Saturday, September 20, 2025

ஏ.ஈ.மனோகரனின் பொப் இசைப் பாடல்கள்!


ஏ.ஈ.மனோகரனின் பொப் இசைப் பாடல்கள் சிலவற்றைக் கேட்டு இரசிப்போமா?


பொப் இசை என்பது எம் தலைமுறையின் அழியாத கோலங்களில் ஒன்று. அதனை நினைத்ததுமே நித்தி கனகரத்தினம், ஏ.ஈ.மனோகரன், அமுதன் அண்ணாமலை . என்று பலர் நினைவுக்கு வருவார்கள்.

என் பதின்ம வயதுகளில் யாழ் திறந்தவெளி அரங்கில் (மத்திய கல்லூரி, மணிக்கூட்டுக் கோபுரம், பொதுசன நூலகத்துக்கிடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கும்) நடந்த தினகரன் விழா நினைவுக்கு வருகின்றது.

தமிழ் , சிங்களப் பொப் பாடகர்கள் பலர் பங்கேற்ற நிகழ்வு. கட்டணம் செலுத்திச் செல்ல வேண்டியிருந்த நிகழ்வு. நாங்கள் வெளியில் நின்று கேட்டுக்கொண்டிருந்தோம். நிகழ்ச்சி தொடங்கி சிறிது நேரத்தின் பின்னர் வெளியில் காத்திருந்தவர்களையும் பார்க்க அனுமதித்து விட்டார்கள். முதன் முதலாக மில்டன் மல்லவராச்சி என்னும் சிங்களப் பாடகரை அங்குதான் பார்த்தேன்.ஏ.ஈ.மனோகரன் என்றதும் மறக்க முடியாத நினைவு ஒன்றுண்டு. யாழ் இந்துக்கல்லூரிக்கு முன்பாக, கே.கே.எஸ் வீதியொன்றிலிருந்த வீட்டுப்பெண்ணொருத்தியின் திருமண வீட்டுக்கு வந்திருந்தார். திருமண வீட்டாருடன் ஊர்வலமாகக் கே.கே.எஸ் வீதி வழியாகச் சென்ற கூட்டமொனறில் ஒருவராக ஏ.ஈ.மனோகரனும் சென்றார். அப்போது எனக்குப் பதின்ம வயது ஆரம்பித்திருந்த காலம். நண்பர்கள் சிலருடன் வீதியில் , நாம் அனைவரும் அடிக்கடி சந்திக்கும் கராஜ் ஒன்றின் முன்பாக நின்று உரையாடிக்கொண்டிருந்தோம்.

எம் நண்பர்களில் ஒருவன் மனோகரனைக் கண்டதும் 'இங்கேடா மனோகரன்' என்று கத்தினான். ஏ.ஈ. மனோகரனின் சுருண்ட கூடை போன்ற தலைமயிரும், நடிகனைப்போன்ற சிரிக்கும் தோற்றமும் , அவரது புகைப்படங்கள் அடிக்கடி ஊடகங்களில் வெளிவந்திருந்ததால், எமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தது. அப்பொழுது அவர் தமிழ்ப் படமான 'வாடைக்காற்றி'லும் நடித்துக்கொண்டிருந்தார்.

எம் நண்பனின் 'இங்கேடா மனோகரன்' என்னும் கூக்குரல் கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று கொண்டிருந்த ஏ.ஈ.மனோஹரனுக்குக் கேட்டிருகக் வேண்டும். மிகவும் மகிழ்ச்சியுடன் திரும்பி சிறுவர்களான எம்மை நோக்கிக் கைகளை ஆட்டிவிட்டுச் சென்றார். எங்கோ ஒரு வீதியொன்றில் தன்னை இனங்கண்டு வியந்த தன் இரசிகர்களைக் கண்டதால் ஏற்பட்ட பெருமிதமும், மகிழ்ச்சியும் ஏ.ஈ.மனோகரனின் முகத்தில் பொங்கிபெருகிய அக்கட்டம் என் மனத்திரையில் அப்படியே அழியாத சித்திரமாகப் படிந்து விட்டது. ஒவ்வொரு தடவையும் அவரை நினைக்கையில் எனக்கு அக்கணம் உடனடியாக நினைவுக்கு வந்துவிடும். இப்பொழுதும் இப்பாடல்களைக் கேட்கையில் வந்துவிட்டது.

ஏ,ஈ,மனோஹரனின் பொப் இசைப்பாடல்களைக் கேட்க 

No comments:

ஏ.ஈ.மனோகரனின் பொப் இசைப் பாடல்கள்!

ஏ.ஈ.மனோகரனின் பொப் இசைப் பாடல்கள் சிலவற்றைக் கேட்டு இரசிப்போமா? பொப் இசை என்பது எம் தலைமுறையின் அழியாத கோலங்களில் ஒன்று. அதனை நினைத்ததுமே ந...

பிரபலமான பதிவுகள்