Friday, September 26, 2025
எழுத்தாளர் 'நந்தலாலா' ஜோதிகுமாருடன்...
எழுத்தாளர் 'நந்தலாலா' ஜோதிகுமார் தொண்ணூறுகளில் கனடா வந்திருந்தார் . அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைச் செயற்கைத்தொழில் நுட்பத்தின் மூலம் விளையாடிப் பார்த்தேன். அதன் விளைவு இது .
எழுத்தாளர் ஜெயமோகனுடன் ..
Thursday, September 25, 2025
கருத்து என்னுடையது! படம் உன்னுடையது (Google's Nano Banana & chatGPT)
Wednesday, September 24, 2025
எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா மறைவு!
இந்திய இலக்கியத்துக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில் ஒருவர் கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா. அவர் மறைந்த செய்தினை இணையம் வாயிலாக அறிந்தேன். ஆழ்ந்த இரங்கல்.
அவரது நாவல்களான 'பருவம்' (மகாபாரதத்தின் மீதான மறுவாசிப்பு) , ஒரு குடும்பம் சிதைகிறது ஆகியவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.
ஒரு குடும்பத்தின் சிதைவு நாவலைப் பின்வரும் இணையத்தள முகவரியில் வாசிக்கலாம் -https://abedheen.wordpress.com/wp-content/uploads/2012/12/orukudumbamsidhaigirathu.pdf
அவரது மறைவினையொட்டி எழுத்தாளர் ஜெயமோகனின் அஞ்சலிக்குறிப்பு சுருக்கமாக அவரது இலக்கியப் பங்களிப்பினை எடுத்துரைக்கின்றது. - https://www.jeyamohan.in/223213/
கருத்து என்னுடையது! படம் , செயற்கை அறிவு (Google's Nano Banana) , உன்னுடையது!
எழுத்தாளர் நடேசனின் பயணத்தொடர் _ பஹல்காம் (Pahalgam) நினைவுகள் பயணத்தொடர்
| - குதிரைகளில் நடேசனும், நண்பரும் - |
பதிவுகள் இணைய இதழில் எழுத்தாளர் நடேசன் எழுதும் 'பஹல்காம் (Pahalgam) நினைவுகள்' பயணத் தொடரின் முதல் அத்தியாயம்.
இங்குள்ள புகைப்படம் பயணத்தில் அவரும், நண்பரும் குதிரைகளில் பயணிப்பதை வெளிக்காட்டும். நான் முதலில் அவற்றைக் கழுதைகள் என்று நினைத்து விட்டேன். போர் புரியப் பாவித்த தம்மை இப்படிக் கழுதைகளைப் போல் மானுடர் பொதி சுமக்கவும், பயணிகளைச் சுமக்க வைத்து வீட்டார்களே என்று குதிரைகளின் உளவியலும் கழுதைகளைப் போல் மாறி விட்டன போலும்!
இப்புகைப்படத்தில் கழுதைகளில் இருக்கும் மானுடர் இருவரும் வெளிப்படுத்தும் மகிழ்ச்சிகரமான உணர்வுகள் தன்னிச்சையானவை. என்னை மிகவும் இப்புகைப்படம் கவரக் காரணமானவை.
இப்புகைப்படத்தில் காணப்படும் குதிரைகள் இரண்டும் வெளிப்படுத்தும் உணர்வுகளையும், மானுடர்கள் இருவரும் வெளிப்படுத்தும் உணர்வுகளையும் தெளிவாகக் காண முடிகின்றது. அவை 180 பாகை வித்தியாசத்தில் இருப்பதையும் புரிந்து கொள்ள முடிகின்றது. பாவம், குதிரைகளுக்குத் தெரியாது தம்மேல் இருப்பவர்களில் ஒருவர் இதுவரை மிருக வைத்தியராகவிருந்து ஓய்வு பெற்றவர் என்னும் விடயம். தெரிந்திருந்தால் 'இது முறையோ? இது தகுமோ?" என்று நடேசனிடம் அவை முறையிட்டிருக்கும்.
நடேசனின் பயணத்தொடர்கள் சுருக்கமான விபரிப்புகளுடன் கூடிய சுவையான பயணத்தொடர்கள். நான் விரும்பி வாசிப்பவை. அப்பகுதிகளுக்கு நானே சென்ற உணர்வைத்தருபவை.
****************************************************************************
பயணத்தொடர் _ பஹல்காம் (Pahalgam) நினைவுகள் (1) - நடேசன். -
2025 சித்திரை 22, புதன்கிழமை
மதியத்துக்குப் பின்பாக , பஹல்காம் நகரின் மத்தியப் பகுதியில் வாகன நெரிசலில் நாங்கள் வந்த வாகனம் நத்தையைப் போல் மெதுவாக நகர்ந்தது. அச்சமயம், பாதையோரத்தில் ஒருவரின் குரலும் சைகைகளும் என் கவனத்தை ஈர்த்தன. உயரமான பெண் ஒருவர் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தார். அவரது வெள்ளைச் சட்டை, சேற்றில் உழுது வீடு வந்த விவசாயியின் தோற்றத்தை நினைவூட்டியது. அந்தக் காட்சி என்னுள் ஒரு கலவர உணர்வை உருவாக்கியது— இங்கு ஏதோ அசாதாரணமான ஒன்று நடந்திருக்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)
ஏ தாழ்ந்த தமிழகமே!
திமுகவின் மும்மூர்த்திகள் திமுகவின் உதயத்தை தமிழகத்தின் பொற்காலமாக நான் கருதுவேன். சமநீதி, சம உரிமை, பகுத்தறிவும், சுயமரியாதை இவற்றின் அடிப...
.png)
.png)





