Saturday, September 13, 2025

செப்டம்பர் 12 பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவு தினம்.


என்ன குரல்! ஒரு தடவை கேட்டாலும் மறக்க முடியாத தனித்துவம் மிக்க குரல். மிகவும் சிரமமான நீண்ட வசனங்களை உள்ளடக்கிய பாடல்களையெல்லாம் மிகவும் இலகுவாகப் பாடிவிடுவார். 

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, வங்கமொழி எனப் பன்மொழிகளிலும், 10,000ற்கும் அதிகமான பாடல்களைக் குறுகிய காலத்தில் பாடிப் புகழ் பெற்ற பாடகி. 
'கருத்தம்மா' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடல் அவருக்கு இந்திய மத்திய அரசின் சிறந்த பாடகிக்கான தேசிய விருதினைப் பெற்றுத்தந்த பாடல்.   கவிஞர் வைரமுத்துக்குச் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினையும்  பெற்றுத்தந்த பாடல்.  கூடவே சிறந்த குடும்பச்சித்திரத்துக்கான  தேசிய விருதினையும் கருத்தம்மா பெற்றுள்ளது. 'கருத்தம்மா'வின் இசை ஏ.ஆர்.ரகுமான். இயக்கம் -  பாரதிராஜா.

இப்பாடல் திருமணம் முடித்து , தான் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த மண்ணை விட்டு, அம்மண்ணில் அவள் கண்ட பருவக் கனவுகளை விட்டு, பிரிந்து செல்லும் பெண்ணொருத்தியின்  துயரைச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றது. மண் வாசனைமிக்க வரிகளைக் கவிஞர் வைரமுத்து எழுதியிருப்ப்பார். காட்சியினை உயிர்ச்சித்திரமாகத் திரையில் வடித்திருப்பார் இயக்குநர் பாரதிராஜா. இசையை உயிரோட்டம்மாக்கியிருப்பார் இசைப்புயல் ஏ.,ஆர்.ரகுமான்.

இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன் 'இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் தன் பாடல்களூடு நிலைத்து நிற்பார் இன்னும் நீண்ட காலம்."

https://www.youtube.com/watch?v=XF5OtplMsjE

பாடல் வரிகள் - கவிஞர் வைரமுத்து

போறாளே பொன்னுத்தாயி பொல 
பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறும் தந்த 
மண்ணை விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்துக் கோழியை விட்டு
போறாளே பொட்டப் புள்ள 
ஊரை விட்டு

சாமந்திப் பூவா
ஊமத்தம் பூவா
கருத்தம்மா எந்தப் பூவம்மா?
அஞ்சாறு சீவன் 
உள்ளூரில் ஏங்க
பொதி மாட்டு வண்டி மேலே
போட்டு வச்ச மூட்டை போல

(போறாளே பொன்னுத்தாயி..)

நீ வச்ச பாசம்
நீ சொன்ன நேசம்
கடைசியில் 
ஊமையும் ஊமையும்
பேசிய பாஷையடி

தெக்கத்தி காத்து திசை மாறி வீச
ஒன்னான மேகம் ஓடுதடி ஓடுதடி
உசுருள்ள நாத்து ஒன்னு வாடுதடி வாடுதடி
கடைசியில் சாமிக்கு நேர்ந்தது சாதிக்கு ஆனதடி

(போறாளே பொன்னுத்தாயி..)

நெஞ்சுக்குழி காஞ்சு நெடுங்காலம் ஆச்சு
ஒரு உயிர் 
வீட்டுக்கும் காட்டுக்கும் கூட்டுக்குள் இழுக்குதும்மா
சேமித்த காசு செல்லாமப் போச்சு
சொல்லாத சொல்லு பாரம் அம்மா பாரம் அம்மா
சோத்துக்கும் சொந்தத்துக்கும் தூரமம்மா தூரமம்மா
பொறு பொறு 
ஏழைக்கும் வாழைக்கும் நாளைக்கு நன்மையம்மா

(போறாளே பொன்னுத்தாயி..)

No comments:

காலத்தால் அழியாத கானம்: 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!"

    'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Googel Nano Banana) உதவி; VNG   பாடகி வாணி ஜெயராமுக்குச் சிறந்த பாடகிக்கான இந்திய மத்திய அரசின்...

பிரபலமான பதிவுகள்