எம் தலைமுறையினரின் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த ஆளுமைகளில் தமிழ்ச் சினிமாப் பாடகர்களும் அடங்குவர். அவர்களில் டி.எம்.எஸ் முக்கியமானவர். அவரது குரலுடன் நாமும் வளர்ந்தோம். கனவுகள் கண்டோம். துயரத்தில் ஆழ்ந்தோம். மகிழ்ந்தோம். இன்பத்தில் ஆடினோம்.
அவரது இக்காணொளி எவ்விதம் இதுவரை என் கண்களில் படாமல் ஒளிந்திருந்தது?
இதில் அவர் தான் பாடகராக எவ்விதம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானார் என்பதை விபரிக்கின்றார். அக்காலகட்டச் சென்னை வாழ்க்கையின் நிலையினை விபரிக்கின்றார். அவரது சினிமா வாழ்க்கைக்கு நடிகர் திலகம் எவ்விதம் முக்கிய காரணமாக விளங்கினார் என்பதை எடுத்துரைக்கின்றார். எவ்விதம் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் தன் வெற்றிக்குக் காரணமானவர்களாக இருந்தார்கள் என்பதை நினைவு கூர்கின்றார். அவர் எவ்விதம் பாடல்களைப் பாடுகின்றார் என்பதை விளங்கப்படுத்துகின்றார். அற்புதமான காணொளி. காணொளியைப் பார்க்கையில், கேட்கையில் இன்பம் பொங்குகின்றது. நல்லதொரு காணொளி. டி.எம்.எஸ் என்னும் ஆளுமையினை நன்கு வெளிப்படுத்தும் காணொளி.
காணொளி டி.எம்.எஸ் எவ்விதம் நடிகர் திலகத்தின் மூலம் தூக்குத்தூக்கியில் பாட அனுமதிக்கப்படுகின்றார் என்பதுடன் ஆரம்பிக்கின்றது. அவர் நடிகர் திலகமாகவே மாறிக் குரலில் நடித்திருக்கும் சிறந்த பாடல்களில் ஒன்றான 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே' பாடலுடன் முடிகின்றது. சிறப்பாக இருக்கின்றது.
No comments:
Post a Comment