Friday, March 13, 2020

காற்றினிலே வரும் கீதம்: "எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று"

"எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று   
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு   
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு  "
- கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவுக்குத் தேசிய விருது பெற்றுக்கொடுத்த இன்னுமொரு பாடல்.  ஒரு கவிஞரின் வரிகளுக்கு விருதுகளைப்பெற்றுக் கொடுப்பவை அவரது வரிகள் மட்டுமல்ல. அதனைப்பாடிய பாடகர்களின் குரல்கள், இசை, ஒளிப்பதிவு & நடிப்பு எல்லாமேதாம்.

இப்பாடலினை இருவர் பாடியிருந்தாலும் , பாடலின் அதிக பகுதியை எடுத்துக் கொண்டிருப்பவர் பாடகி சின்மயி. சின்மயி தற்போதுள்ள பாடகிகளில் மிகச்சிறந்த பாடகியாக நான் உணர்வதுண்டு. அதற்குக் காரணம் வரிகளை உள்வாங்கி, உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தும் குரல் அவருடையது. கேட்டுப்பாருங்கள். நெஞ்சைக் கிழித்துக்கொண்டு அதன ஆழத்துக்கே செல்லும் குரல் சின்மயினுடையது.
இப்பாடல் பலவகைகளிலும் சிறந்து விளங்குகின்றது. யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாடல் காட்சிகளை உருவாக்கியிருக்கும் உயிர்த்துடிப்புள்ள, இயற்கை வளம் கொழிக்கும் ஒளிப்பதிவு, விஜய் சேதுபதி & தமன்னாவின் நடிப்பு எல்லாமே நெஞ்ச வசியப்படுத்திக் கட்டிப்போட்டு விடுவன. மன அழுத்தங்களிலிருந்து விடுபட வைக்கும் தன்மை மிக்கவை.

தனக்குத் தன்  குரல் மூலம் இவ்விருது பெறக்  காரணமாகவிருந்த பாடகி சின்மயிக்கு எவ்விதம் கவிஞர் வைரமுத்துவினால் பாலியல் தொல்லைகளைக் கொடுக்க முடிந்தது? 

  

ஒரு கேள்வி இப்பாடலில் வரும் 'ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு' என்னும் வரி 'ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு' என்பதா அல்லது 'ஒரு காதல் தோல்வி காணும் போதும் காரல் உண்டு' என்பதா? எனக்குக் காரல் என்றும் கேட்கின்றது. காரல் என்றும் கேட்கின்றது. உங்களுக்கு எப்படிக் கேட்கின்றது. காரலை விடக் காதலே எனக்கு மிகவும் பொருத்தமாகப் படுவதால் அச்சொல்லையே இங்கு பாவித்துள்ளேன் :-)  காதலில் தோல்வியுற்றாலும் காதல் போய்விடுவதில்லை. இறுதி வரை இருந்து விடும் உணர்வு அது. அதனாலதான் 'ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு' என்பது எனக்கு மிகவும் பொருத்தமாகப்படுகின்றது.

படம்: தர்மதுரை
பாடகர்கள்: சின்மயி சிறிபாத * ராகுல் நம்பியார்
பாடல் வரிகள்: கவிஞர் வைரமுத்து
இசை: யுவன் சங்கர் ராஜா
நடிப்பு: விஜய் சேதுபதி & தமன்னா
https://www.youtube.com/watch?v=WJbu2Ib3ozE

கவிஞர் வைரமுத்து

எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று   
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு   
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு   
சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும் வாழ்வதுண்டு   
அட ரோஜாப்பூக்கள் அழுதால் அது தேனை சிந்தும்   
என் ராஜா பையன் நீ அழுதால் அதில் யானம் மிஞ்சும்   
உன் சோகம் ஒரு மேகம்   
நான் சொன்னால் அது போகும்   
உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் தானாகும்
   
எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமே ஏது   
எப்போதுமே பகலாய் போனால் வெப்பம் தாங்காதே   
மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் கதைதான் உண்டு   
உன் உயிரை சலவை செய்ய   
ஒரு காதல் நதி உண்டு   
உன் சுவாசப்பையை மாற்று   
அதில் சுத்தக்காற்றை ஏற்று   
நீ இன்னோர் உயிரில்    
இன்னோர் பெயரில் வாழ்ந்துவிடு
   
சந்தர்ப்பமே தீமை செய்தால் சந்தோஷமே ஏது   
சல்லடையில் தண்ணீர் அள்ளி தாகம் தீராது   
தாகம் தீரத்தானோ நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய்   
நம் உறவின் பெயரே தெரியாதம்மா  உயிரைத் தருகின்றாய்    
உன் உச்சந்தலையை தீண்ட   
ஓர் உரிமை உண்டா பெண்ணே   
உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால் போதும் கண்ணே…    

No comments:

வ.ந.கிரிதரன் பாடல் - காலவெளிக் குழந்தைகள் நாம்

இசை & குரல்: AI SUNO | ஓவியம் : AI காலவெளிக் குழந்தைகள் நாம் விரிந்து கிடக்கிறது பேர் அண்டம். புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன். இரு...

பிரபலமான பதிவுகள்