![]() |
- C. அண்ணாமலை - |
[பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]
ஏப்ரல் 2005 இதழ் 64
சுவிஸ் தமிழ் நாடகம்!
சுவிட்சர்லாந்து நாட்டு இயக்குநர்களும் நடிகர்களும் நமது தமிழ்க் கலைஞர்கள் பற்றியும் கலைகள் பற்றியும் சொன்னபோது வியப்பாகவும் மகிழ்வாகவும் இருந்தது. தொடர்ந்து இருபது ஆண்டுகள் அந்த நாட்டில் தமிழர்கள் நாடகங்களை மேடையேற்றி வருகிறார்கள். குளிரும், கலாச்சாரமும், மொழியும் அந்நியமான சூழலில் தமிழ் நாடகா;கள் ஒரு சாதனையை நிகழ்த்த முடிந்திருக்கிறது. அங்கு 'எத்தனையோ இனம் அகதிக்கோலத்தில் வாழ்ந்திருந்தாலும் தமிழினத்தின் ஈடுபாடும் முயற்சிகளும் பிறரிடம் இல்லை" என்கிறார் அல்பின் பியாரி என்கிற சமூக மானுடவியல் ஆய்வாளர் மற்றும் நிதி நிறுவன அதிகாரி.
மேலும் 'தமிழர்கள் சுவிஸ் நாட்டின் பெரிய நாடகக்குழுக்கள் அரங்கேற்றும் இடங்களில் தமிழ் நாடகங்களும்; டொய்ச் - தமிழ் படைப்புகளும் மேடையேறுவது அடுத்தகட்டமாக இருக்க முடியும்' என்கிறார். எண்பதுகளின் தொடக்கம் உலகம் முழுவதும் தங்கள் விருப்பங்கட்கு மாறாய் வாழ நேர்ந்த ஈழத்தமிழர்கள், சுவிஸ் நாட்டிற்கு வந்தபோது குளிர்தான் பெரும் பிரச்னையாக இருந்திருந்தது. 'நான் நமது நாட்டுச்சூழலுக்கேற்ற உடையுடன் வந்திருந்தேன். குளிருக்கேற்ற எந்தவித உடுப்புகளுடனும் வரவில்லை. ஐஸ்கட்டிகளை எடுத்து விளையாடினேன். முதலில் ஒன்றும் தெரியவில்லை பின்னர் அதன் குணத்தை முழுதாய் உணர்ந்து நடுங்கினேன்' என்கிறார் அன்ரன் பொன்ராசா.
![]() |
சுவிஸ் நாட்டினர் அகதிகளின் பிரச்னைகளை மக்களுக்குக்; கொண்டு செல்ல போட்ட இந்தத்திட்டம் நன்றாக இருந்ததாக பலரும் கூறினர். நாடகங்களை பள்ளி, கல்லூரிகளிலும் மக்கள் கூடுமிடங்களிலும் நிறைய நிகழ்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக ·பாரம் தியேட்டர் ((Forum Theatre) என்ற பாணி நாடகங்கள் நிறைய மக்களைச் சென்றடைந்துள்ளது. திடீரென மக்களிடம் முன் அறிவிப்புகள் இன்றி நாடகத்தைப் போட வேண்டும். பல இடங்களில் அது உண்மைச் சம்பவமாக கருதப்பட்டு மக்களின் எதிர்வினை அமைந்தது. இதற்கிடையில் பலர் பள்ளி கல்லூரிகளில் சென்று தங்களின் (அகதிகள்) பிரச்னையைச் சொல்லி விளங்கப்; படுத்தியுள்ளனர்.
அடுத்த நாடகம் ஐயோ என்பதாகும் சுமார் 68 முறை சுவிஸில் மேடையேறியுள்ள இந்த நாடகத்தை ஓட்டோ ஹ_ப்பர்; என்ற சுவிஸ் இயக்குநா; இயக்கியிருந்தார். இந்த நாடகமும் அகதிகள் பிரச்னையை முன்வைத்து தயாரிக்கப்பட்டது. ஒரு ஈரானியர் (அனுஷ்), ஒரு தமிழர் (அன்ரன்), ஒரு சுவிஸ்காரர் (பீட்டர் பிரஸ்லர்) மூவர் கொண்ட நாடகம் இது. 'மிகவும் நுட்பமாக கவனமாக எழுதப்பட்ட பிரதி அது. இதில் மூன்று பாத்திரங்கள்தான் என்ற போதிலும் சுவாரஸ்யமாக பார்க்கப்பட்டது. நல்ல வரவேற்பு' என்கிறார் அன்ரன். 'இந்த நாடகத்தில் அவரவர்களின் பிரச்னைகளைக்கொண்டு வந்தோம். அன்ரன், ஒரு தமிழ் அரசரைப்போன்று ஓரிடத்தில் வருவார். கிரீடம் வைத்துக்கொண்டு குதிரையில் வருவது போல் காட்சியமைத்திருந்தேன். அந்த அசைவுகளுக்காக நிறைய பயிற்சி பெற வேண்டியிருந்தது" என்கிறார் ஓட்டோ ஹ_ப்பர். இந்த நாடகப்பெயரும் தமிழ்ப் பெயராக அமைந்துவிட்டது.
இந்த பன்மொழி, பல கலாச்சார நாடகங்கள் சுவிஸ் நாட்டு இயக்குநா;களும், கலைஞர்களும் தமிழர்களும் அதிகமாக இணைந்து மேடை நாடகங்களாக, ·பாரம் தியேட்டராக, இன்விசிபில் அரங்காக நிறைய உருவாகி மக்களைச் சென்றடைந்து கொண்டிருந்தது. அதே நேரம் தமிழில் மட்டுமே நாடகங்களை உருவாக்கி பாரதிகலைக்குழு, கண்ணதாசன் கலைக்குழு போன்று பல குழுக்கள் நாடகங்களைத் தயாரித்து தமிழ் மக்களுக்கு மட்டும் மேடையேற்றி வந்தார்கள். இவர்களுக்கு நாடகம் பூ¢தல் குறைவாக இருந்ததாக ரமணன் கூறுகிறார். இவர் தனது தமிழ் நசைக்சுவை நாடகங்களின் மூலம் சுவிஸ் நாட்டில் பிரபலமானார். பிறகு டொய்ச் தமிழ் இருமொழி நாடகத்தயாரிப்புகளில் தனது நண்பர்கள் சாய் சுப்ரமணியம், சிமோன் சங்கெளசர் போன்றவர்களுடன் இணைந்து தமிழ் மக்களுக்காக உருவாக்கினார்.
"நான் அவர்களுக்கு மேக்-அப் உட்பட பல விஷயங்களில் உதவுவதற்குப் போனேன். பிறகு நாடகத்திலும் நடித்தேன். எனக்குப் பிடித்திருந்தது" என்கிறார் சிமோன் சங்கெளசர்.
தமிழ் நாடகங்களுக்கு குழந்தை சண்முகலிங்கம், முருகையன், ஈழக்கூத்தன் புதுவை அன்பன் ஆகியோரின் பிரதிகள் பயன்படுத்தப்பட்டன.
கலை பண்பாட்டுக்கழகம் அவ்வப்போது விழாக்கள் ஏற்பாடு செய்து நாடகங்களுக்கு வாய்ப்பளித்தது. இவ்விழாக்கள், நிறைய நாடகங்கள் உருவாகவும் தயாரிக்கப்பட்ட நாடகங்கள் தொடர்ந்து மேடையேறவும் உதவி செய்ததாக கூறப்படுகிறது.
நாடகாசிரியர் யோகராஜா நிறைய நாடகங்களை எழுதி தனது நண்பர்கள் பாலகுமார், பாஸ்கர், சண்முகராஜா போன்றவர்களுடன் இணைந்து நாடகங்களை மேடையேற்றியுள்ளார். சைவத்தமிழ்ச்சங்கம் நடத்திய நாடகப்போட்டிகள் பல நாடகங்கள் உருவாக காரணமாக அமைந்துள்ளது. ஸ்ரீகந்தராஜா நாடகத்தயாரிப்புகளில் முக்கியமாக ஈடுபட்டதாக பல சுவிஸ் நண்பர்கள் கூறுகிறார்கள்.
ஈழத்து வரலாற்றை அகதிகளின் பிரச்னைகளை விரிவாக தமிழ் டொய்ச் மொழிகளில் மேடையேற்றியவர் அர்லட்டே ஹீர்டீபஸன் ஆவார். அவரிடம் பேசும் போது 'இது ஒரு சமூக செயல்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது" என்றார்.
இப்படி தமிழில் மட்டுமே நாடகங்களை மேடையேற்றிய குழுக்கள் தமிழ் நாடக விழாக்களை ஏற்பாடு செய்த அமைப்புகள், தயாரிப்பாளர்கள் ஒரு பக்கம். மறுபக்கம் இருமொழி, மும்மொழி நாடகங்கள் மூலம் தமிழர்களின் பிரச்னைகளை மக்களிடம் கொண்டுசென்றது. இவை அனைத்தும் தமிழர்கள் பற்றியும் ஈழப்பிரச்னை பற்றியும் நல்ல அறிமுகம் கிடைக்க உதவியுள்ளன. இந்தச் செயல்பாட்டை பல்வேறு அமைப்புகள் ஆதரித்துள்ளன. கல்வி - கலை நிறுவனங்கள் அக்கறையோடு உதவியுள்ளன.
இப்படியான செயல்பாடுகளில் தமிழ் டொய்ச் நாடகங்களை பத்திரிகை, டிவி, வானொலி, இணைய தளங்கள் தொடர்ந்து மக்களிடம் கொண்டு சென்றன. பத்திரிக்கைகளின் முதல் பக்கங்களில் தமிழர்களின் நாடகச் செயல்பாடுகள் பற்றி கட்டுரைகள் வெளியாகியுள்ளன. தொலைக்காட்சிகள் அத்தகைய செயல்பாடுகளை விவரணப் படங்களாகவும் செய்திகளாகவும் ஒளிப்பரப்பின. அவற்றில் ~வணக்கம்~ என்ற ஆவணப்படம் பரவலாக பேசப்படுகிறது.
முதன் முதலில் சுவிஸ்காரர்களுடன் நாடகங்கள் செய்ததில் முக்கியமாக விளங்கிய அன்ரன் பொன்ராசா, லண்டனில் இருந்த ஏ.சி. தாசீசியஸ் அவர்களை சுவிஸ் நாட்டிற்கு அழைத்து உருவாக்கிய முதல் நாடகம் ஸ்ரீசலாமி என்பதாகும். தமிழர்களின் வரலாற்றில் இடப்பெயர்வு எத்தகைய பங்கு வகிக்கிறது என்பதைப்பேசிய நாடகம் இது. ஆடலும் பாடலும் சக்தியாய் அமைந்து சுவிஸ்காரர்களை வியக்கவைத்த நாடகமாகப் பேசப்படுகிறது. பலமுறை மேடையேறிய இந்த நாடகம் நல்ல வரவேற்பைப்பெற்றது. ஈழக்கூந்தன் என்ற தாசீசியஸ் நாடகப்பிரதியை அன்ரன் பொன்ராசாவும் பீட்டர் பிராஸ்லர் என்ற சுவிஸ் இயக்குநரும் சேர்ந்து இயக்கினார். தாசீசியஸ் நாடகப்பயிற்சியிலும் பங்களிப்புச் செய்தார். இந்த நாடகம் தமிழர்களின் கலாச்சாரத்தை வாழ்வை நன்கு சுவிஸ் நாட்டினருக்கு உணர்த்தியதாக சொல்லப்படுகிறது. இந்த நாடக இசை மிகவும் விஷேசமாக அமைந்திருந்தது. ஓர் அமெரிக்கரும் சுவிஸ் நாட்டு இசைக்கலைஞர்களும் கூடி இசையமைத்திருந்தா;.
~பாண்டவர்களும் கிளவுஸ் முன்வரும்~ என்ற நாடகம்; போரும் சமாதானமும் என்ற கருத்தை ஈழப்பிரச்னையுடன் தொடர்புப்படுத்தி முழுக்க முழுக்க தமிழ்க்கூத்துகளின் ஆட்டம் பாடல்களைக் கொண்டது. பிரம்மாண்டமான உடுப்புகளும் ஆட்டங்களும் சுவிஸ் பார்வையாளர்களை பிரமிப்பில் தள்ளியதாக பலரும் கூறுகின்றனர். அதனால் சுவிஸ் பகுதி மிகவும் பின்தள்ளப்பட்டதாக உணர்ந்து சுவிஸ் கலைஞர்கள் வருத்தப்பட்டதாகவும் கூறினார் அன்ரன்.
அன்ரனின் தொடர்ந்த நாடகச்செயல்பாடுகள், அவருக்கு சுவிஸ் நாடக உலகம் மற்றும் சுவிஸ் ஊடகம் தந்த இடம் உயர்வானது. இதைத் தொடர்ந்து கவனித்து வந்த பாரதிக்கலைக்குழு, கண்ணதாசன் கலைக்குழு போன்ற குழுவினர் அன்ரனை அணுகி தங்களுக்கு முறையான பயிற்சியளிக்கும்படி கேட்க, அதன் விளைவுதான், 'சுவிஸ் தமிழ் நாடகக்கல்லூரி' . பதிமூன்றுபேர் அதில் மூன்றாண்டுகள் நாடகத்தைப்; பயின்றனர். சுவிஸ் தமிழ் நாடக-இலக்கியத்துறையினர் அப்பள்ளியில் பயிற்சியளித்து மலையப்பா, கடலம்மா உள்ளிட்ட நான்கு நாடகங்களைத் தயாரித்துள்ளனர். அப்பயிற்சி நாடக வாழ்க்கைக்கு மட்டுமல்லாது தினசரி வாழ்க்கைக்கும் உதவியதாக படிப்பிற்கு வேலை செய்யுமிடத்தில் திறம்படச்செய்ய உதவியதாக அப்பள்ளியில் படித்தவர்கள் கூறினர். பின்னர் பலர் சுவிஸ் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதாகத்தொ¢கிறது.
இந்த ஆண்டு (2005) வில்லியம் தெல் என்ற சுவிஸ் நாட்டு தேசிய வீரரின் வாழ்க்கையை இருமொழி பண்பாட்டு வடிவங்களுடன் இணைத்து மேடையேற்றியுள்ளனர். தெல் வாழ்க்கையை இன்றைய சுவிஸ் - ஈழச்சூழலுடன் தொடர்புப்படுத்தி நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. சுவிஸ் பார்வையாளர்களும் ஊடகமும் நல்ல வரவேற்பளிக்க சில இனவாதிகள் இந்த நாடகத்திற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
சுவிஸ் - தமிழ் தொழில் முறைக்கலைஞர்களுடன் இணைந்து சுவிஸ் தமிழ் நாடகக்கல்லூரி வழங்கிய அந்த நாடகத்தை மூன்று முறை காணமுடிந்தது. மிகவும் நேர்த்தியாக - நுட்பமாக உருவான நாடகம் அது. தமிழர்களை உயர்வாகவும் அவர்களுக்கான பிரச்னைகளை கலாபூர்வமாகவும் முன்வைத்த நாடகம் என்று தோன்றுகிறது. சுனாமிக்கான ஒரு பாடலுடன் தொடங்கும் அந்த நாடகத்தில் தமிழர்கள் கூத்தின் வழி வில்லியம் தெல்லுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதாக முடிகிறது. தமிழ்க் கலைஞர்களும் சுவிஸ் கலைஞர்களும் மிகவும் அந்நியோன்யமாய் செயல்பட்டுள்ளனர். பல இடங்களில் வரும் தமிழ் வசனங்களை சுவிஸ் பார்வையாளர்கள் செய்கைகளுடன் தொடர்புப்படுத்தி புரிந்துகொண்டனர். சுவிஸ் கலைஞர்கள் பல இடங்களில் தமிழ் வார்த்தையைச் சொல்லி நடித்துள்ளனர். ஒரு முக்கிய சுவிஸ் நடிகை தமிழ் பாடலொன்றைப்பாடி பெருமைப்படுத்தியுள்ளது. 'அந்தப்பாடலை ஒரே நாளில் மனப்பாடம் செய்து பாடினார்" என்கிறார் அந்த நாடக இசையமைப்பாளர் தயந்தன். முழுக்க முழுக்க தயந்தனும் மயில்வாகனும் சுவிஸ் இசையையும் கற்று பறை, தவில், உடுக்கு. கஞ்சிரா போன்ற இசைக்கருவிகளைக்கொண்டு; இசையை வழங்கினர்.
கடந்த இருபதாண்டு கால சுவிஸ் தமிழ் நாடகச்செயல்பாடுகளும் டொய்ச்-தமிழ் நாடகத்தயாரிப்புகளும் பல சாதகமான அம்சங்களை ஏற்படுத்தியுள்ளதாக அறியமுடிகிறது. குறிப்பாக தமிழர்களைப்புரிந்துகொள்ள நாடகம் உதவியுள்ளதாக பலரும் கூறுகின்றனர். சுவிஸ் மேடைகளில் தமிழும் தமிழ்க் கலைகளும் கெளரவமாய் ஏறிவருவதாகவே நினைக்கத்தோன்றுகிறது.
வேறு புலம்பெயர்ந்த நாடுகளில் இத்தனை வலுவாய் அந்நாட்டினருடன் இணைந்து தொடர்ந்து இருபதாண்டு காலம் இருமொழி - இரு கலாச்சார நாடகங்கள் உருவாக்கப்பட்டதாகத் தெரியவில்லை (இருந்தால் தெரிவித்து உதவுங்கள்). நிற, மொழி, கலாச்சார பேதங்களற்று அந்த உறவு மிகவும் நெகிழ்வாய் தொடர்வதைக் காண முடிந்தது. சுவிஸ் தமிழ்க்கலைஞர்கள் எந்த செயல்பாட்டிலும் தங்கள் மொழி - பண்பாட்டை இடம் பெறத்தவறாத தன்மையும் அதற்கு இடம் தரும் சுவிஸ் சமூகமும் முக்கியமாகப் படுகின்றன. வரலாறாய் மாறியுள்ள சுவிஸ் தமிழர்களின் நாடகச்செயல்பாடுகள் கடும் உழைப்பினு}டாகவும், அர்ப்பணிப்புனூடாகவும் சாத்தியமாகியுள்ளதாகப்படுகிறது. இதைத தமிழ்ப் பெருமைகளுள் ஒன்றாகப் பார்க்கத்தோன்றுகிறது.
bbcchennai@hathway.com
மார்ச் 2005 இதழ் 63
'அல்ப்ஸ் கூத்தாடிகள்'! சுவிஸ் நாடகக் கல்லூரியின் தொடரும் சாதனை! - -C.அண்ணாமலை-
எண்ணிக்கையில் குறைந்த தொகையில் தமிழர்கள் வாழும் சுவிஸ் நாட்டில் நாடகத்துறையில் தமிழர்கள் ஆற்றிவரும் பங்களிப்பு பிரமிக்கத்தக்கது. சுவிஸ் நாட்டுக் கலைஞர்களுடன் இணைந்து இவர்கள் தயாரிக்கும் நாடகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சுவிஸ் நாடக இயக்குநர் 'ஓட்டோ ஹ¥பெர்' போன்றவர்களுடன் ஈழத்து நாடகக் கலைஞர்களான 'ஈழக்கூத்தன்' ஏ.சி தாஸிசியல், அன்ரன் பொன்ராசா போன்றவர்கள் இணைந்து ஐயோ, ஸ்ரீசலாமி, மறளம், பாண்டவர்களும் கிளவுஸ் முனிவருமுட்படப் பல நாடகங்களை மேடையேற்றினார். இவற்றைச் சுவிஸ் மக்களும் பெருமளவில் பார்த்து இரசித்தனர். இவற்றில் ஸ்ரீசலாமி நாடகம் சுவிஸ் நிறுவனமொன்றின் விருதொன்றினையும் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நாடகப் பட்டறைகள் மூலம் சுவிஸ் நாட்டில் நாடகத்துறையின் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றிவரும் சுவிஸ் நாடகக் கல்லூரியின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. பேராசிரியர் கா.சிவத்தம்பி, ஏ.சி.தாஸீசியஸ், ஓட்டோ ஹ¥பெர் (Otto Huber), நளாயினி இராசதுரை, வேலு சரவணன், காரை செ.சுந்தரம்பிள்ளை, எஸ்.பொன்னுதுரை, க.ஆதவனுபடப் பலர் இக்கல்லூரியில் கற்கைநெறிகளை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. இக்கல்லூரியில் பயிற்சிபெறும் மாணவர்கள் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தங்களை உடல், உள ரீதியில் தயார்படுத்திக் கொள்கின்றார்கள். இந்தப் பின்னணியில் வெளிவந்த 'அல்ப்ஸ் கூத்தாடிகள்' விவரணப்படம் பற்றி விளக்கும் கட்டுரையிது.
1985ஆம் ஆண்டு , அகதிகளாக சுவிஸ் சென்ற ஈழத்தமிழர்கள், அந்நாட்டினருடன் இணைந்து நாடகங்களை மேடையேற்றத் தொடங்கினர். நாடகங்களின் உள்ளடக்கம், அகதிகள் பிரச்னைகளைக் குறிப்பாக ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளைப் பேசுவதாக இருந்தது. இவை பள்ளி, கல்லூரி மற்றும் மக்கள் கூடும் இடங்களில் நிகழ்த்தப்பட்டன. அவ்வாறு மேடையேற்றப்பட்ட நாடகங்கள் சுவிஸ் மக்களிடையே ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தியது.
நாடகங்கள் மூலம் நடந்த இம்மாற்றத்தைப் பத்திரிகை, டிவி, வானொலி, இணையம் போன்ற ஊடகங்கள் முக்கிய இடம் தந்து பதிவு செய்தன. தொடர்பானவர்களைப் பேட்டி கண்டன. இதன் மூலமும் ஈழத்தமிழர்களின் நாடகச் செயல்பாடுகள் முக்கியத்துவம் கொண்டதாகப் பார்க்கப்பட்டது.
மறளம், ஐயோ, ஸ்ரீசலாமி, பாண்டவர்களும் கிளவுஸ் முனிவரும், கடலம்மா, மலையப்பா போன்ற நாடகங்கள் தமிழ் மற்று, டொய்ச் மொழிகளில் மேடையேறிய நாடகங்களாகும். இருமொழிக் கலைஞர்களும் பங்கேற்ற நாடகங்களாகும்.
நாடகம், சமூகத்தில் மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்பதைக் கண்ட சிலர் முறையான நாடகப் பயிற்சி பற்றி யோசிக்கத் தொடங்கினர். தாங்கள் முன்பு பயிற்சியின்றி நாடகப் புரிதலின்றி மேற்கொண்ட நாடகச் செயற்பாடுகளை பரிசீலிக்கத் தொடங்கினர். இதன் காரணமாகத் தோன்றியது- சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரி.
வேலை செய்து கொண்டே மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் பல்வேறு சிரமங்களோடு நாடகப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். சுவிஸ் நாட்டு நாடகக் கலைஞர்கள், தமிழ் நாடகக் கலைஞர்களோடு மொழியறிஞர்கள், எழுத்தாளர்கள், நடன-நாட்டுப்புறக் கலைஞர்களைப் போன்று பலரிடமிருந்தும் கற்றவை ஒரு நல்ல அடித்தளத்தைத் தந்தது. இப்படி மூன்றாண்டுகள் சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியில் படித்து 'கலைவளரி' என்ற பட்டத்தைப் பெற்ற மாணவர்கள், இன்று பல டொய்ச் நாடகங்களில், டிவி தொடர்களில், வானொலி நாடகங்களில் பங்கேற்று வருகின்றார்கள். இரு மொழிக் கலைஞர்கள் கூடி செயலாற்றுவது அதிகரித்து வருகிறது.
இந்தப் பின்னணியில் 'அல்ப்ஸ் கூத்தாடிகள்' தயாரிக்கப்பட்டுள்ளது. இதை எழுதி இயக்கியவர் C.அண்ணாமலை. இவர் கூத்துப்பட்டறையில் முழுநேர நடிகராக இருந்தவர். 'சுபமங்களா', 'கணையாழி', 'குமுதம்' இதழ்களில் பணியாற்றியவர். நாடகம் தொடர்பாக தொடர்ந்து எழுதிவருகின்றார்.
இவரது முகவரி
C. அண்ணாமலை
3, நாதன்ஸ் ஆர்கேடு,
21, மாளவிய அவென்யூ,
எல்.பி.சாலை, சென்னை- 600041
தொலைபேசி: 24454383 (வீடு), 24462726(அலுவலகம்)
மின்னஞ்சல்: yaazhini@hotmail.com
yaazhini@hotmail.com
No comments:
Post a Comment