மானுட சிந்தனையாற்றலின் வலிமையினை உணர்த்தும் ஆளுமையாளர் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன். அவரது காலம் வரை நிலவி வந்த வெளி, நேரம், புவியீர்ப்பு பற்றிய கோட்பாடுகளை ஆட்டங்காண வைத்தவை ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாடுகள்.
இவற்றை இவர் ஏனைய அறிவியல் அறிஞர்கள் போல் பரிசோதனைக் கூடங்களில் பரிசோதனைகள் செய்து ,அவற்றின் மூலம் நீருபிக்கப்பட்ட முடிவுகளாகக் கண்டறியவில்லை. தன் சிந்தனையாற்றலின் மூலம், சிந்தையென்னும் பரிசோதனைக்கூடத்தில் கண்டறிந்தார்.
இன்று, மார்ச் 14, அவரது பிறந்ததினம்.
என் சிந்தையைப் பாதித்த அறிவியல் ஆளுமையாளர்களில் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனுக்கும் முக்கிய இடமுண்டு.
அறிவியல் அறிஞன் இவனது
காலம் வெளி பற்றிய கோட்பாடுகள்
ககனத்தின் இருப்புப் பற்றிய ,நிலவிய
கோட்பாடுகளை
ஆட்டங்காண வைத்தவை.
அடியோடு ஆட்டங்காண வைத்தவை.
சிந்தையில் சோதனைகள் செய்தே
சரி, பிழை அறிந்தான்.
சிந்தனை ஆற்றலின் சக்தியினைச்
மானுடர் நாம் அறிய வைத்தான்.
மகத்தான மனிதனிவன்
பிறந்ததினம், மார்ச் 14, இன்று.
போற்றுவோம்! நினைவு கூர்வோம்!
இருப்புப் பற்றிய
என் புரிதலுக்கு உன்
இருப்பு மூலம்
அறியத் தந்தாய்!
அறிஞனே! நீ வாழி!
No comments:
Post a Comment