய்ந்தவராக விளங்கியபோதும், என்னைப்போறுத்தவரையில் இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுதி வளம் சேர்த்த முக்கிய படைப்பாளியாகவே அவரை நான் கணிப்பிடுவேன்.

'மண்ணில் இருந்து விண்ணிற்கு' நூல்
இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் அறிவியற் துறைக்கு வளம் சேர்த்த பத்திரிகையான, வீரகேசரி வெளியிட்ட 'நவீன விஞ்ஞானி' அறிவியற் பத்திரிகையும் இவ்வகையில் முக்கியமானது.

தொண்ணூறுகளில் 'வானியற்பியல்' துறையில் நான் எழுதிய சார்பியற் தத்துவம், கரும் ஈர்ப்பு மையங்கள் (Black Holes) போன்றவை பற்றி கட்டுரைகளையும் வீரகேசரி வெளியிட்டதையும் இத்தழ்ருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன். அவற்றை வெளியிட்ட அன்று வீரகேசரி ஆசிரியராகவிருந்த ஆ.சிவநேசச்செல்வன் அவர்களையும் கூடவே நினைவு கூர்கின்றேன்.

டாக்டர் க.இந்திரகுமாரின் 'மண்ணில் இருந்து விண்ணிற்கு' நூலை 'நூலகம்' தளத்தில் வாசிக்கலாம். முகவரி: http://noolaham.net/project/72/7145/7145.pdf

முகநூல் எதிர்வினைகள் சில:
 Jeyan Deva இந்திரகுமாரின் கட்டுரைகளை சிந்தாமணியில் படித்ததாக ஞாபகம்..
    • Giritharan Navaratnam மேற்படி நூல் வீரகேசரியில் இதே பெயரில் தொடராக வெளியாகி வீரகேசரி பிரசுரமாக வெளியானது ஜெயன். இதற்குச் சாகித்திய (இலங்கை) விருதும் கிடைத்தது. இவரது 'விண்வெளியில் வீரகாவியங்கள்' தினகரனில் தொடராக வெளியாகி, நூலுருப்பெற்றபோது தமிழக அரசின் விருதினையும் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 'சிந்தாமணி'யிலும் இவரது கட்டுரைகள் வெளியாகியிருக்கலாம். ஞாபகத்திலில்லை. 'நவீன விஞ்ஞானி' பத்திரிகையிலும் இவரது கட்டுரைகள் வெளிவந்ததாக நினைவுண்டு.
  • Sivanesaselvan Arumugam Good personality
  • எம் எம் நெளஷாத் நூலை அப்போது நான் வாசித்தேன்

    Manoharan Periyasamy Manoharan Periyasamy எழுபதுகளில் வாசித்த ஞாபகம்.வீரகேசரி...சிந்தாமணியா சரியாக ஞாபகம் இல்லை.
  • Vadakovay Varatha Rajan உங்கள் பிரபஞ்சம் , விண்வெளி ஆகியவை பற்றிய கவிதைகள் , கட்டுரைகளை நான் முகநூலில் படித்து இரசித்தேன்
  • Shadagopan Ramiah எங்களை எழுத்து உலகுக்கு தூண்டியவர்.... இலங்கையின் சுஜாதா

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்