Saturday, March 14, 2020

உள்ளங் கவர்ந்த கானங்கள்: "வாழ்க்கை ஒரு ஒட்டகம்; நொண்டி ஒட்டகம்"


"வாழ்க்கை ஒரு ஒட்டகம்
நொண்டி ஒட்டகம்
வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்" - கவிஞர் விவேக் வேல்முருகன் -

வாழ்க்கையை நொண்டி ஒட்டகத்துக்கு உருவகிக்கும் கவிஞரின் கவித்துவம் இப்பாடலின் முதல் வரியிலேயே என்னைக் கவர்து விட்டது.

பாடகர் பென்னி தயாலின் குரலை ஏற்கனவே விஜயின் 'அழகிய தமிழ் மக'னில் கேட்டு இரசித்தவன். இப்பொழுதெல்லாம் புற்றீசல்கள்போல் தமிழ்த்திரைப்படங்கள் வெளிவருவதால் எல்லாவற்றையும் பார்க்க முடிவதில்லை. அன்று வருடத்துக்கு வெளியாகும் தமிழ்த்திரைப்படங்கள் எல்லாமே நினைவில் நிற்கும். அவற்றின் நடிகர்களும் , பாடகர்களும் நினைவில் நிற்பார்கள். ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல. யார் பாடினார்? எந்தப் படத்தில் பாடல் இடம் பெற்றது? யார் நடித்தது? ஒன்றுமே தெரிவதில்லை. இதற்குத் தலைமுறை இடைவெளி முக்கிய காரணமென்று நினைக்கின்றேன் :-) 
இதனால் எனக்குப் பிடித்த பாடல்களைக் கேட்கையில் அவை இடம் பெற்றுள்ள திரைப்படங்களின் கதைக்களனை அவற்றின் விக்கிபீடியாவிலுள்ள ஆங்கிலப்பக்கங்கள் மூலம் அறிந்துகொள்வேன். தமிழ் விக்கிபீடியாப் பக்கங்களில் அவை பற்றிய விரிவான பக்கங்களைக் காண முடியாது. 'ஆண்டவன் கட்டளை' (2016) திரைப்படக் கதையினையும் அவ்வாறே அறிந்துகொண்டேன்.

இப்பாடல் எனக்குப் பிடித்திருப்பதற்கு முக்கிய காரணங்களாக பிடித்த நடிகர்களான விஜய் சேதுபதி, யோகிபாபு, நாசர் இவர்களின் சிறப்பான நடிப்புடன், கிருஷ்ணகுமாரின் இசையுடன், பாடகர் பென்னி தயாலின் குரலுடன், விவேக் வேல்முருகனின் பேச்சுத்தமிழில் கவித்துவம் மிளிரும் பாடலைப்புனைந்துள்ள கவிஞர் விவேக் வேல்முருகனின் படைப்பாற்றலுடன், இன்னுமொன்றினையும் கூறுவேன். அது பாடல் பாடலுடன் பாத்திரங்களின் ஆளுமைகளை, அவர்கள்தம் வாழ்கையின் சமூக, பொருளியல் அம்சங்களை, வாழும் நகரச் சூழலினை இப்பாடல் சிறப்பாக வெளிப்படுத்துகின்றது. அதற்காக ஒளிப்பதிவாளர் என்.சண்முக சுந்தரத்தையும், 'எடிட்டர்' அனுசரனையும் பாராட்ட வேண்டும். பாடலின் இடையிடையே வரும் சிறப்பான வசனங்களுகாகத் திரைக்கதை வசனகர்த்தாக்களையும் பாராட்ட வேண்டும். பாடலைக் கேட்கையில், பார்க்கையில் ஒரு நல்லதொரு நாவலொன்றினை முழுமையாக வாசித்த இன்பம் எனக்கு ஏற்பட்டது.

படம்: ஆண்டவன் கட்டளை பாராட்ட வேண்டும்.
பாடல் வரிகள்: விவேக் வேல்முருகன்
இசை: k ((கிருஷ்ணகுமார்)
பாடகர்: பென்னி தயால்
நடிப்பு: விஜய் சேதுபதி, நாசர் & யோகிபாபு


பாடல் முழுமையாக:
 
 

வாழ்க்கை ஒரு ஒட்டகம்
நொண்டி ஒட்டகம்
வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்
பாயும் பையன் புத்தியில்
நேர்மை பசை ஒட்டணும்
வேல தரும் சட்டியில்
வேர்வை மழை சொட்டனும்
கால் வயத்துல நிம்மதி கொட்டணும்
வாழ்க்கை ஒரு ஒட்டகம்
நொண்டி ஒட்டகம்
வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்

ஊர் போச்சுங்க தூரமா
வீடும் இல்ல சொந்தமா
இங்க எல்லாம் பத்து நாள் வாரமா
பிரம்மாண்ட திண்ணயா
திண்ணயா
பயம் காட்டும் சென்னையா
சென்னையா
இருந்தாலும் உழைப்போம் உண்மையா
நோட்டு பட்டி வைக்குமே அந்த முந்திபோவோம்
அசந்தா கன்னி வைக்குமே
அதில் சிக்கவே மாட்டோம்
வாழ்க்கை ஒரு ஒட்டகம்
நொண்டி ஒட்டகம்
வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்

ஓடும் கடிகாரமே நாங்க வரும் நேரமே
பாத்து சரியாகவே மாறுமே
எதுவும் இல்ல பாரமே
முதுகில் ஒரு ஓரமே
கழுதை கூட ஜாலியா ஏறுமே
வா நீ இந்த வேலைய கொஞ்சம்
செஞ்சு பாரு
வேணும் ஆடு மந்தையா இங்க
ஒத்தைக்கு நூறு
வாழ்க்கை ஒரு ஒட்டகம்
நொண்டி ஒட்டகம்
வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்
பாயும் பையன் புத்தியில்
நேர்மை பசை ஒட்டணும்
வேல தரும் சட்டியில்
வேர்வை மழை சொட்டனும்
கால் வயத்துல நிம்மதி கொட்டணும்
வாழ்க்கை ஒரு ஒட்டகம்
நொண்டி ஒட்டகம்
வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்
வாழ்க்கை ஒரு ஒட்டகம்
நொண்டி ஒட்டகம்
வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்

No comments:

கனடாவில் வெளியான முதலாவது நாவல் , கவிதைத்தொகுப்புகள் பற்றி...

அண்மையில் 'டொராண்டோ'வில் ஊடறு மற்றும் தேடகம் ஏற்பாட்டில் நடைபெற்ற மலையகா நிகழ்வினை நெறிப்படுத்திய எழுத்தாளர் பா.அ.ஜயகரன் சமூகச் செய...

பிரபலமான பதிவுகள்