- குதிரைகளில் நடேசனும், நண்பரும் - |
பதிவுகள் இணைய இதழில் எழுத்தாளர் நடேசன் எழுதும் 'பஹல்காம் (Pahalgam) நினைவுகள்' பயணத் தொடரின் முதல் அத்தியாயம்.
இங்குள்ள புகைப்படம் பயணத்தில் அவரும், நண்பரும் குதிரைகளில் பயணிப்பதை வெளிக்காட்டும். நான் முதலில் அவற்றைக் கழுதைகள் என்று நினைத்து விட்டேன். போர் புரியப் பாவித்த தம்மை இப்படிக் கழுதைகளைப் போல் மானுடர் பொதி சுமக்கவும், பயணிகளைச் சுமக்க வைத்து வீட்டார்களே என்று குதிரைகளின் உளவியலும் கழுதைகளைப் போல் மாறி விட்டன போலும்!
இப்புகைப்படத்தில் கழுதைகளில் இருக்கும் மானுடர் இருவரும் வெளிப்படுத்தும் மகிழ்ச்சிகரமான உணர்வுகள் தன்னிச்சையானவை. என்னை மிகவும் இப்புகைப்படம் கவரக் காரணமானவை.
இப்புகைப்படத்தில் காணப்படும் குதிரைகள் இரண்டும் வெளிப்படுத்தும் உணர்வுகளையும், மானுடர்கள் இருவரும் வெளிப்படுத்தும் உணர்வுகளையும் தெளிவாகக் காண முடிகின்றது. அவை 180 பாகை வித்தியாசத்தில் இருப்பதையும் புரிந்து கொள்ள முடிகின்றது. பாவம், குதிரைகளுக்குத் தெரியாது தம்மேல் இருப்பவர்களில் ஒருவர் இதுவரை மிருக வைத்தியராகவிருந்து ஓய்வு பெற்றவர் என்னும் விடயம். தெரிந்திருந்தால் 'இது முறையோ? இது தகுமோ?" என்று நடேசனிடம் அவை முறையிட்டிருக்கும்.
நடேசனின் பயணத்தொடர்கள் சுருக்கமான விபரிப்புகளுடன் கூடிய சுவையான பயணத்தொடர்கள். நான் விரும்பி வாசிப்பவை. அப்பகுதிகளுக்கு நானே சென்ற உணர்வைத்தருபவை.
****************************************************************************
பயணத்தொடர் _ பஹல்காம் (Pahalgam) நினைவுகள் (1) - நடேசன். -
2025 சித்திரை 22, புதன்கிழமை
மதியத்துக்குப் பின்பாக , பஹல்காம் நகரின் மத்தியப் பகுதியில் வாகன நெரிசலில் நாங்கள் வந்த வாகனம் நத்தையைப் போல் மெதுவாக நகர்ந்தது. அச்சமயம், பாதையோரத்தில் ஒருவரின் குரலும் சைகைகளும் என் கவனத்தை ஈர்த்தன. உயரமான பெண் ஒருவர் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தார். அவரது வெள்ளைச் சட்டை, சேற்றில் உழுது வீடு வந்த விவசாயியின் தோற்றத்தை நினைவூட்டியது. அந்தக் காட்சி என்னுள் ஒரு கலவர உணர்வை உருவாக்கியது— இங்கு ஏதோ அசாதாரணமான ஒன்று நடந்திருக்க வேண்டும்.
வழியோரமாக, ஒரு காவல்துறை அதிகாரி எதிரே நின்ற வாகனத்தின் கண்ணாடியை லத்தியால் தாக்கினார். சாரதி எதையோ விளக்க முயன்றபோதும், அவர் மீண்டும் வந்து அவரது முகத்தையே தடியால் அடித்தார். அந்தக் கோரக் காட்சியைச் சகிக்க முடியாமல் நான் முகத்தை வாகனத்துள் திருப்பிக்கொண்டேன்.
சில நிமிடங்களில் நாங்கள் ஹோட்டலுக்குச் சென்றடைந்தோம். பூட்டியிருந்த இரும்புக்கதவுகள் எங்கள் வருகைக்காகத் திறக்கப்பட்டன. உள்ளே நுழைந்ததும், வரவேற்பறையில் நின்றிருந்த பெண் ஒருவர் உடனே கவனத்தை ஈர்த்தார்—அவரது உடை ரத்தத்தில் தோய்ந்திருந்தது. இரு சிறிய குழந்தைகளைப் பிடித்தவாறு, திகைப்பும் துயரமும் கலந்து, “எனது கணவரைக் காணவில்லை!” என்று ஆங்கிலத்தில் அழுதுகொண்டிருந்தார்.
அவரது ஆங்கிலத்தில் ஒரு மலையாளச் சாயல் இருந்தது. அவளது முழுமையான கூற்றுகள் எங்களுக்குப் புரியவில்லை. ஆனால், ஒரு விஷயம் மட்டும் தெளிவாக இருந்தது—அவளுக்கு நாம் எந்தவிதமான உதவியும் செய்ய முடியாது.
முழுமையாக வாசிக்க - https://www.geotamil.com/.../2021-02-14.../9355-pahalgam-1
No comments:
Post a Comment