கலைஞர் மு.கருணாநிதியின் குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா. திருக்குறள் உரை & சங்கத்தமிழ்த் தொகுப்புகளை அவரது முக்கிய தமிழ்மொழிப்பங்களிப்புகளாக நான் கருதுகின்றேன். இவற்றுடன் சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து அவர் எழுதிய நாடகம், அதனையொட்டி வெளியான பூம்புகார் திரைப்படம் இவையும் முக்கியமானவை. பாடல்கள் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழ்த் திரையுலகை வசனத்துக்குத் திருப்பியதில் கலைஞரின் வசனங்கள் முக்கியமானவை. பராசக்தி, மனோஹரா, ராஜாராணி & பூம்புகார் போன்ற திரைப்படங்களின் வசனங்கள் மிகவும் புகழ் பெற்றவை.
அவர் ஆட்சியில் அமைத்த வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் அமைத்த வள்ளுவர் சிலை இவையும் முக்கியமான பங்களிப்புகள். இவை தவிர அவரது பல படைப்புகள் புனைகதைகளாக, அபுனைவுகளாக, நாடகங்களாக & திரைக்கதைகளாக வெளிவந்துள்ளன. ரோமாபுரிப்பாண்டியன், பாயும் புலி பண்டாரக வன்னியன், பொன்னர் - சங்கர் ஆகியவை முக்கியமான வரலாற்றுப் புனைவுகள். பல பாகங்களாக் வெளிவந்த நெஞ்சுக்கு நீதி சுயசரிதையும் முக்கியமான தொகுப்புகள்.
கலைஞரின் 'தொல்காப்பியப் பூங்கா' , குறளோவியம், திருக்குறள் உரை ஆகியவை தற்போது இணையத்தில் கிடைக்கின்றன.
கலைஞரின் எழுத்தின் முக்கியமான அம்சம் - அது சாதாரண வாசகர்கள் தொடக்கம், தீவிர வாசகர்கள் வரையில் செல்லும் தன்மை மிக்கது. அனைவரையும் மகிழ்விப்பது. அதனால்தான் அறிஞர்கள் தொடக்கம் சாதாரண வாசகர்கள் வரையில் அவரது எழுத்தை இரசிக்கின்றார்கள். அழகு மிகு ஓவியங்களுடன் கூடிய அவரது தொகுப்புகள் கருத்துக்கு மட்டுமல்ல கண்களுக்கும் விருந்தளிப்பவை.
தொல்காப்பியப் பூங்கா'வில் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் முக்கிய அம்சங்களை எவ்வளவு இனிமையாக, எளிமையாக & சுவையாகச் சாதாரண வாசகர்களிடம் எடுத்துச் செல்கின்றார் என்பதை அத்தொகுப்பை வாசிக்கும் எவரும் அறிந்து கொள்வர். தமிழ்க்கனி வெளியீடாக வெளிவந்துள்ளது.
கலைஞரின் குறளோவியம் 'குறளோவியம்' அழகான ஓவியங்களுடன், பாரதி பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.
திருக்குறளுக்குக்குக் கலைஞர் எழுதிய உரை நூலாகத் தமிழ்க்கனி வெளியீடாக வெளிவந்துள்ளது.
குறளோவியம் நூலை வாசிக்க
தொல்காப்பியப் பூங்கா நூலினை வாசிக்க
வெளிவந்த இந்நூலுக்கு அணிந்துரையினைப் பேராசிரியர் க.அன்பழகனும், பதிப்புரையினைப் பேராசிரியர் மா.நன்னன் அவர்களுகும் எழுதியிருக்கின்றார்கள். பல பதிப்புகளைக் கண்ட நூலிது.
'திருக்குறள் கலைஞர் உரை' நூலை வாசிக்க
No comments:
Post a Comment