'டொரோண்டோ' மாநகருக்கு வருகை தரும் எவரும் பார்க்கத் தவறாத கட்டடம் காசா லோமா (Casa Loma). அரண்மனைபோன்ற பெரியதொரு மாளிகை. உண்மையில் அரண்மனையாகச் செல்வந்தர் ஹென்றி பெல்லட் (Sir Henry Pellatt) என்பவரால் 1911- 1914 காலகட்டத்தில் கட்டப்பட்ட மாளிகை. கோதிக் கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்ட இம்மாளிகை டொரோண்டாக் கட்டடக்கலையைப் பிரதிபலிக்கும் முக்கியமானதொரு கட்டடம். இக்கட்டடத்தை வடிவமைத்த கட்டடக்கலைஞர் E.J. Lennox .
98 அறைகளைக்கொண்ட மாளிகையில் 61 அடி உயரமான பெரிய மண்டபம், இரகசிய நடைபாதைகள், பந்துவீச்சு (bowling) அரங்கம், பணியாட்களர்களுக்கான சுரங்கப்பாதைகள், குதிரைகளைப் பராமரிக்கும் பகுதிகள் முக்கியமானவை.
முதலாம் உலக மகாயுத்தத்தைத்தொடர்ந்து , ஹென்றி பெல்லட் நிதிச்சிக்கலில் சிக்கியதால் , அவரால் அரசுக்குக் கட்ட வேண்டிய வருமானவரியைக் கட்ட முடியாமல் போனது. அதனால் அரசு அதனைத் தன் வசமாக்கியது.
அதன்பின் பல வருடங்களாக, ஹொட்டல், கிளப், ஆய்வு நிலையம் எனப் பல்வேறு வழிகளில் பாவிக்கப்பட்டு வந்த இவ்வரண்மனை 2014ஆம் ஆண்டு தொடக்கம் Liberty Entertainment Group என்னும் அமைப்பினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
தற்போது சுற்றுலாத்தலமாகவும், அருங்காட்சியகமாகவும்ம் , நிகழ்வுகளுக்கான மண்டபமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வருடா வருடம் 650,000 ற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தரும் கட்டடமாக விளங்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
காசாலோமா - https://casaloma.ca/
No comments:
Post a Comment