*digital art techology by Ramanitharan Kandiah
யதார்த்தம், காலம் பற்றிய வானியற்பியல் அறிஞர் பிரையன் கிறீனின் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் சிந்தனைகள்...
வானியற்பியல் அறிஞர் பிரையன் கிறீனின் 'காலம்' பற்றிய இச்சிந்தனை இது பற்றிய விரிவான சிந்தனையைத் தூண்டுவது. எம் பிரபஞ்சத்தில் ,எம் இருப்பில் கணந்தோறும் நடைபெறும் செயல்களை, அடுத்தடுத்த கணங்களின் தொடரில் ஒழுங்கமைத்து நாம் காலத்தை அனுபவிக்கின்றோம். ஆனால் , ஏனைய அண்டவெளி உயிரின நாகரிகங்கள் நாம் உணர்வது போல் காலத்தை உணராமல் இருந்தால், இன்னுமொரு விதமாக அவர்கள் இருப்பு இருந்தால், எமக்குக் காலம் என்னும் பரிமாணம் இருப்பது போல் ,அவ்வுயிரினங்களுக்கு யதார்த்தம் என்பதை உணர்வதற்கு இன்னுமொரு பரிமாணம் இருந்தால்... எத்துணை அற்புதமான சிந்தனை! இவ்வகையான சிந்தனைகளை இவரது எழுத்துகளில் காணலாம். அவை என்னைக் கவர்ந்தவை. இவ்வகையான இவரது சிந்தனைகள்தாம் இவரை என் அபிமானத்துக்குரிய வானியற்பியல் அறிஞர்களில் ஒருவராக்கியுள்ளது
https://www.facebook.com/share/p/1BRw8CpfEP/
பிரபஞ்சங்களை இணைக்கும் 'புழுத்துளை' (wormhole)
மிஷியோ ஹகோ எனக்குப் பிடித்த வானியற்பியல் அறிஞர்களில் மற்றொருவர். இவரது வானியற்பியல்சார்ந்த எழுத்துகளும் எம் சிந்தனையை விசாலிக்க வைப்பவை. ஐன்டைனின் 'பொதுச்சார்பியல் தத்துவம்' எதிர்வு கூறும் 'புழுத்துளை' (Wormhole) பற்றிய எளியமையான, தெளிவான தன் கருத்துகளை இக்காணொளியில் மிஷியோ ஹகோ விபரிக்கின்றார்.
'புழுத்துளை' என்பது இரு வேறு பிரபஞ்சங்களை இணைப்பதற்கான அல்லது ஒரே பிரபஞ்சத்தில் தொலைதூரத்து இடங்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பதற்கான குறுக்குப் பாதை என்பதை ஐன்ஸ்ட்டைனின் இக்கருதுகோள் எடுத்துரைக்கின்றது.
https://www.facebook.com/share/p/16wVnFAvu1/
No comments:
Post a Comment