எழுத்தாளர் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு , மாவென்சி பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது. மொழிபெயர்த்திருப்பவர் நேத்ரா றொட்ரிகோ. இம்மொழி பெயர்ப்பு நூலின் வெளியீடு செப்டெம்பர் 6, 2025 அன்று ஸ்கார்பரோ நகரில் நடைபெறவுள்ளது.இது பற்றிய அறிவிப்பினை Tamil Arts Collective விடுத்துள்ளனர். அவ்வழைப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "The publication of the 'Prison of Dreams' quintet marks a historic moment in Canadian Tamil literature, as it is the first book length translations of a Tamil novelist published in Canada." அதாவது 'கனவுச்சிறை’ஐந்து பாகப் புதினத் தொகுப்பு கனடாவில் வெளிவருவது, கனடியத் தமிழ்ச் சமூக இலக்கிய வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். ஏனெனில், இது கனடாவில் வெளியிடப்பட்ட முதல் முழுநீளத் தமிழ்ப் புதின மொழிபெயர்ப்பு ஆகும்.' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவகாந்தனின் கனவுச்சிறை மகா நாவல். தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் முக்கிய படைப்பு. அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அதுதான் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் முழுநீளத் தமிழ்ப் புதின மொழிபெயர்ப்பா? அப்படிக்கூறுவதற்கில்லை. எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'தமிழ் நாவல் ஏற்கனவே ஆங்கிலத்துக்கு எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதன் ஆங்கில மின்னூற் பதிப்பு ஏறகனவே அமேசன் கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகியுள்ளது.
பல வருடங்களுக்கு முன்னரே எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் ஆங்கிலப் பக்கங்களில் ஒன்றான 'Canadian Tamil Literature: Writer V.N.Giritharan's Corner' வலைப்பதிவில் முழுமையாகப் பிரசுரமாகியுள்ளது. இந்நாவல் பற்றி முனைவர் தாரணி அகில் (தமிழ்நாடு) அவர்களால் ஆங்கிலத்திறனாய்வுக் கட்டுரை ஒன்றும் '‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. அக்கட்டுரையும் மேற்படி ஆங்கில வலைப்பதிவில் பிரசுரமாகியுள்ளது. பதிவுகள் இணைய இதழிலும் வெளியானது.
இந்நாவலை மேற்கோள் காட்டி ஆங்கிலம், பிரெஞ்சி ஆகிய மொழிகளில் புகலிட இலக்கியம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. இந்நாவல் பற்றி யு டியூப் தளத்தில் V.N.Giritharan Podcast சானலில் Podcast ஒன்றும் வெளியாகியுள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் (தமிழ் நாடு) முனைவர் பட்ட ஆய்வுக் கையேட்டில் புகலிட இலக்கியத்துக்காகப் பரிந்துரைக்கப்பட்ட நாவல்கள் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (பரிந்துரைக்கப்பட்ட நாவல்கள் - மேரி ஆன் மோகன்ராஜின் 'The Stars Change' & வ.ந.கிரிதரனின் An Immigrant )
தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு முதன் முதலாக ஆங்கில மொழிபெயர்ப்பாக, கனடாவில் வெளியான தமிழ் நாவல் அல்ல. ஏற்கனவே வ.ந.கிரிதரனின் குடிவரவாளனின் ஆங்கில மொழிபெயர்ப்பான An Immigrant (Translated by latha Ramakrishnan) நாவலே இவ்வகையில் முழுமையாக ஆங்கில மொழிபெயர்ப்பாக வெளியான கன்டியத் தமிழ் நாவல். நானறிந்தவரை என்று கூறுவேன். வேறு நாவல்கள் இருப்பின் அறியத்தாருங்கள். என் கருத்தை மாற்றிக்கொள்வேன்.
கனடாத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில், முதன் முதலாக அச்சில் வெளியான தமிழ் நாவலொன்றின் ஆங்கில மொழிபெயர்ப்பாக எழுத்தாளர் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலைக் கூறலாம்.அதுவே சரியான தகவல். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியான முதலாவது கனடியத் தமிழ் நாவலாக வ.ந.கிரிதரனின் குடிவரவாளனைக் குறிப்பிடலாம். அதுவும் சரியான தகவலே.
An Immigrant நாவல் பற்றி கூகுள்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் (தமிழ் நாடு) முனைவர் பட்ட ஆய்வுக் கையேட்டில்...
No comments:
Post a Comment