Tuesday, September 2, 2025

எம்ஜிஆரின் உணவு, கல்விக்கான பங்களிப்புகள்!


எம்ஜிஆர் தனியார் பொறியியல் , மருத்துவர் கல்லூரிகளை அனுமதித்தையொட்டி அவரது எதிர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். இவர்கள் விமர்சிக்கின்ற அளவுக்குத் தொலைநோக்கு அற்றவர்கள். எம்ஜிஆர் என்னும் மனிதருக்கு இருந்திருக்கும் தொலைநோக்கு இவர்களுக்கு இல்லையென்றே கருத வேண்டியிருக்கின்றது.

எம்ஜிஆர் அனுமதியளித்த தனியார் கல்லூரிகளை உருவாக்கியவர்கள் உழைத்திருக்கலாம். ஆனால் அவற்றை உருவாக்கியவர்கள் அவற்றில் 50 வீத மாணவர்களுக்கான அனுமதியை அரசுக்கு வழங்கினர். இவ்விதம் உருவான க்ல்லூரிகளைத் தமிழக அரசு உருவாக்க வேண்டுமென்றால் அதற்குப் பெருந்தொகை நிதி வருடா வருடம் தேவையாகவிருந்திருக்கும். அது அரசுக்கு மிகுந்த  நிதி நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். அதற்குப் பதில் பல்கலைக்கழக, பள்ளிப்படிப்பற்ற எம்ஜிஆர் , அதன் அனுபவத்தின் வாயிலாகக் கண்டடைந்த முடிவு அரச நிலங்களில் அரசு கல்லூரிகளை அமைப்பதை விட, அவற்றில் தனியார் அமைப்பதற்கு அனுமதி அளிப்பதன் மூலம் அரசின் பாரம் குறைகின்றது.  அதே சமயம் அவ்விதம் உருவாக்கப்படும் கல்லூரிகளில் 50 வீத மாணவர்களுக்கான அனுமதி அரசுக்குக் கிடைக்கின்றது. இது மிகவும் நல்லதொரு முடிவு. மேலும் அதிக அளவில் மாணவர்கள் பொறியியல், மருத்துவம் படிக்கும் வாய்ப்பும் ஏற்படுகின்றது.

அவ்விதம் உருவாக்கப்பட்ட கல்லூரிகளில் அன்றிலிருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான மருத்துவ, பொறியியல் பட்டதாரிகள் உருவாகியிருக்கின்றார்கள்.  இதன் மூலம் அவர்கள் மட்டுமல்ல, தமிழகமே, இந்தியாவே மிகுந்த பயனை அடைந்துள்ளது. இது எம்ஜிஆர் கல்விக்கு ஆற்றிய மிகப்பெரிய  பணியாக, சேவையாக நான் அடையாள்ம்  காண்கின்றேன். 

அடுத்த அவரது மிகப்பெரிய சாதனையாக நான் கருதுவது சத்துணவுத்திட்டம். உணவு, கல்வி ஆகியவற்றுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பானது மிகப்பெரியது. வரலாற்றில் அவர் பெயரை நிலைநிறுத்தி வைப்பது. அவரது அரசியல்  எதிரிகள் எவ்வளவுதான் அவர்  மீது சேற்றை வாரியிறைத்தாலும், அவரது புகழ் மங்காது இன்றுவரை நிலைத்திருப்பதற்குக் காரணம் மக்கள் அவரை , அவர்தம் பங்களிப்பைப் புரிந்து  வைத்திருப்பதுதான்.அறிந்து வைத்திருப்பதுதான்.

நான் அவ்வப்போது நினைத்துப்பார்ப்பதுண்டு. ஏன் எம்ஜிஆர் மனத்தில் கல்வி, உணவு ஆகியவற்றுககான திட்டங்களைப் பற்றிய இலட்சியக் கனவுகள் இருந்தன?

அதற்கு முக்கிய காரணம் அவரது இளமைப்பருவம் வறுமையில் கழிந்தது.அதனால் அவர் உணவுக்காகப் போராட வேண்டியிருந்தது. இளமையில் வறுமை காரணமாக அவரால் முறைப்படி கல்வியைத்  தொடர முடியவில்லை.இதனால்தான் அவர் ஆட்சியில் உணவுக்கும் , கல்விக்கும் முக்கிய இடத்தை வழங்கினார்.  உணவுக்காகச் சத்துணவுத் திட்டம், கல்விக்காகத்  தனியார் பல்கலைக்கழகங்கள் - இவை, இவற்றால் பயனடைந்த்  மாணவர்கள், அவர்கள் அடைந்த பயனால் நாடு அடைந்த் நன்மைகள் ஆரோக்கியமானவை.  இத்தொலைநோக்கு மிக்க திட்டங்கள் அவரை வரலாற்றில் நிலைநிறுத்தி வைப்பவை.

இவ்விடயம் பற்றிச் சிந்திக்க , இந்தக் காணொளிகளை ஒரு தடவை பாருங்கள் - 

1. https://www.facebook.com/reel/390839913847186

2. https://www.youtube.com/shorts/5uJ9NU6rKLA

3.  https://www.youtube.com/shorts/JYLZRVNU7o4

4. https://www.youtube.com/shorts/T4GuXUsrecc


No comments:

எம்ஜிஆரின் உணவு, கல்விக்கான பங்களிப்புகள்!

எம்ஜிஆர் தனியார் பொறியியல் , மருத்துவர் கல்லூரிகளை அனுமதித்தையொட்டி அவரது எதிர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். இவர்கள் விமர்சிக்கின்ற அள...

பிரபலமான பதிவுகள்