Monday, September 8, 2025

ஓட்டாவாக் (Ottawa) காட்சிகள் - வீதியில் ஜாஸ் பியானோ வாத்தியக் கலைஞர்!


இவ்வார இறுதியைக் கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் கழி(ளி)த்தேன். பாராளுமன்றம் அமைந்த பகுதியில் சுற்றித் திரிந்தபோது கண்ணைக் கவர்ந்த சிலை இது. கனடாவில் மட்டுமல்ல, உலகின் புகழ்பெற்ற பியானோ வாத்தியக்கலைஞர் ஒருவரின் சிலை அல்பேர்ட் வீதி - எல்ஜின் வீதியும் சந்தியில், தேசியக் கலை மையத்துக்கு வெளியில், அமைக்கப்பட்டிருந்த நேர்த்தி என்னைக் கவர்ந்தது. அவர் வேறு யாருமல்லர் மான்ரியாலில் குடியேறிய கரிபியன் குடியேற்றவாசிகளான தாய், தந்தையருக்கு மகனாகப் பிறந்த ஆஸ்கர் பீட்டர்சனே (Oscar Peterson) (1925–2007) அவ்வாத்தியக் கலைஞர். 
 
இவர் உலகப் புகழ்பெற்ற கனடிய ஜாஸ் பியானோ வாத்தியக் கலைஞராகக் கருதப்படுமிவர்.மிகவும் வேகமாகவும், துல்லியமாகவும் பியானோ வாசிப்பதில் வல்லவராகக் கருதப்படுகின்றார்.
மேற்படி வெண்கலச் சிலையினை (Bronz) வடித்திருப்பவர் கனடியச் சிற்பியான Ruth Abernethy. ஆஸ்கர் பீட்டர்சனே அச்சந்தியில் அமர்ந்து பியானோ வாசிக்கின்றார் என்னும் உணர்வைத்தரும் பாவனையில் உருவாக்கப்பட்டிருக்கும் சிலையுடன் , அவர் வாசிக்கும் பியானோ இசையையும் கேட்டு மகிழலாம். மறக்க முடியாத , நினைவில் நிலைத்து நிற்கும் நினைவுக்குரிய அனுபவமாக இந்தச் சிலை அனுபவம் ஆழ்மனத்தில் பதிந்து விட்டது.
 
ஆஸ்கர் பீட்டர்சன் பியானோ வாசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள வெண்கலச் சிலையினையே இங்கு காண்கின்றீர்கள்.

No comments:

காலத்தால் அழியாத கானம்: 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!"

    'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Googel Nano Banana) உதவி; VNG   பாடகி வாணி ஜெயராமுக்குச் சிறந்த பாடகிக்கான இந்திய மத்திய அரசின்...

பிரபலமான பதிவுகள்