Wednesday, March 18, 2020

அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'யூத -அரபு உறவு பற்றி பேட்ரண்ட் ரஸல்' என்னும் 'இன்ஸான்' பத்திரிகைக் கட்டுரை பற்றி..

அறிஞர்  அ.ந.கந்தசாமி அவர்கள் இன்ஸான் பத்திரிகையில் 'யூத -அரபு  பற்றி பேட்ரண்ட் ரஸல்'என்றொரு கட்டுரையினை எழுதியுள்ளார். அக்கட்டுரையானது இன்ஸான் பத்திரிகையில் 21.7,1967 , 28.7.1967 ஆகிய திகதிகளில் 'யூத - அரபு உறவு பற்றி பேட்ரண்ட் ரஸல்' என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது.  பேட்ரண்ட் ரஸலின் நூல்களிலிருந்து யூத அராபிய உறவு பற்றிய பேட்ரண்ட் ரஸலின் கருத்துகளை ஆராய்ந்து அ.ந.க எழுதிய கட்டுரை.

இக்கட்டுரை இன்ஸான் பத்திரிகையில் இரண்டு பகுதிகளாக இரு வாரங்கள் வெளியாகியுள்ளது. இக்கட்டுரை பற்றி அந்தனி ஜீவா அவர்கள் தினகரன் பத்திரிகையில் அ.ந.கந்தசாமி பற்றி எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத்தொடரில் (தினகரன் வாரமஞ்சரியில் 12-02-1984 அன்றிலிருந்து தொடராக வெளிவந்த கட்டுரைத் தொடர்) "அ.ந.க. அறிஞர் பெர்னாட்ஷா முதல் பேரறிஞர் பெட்ரண்ட் ரஸ்ஸல் வரை அறிந்து வைத்திருந்தார். பெட்ரண்ட் ரஸ்ஸலின் 'யூத அராபிய உறவுகள்' என்ற கட்டுரைத் தொடர் ஒன்றை 'இன்ஸான்' வார இதழில் தொடர்ந்து எழுதினார். " என்று கூறுவார்.  உண்மையில் பெட்ரண்ட் ரஸலின் யூத அராபிய உறவுகள் என்பதற்குப் பதிலாக 'யூத அரபு உறவு பற்றி பேட்ரண்ட் ரஸல் ' என்றிருக்க வேண்டும். 'பெட்ரண்ட் ரஸ்ஸலின் 'யூத அராபிய உறவுகள்' பேட்ரண்ட் ரஸலின் 'யூத அராபிய உறவுகள்' என்னுமொரு கட்டுரை பற்றிய அ.ந.கந்தசாமியின்  கட்டுரையாக அதனை விளங்கிக்கொள்ளும் அபாயமுண்டு.




இக்கட்டுரையில் கட்டுரையாசிரியர் அ.ந.கந்தசாமி பற்றிய அறிமுகக் குறிப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "இக்கட்டுரையாசிரியர் அ.ந.கந்தசாமியை அறிமுகப்படுத்துவது அதிகப்பிரசங்கித்தனமாகும். அவர் பிரபல நாடகாசிரியர். நாடகாசிரியர் மட்டுமல்ல , சிறந்த நாவலாசிரியரும் கூட. அண்மையில் பிரசுரமான அவருடைய மனக்கண் என்ற நாவல் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் அபிமானத்தை பெற்றது. அவர் கவிஞர்; கலை இலக்கிய விமர்சகர்; சிறுகதாசிரியர். தமிழில் அவர் தொடாத துறை கிடையாது. வெற்றியின் இரகசியங்கள் என்ற அவருடைய நூலை சென்னை பாரி நிலையத்தினர் வெளியிட்டிருக்கின்றனர். ஆங்கிலத்திலும் , தமிழிலும் சிறந்த பத்திரிகையாளரான அ.ந.கந்தசாமி, வீரகேசரி, டிரிபியூன், சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளில் கடமையாற்றியிருக்கின்றார். இலங்கை அரசாங்க செய்தி இலாக்காவில் கடமையாற்றி இளைப்பாறியுள்ள அ.ந.கந்தசாமி எழுதும் கட்டுரைத்தொடர் இன்ஸான் வாசகர்களை பெரிதும் ஈர்க்கும் என்று நம்புகின்றோம்."



இக்கட்டுரையின் இரு பகுதிகளையும் அலைபேசி மூலம் புகைப்படமாக்கி அனுப்பி வைத்த எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் (Jawad Maraikar) அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி.

No comments:

'எனது குழந்தைகள்' கவிதை பற்றி...

'புதுசு' சஞ்சிகையின் ஜூலை 1984 இதழில் வெளியான கவிதை இது. துஷ்யந்தன் எழுதியது. இந்தக் கவிதையை வாசித்தபோது குறிப்பாக 'யுத்தத் தாங்...

பிரபலமான பதிவுகள்