Monday, January 22, 2024

ஸ்கார்பரோவிலுள்ள சாப்டர்ஸ் புத்தகக் கடைக்கு மூடுவிழா!


எனது ஆலயங்கள் புத்தக் கடைகள், நூல் நிலையங்கள். ஸ்கார்பரோவிலுள்ள சாப்டர்ஸ் புத்தகக் கடை எம் வாழ்க்கையில் பல்லாண்டுகளாக ஓரங்கமாக இணைந்து பயணித்து வந்ததொன்று. 
 
தற்போதுள்ள சூழல் காரணமாகப் பல பதிப்பகங்கள் , சஞ்சிகைகள், பத்திரிகைகள்  ஆட்குறைப்பு செய்கின்றன, அல்லது சஞ்சிகை, பத்திரிகைகளின்பக்கங்களைக் குறைக்கின்றன, அல்லது இணையத்தில் மட்டும் இயங்கத்தொடங்குகின்றன. இன்னும் சில மூடு விழா நடத்துகின்றன.
 சாப்டர்ஸ் நிறுவனத்தினர் இம்மாதம் 27 தொடக்கம் 'கென்னடி கொமனஸ்'ஸில் அமைந்துள்ள கிளைக்கு மூடு விழா நடத்துகின்றார்கள். மிகவும் துயரமான விடயம். என் மகள்மார் இருவரும் குழந்தைப்பருவத்திலிருந்து இன்றுவரை பாவித்து வரும் பிரியத்துக்குரிய புத்தகக் கடை. நானும் விரும்பிப் பாவிக்கும் புத்தகக் கடை. 
 

இங்கு புத்தகம் வாங்கச் சென்றால் விரும்பிய புத்தகங்களை எடுத்து வாசிக்கும் வகையில் நாற்காலிகளை ஆங்காங்கு வைத்திருப்பார்கள். இன்று அங்கு கடைசியாகச் சென்றோம். மிஷியோ ககுவின் வானியற்பியல் சம்பந்தமான நூலொன்றை எடுத்துச் சிறிது நேரம் வாசித்துக்கொண்டிருக்கையில் மூத்த மகள் எடுத்த புகைப்படமிது.

No comments:

செயற்கைத் தொழில் நுட்பம் மூலம் உருவாக்கிய Podcast.

எனது சிறுகதைகளில் ஒன்று 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்னை'. 'தாயகம்' கனடாவில் வெளியானது. ஆங்கிலத்தில் 'A Co(w)untry Issue' எ...

பிரபலமான பதிவுகள்