[பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள நந்திவர்மப்பல்லவனின் கட்டுரை.]
இந்தப் பதிவு இளைய தலைமுறையினருக்கானது. சமுதாயப் பிரக்ஞை மிக்க, தொலை நோக்குச் சிந்தனை மிக்க இளைய தலைமுறையினருக்கானது.
தமிழ்
இளைஞர்களே! நீங்கள் செயற்பட வேண்டிய தருணமிது. தமிழ்த் தேசியத்தைப்
பற்றிக் கவலைப்பட அரசியல்வாதிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் அவர்கள்
வழியில் செல்லட்டும். ஆனால் தமிழர்களின் வர்க்க விடுதலை, சமூக விடுதலை
பற்றிக் கவலைப்படுவதற்கு , செயற்படுவதற்கு யாருளர்? தெற்கில் மக்கள்
விடுதலை முன்னணி உள்ளது. வடக்கில் அது போன்ற அமைப்பொன்றும் இல்லை. அத்தகைய
மக்கள் விடுதலை அமைப்பொன்றின் தேவை உள்ள காலகட்டம் இது. அதன் பெயர்
மக்கள் விடுதலை அணி, மக்கள் விடுதலை அமைப்பு என்று கூட இருக்கலாம்.
இளைஞர்களே1 சிந்தியுங்கள்! இப்பதிவு உங்களில் யாருக்காவது ஒரு பொறியினைத்
தட்டி விடுமானால் அதுவே இப்பதிவின் முக்கிய நோக்கம்.
நீங்கள் ஒவ்வொருவரும் வாழும் , உங்கள் ஊரில் உள்ள மக்களைப் பாருங்கள். சமூகப் பிரிவுகள் , வர்க்கப்பிரிவுகளாக அவர்கள் பிரிந்து கிடக்கினறார்கள். அவர்களின் வர்க்க விடுதலை பற்றி, சமூக விடுதலை பற்றிச் சிந்திப்பவர்கள் யார் இருக்கின்றார்கள்? அவர்களைப் பற்றித் தொலை நோக்குடன் சிந்தியுங்கள். அவர்களில் ஒருவர்தான் நீங்களும். சமூகப்பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கும் நீங்கள் அனைவரும் ஒரு வர்க்கமாக ஒன்றிணைந்துதான் இருக்கின்றீர்கள். வர்க்கமாக ஒன்றிணைவதை உங்களுக்கிடையில் நிலவும் சமூகப் பிரிவுகள் தடுத்து நிற்கின்றன. அதைப் புரிந்து கொள்ளுங்கள். செயற்படுங்கள்.
நீங்கள் வாழும் கிராமங்களில், ஊர்களில் நீங்கள் இவ்விடயத்தில் இளையவர்களாக ஒன்றிணைந்து பல ஆக்கபூர்வமான விடயங்களைச் செய்யலாம்.சமூக, வர்க்கப்பிரிவுகளை மக்களிடத்தில் எடுத்துரைத்து, அவை நீக்கப்படுவதன் அவசியம் பற்றிய கூட்டங்கள் நடத்தலாம். அடிக்கடி கருத்தரங்குகள் நடத்தலாம், அவை சம்பந்தமான நூல்களை, பத்திரிகைகள் உள்ளடக்கிய நூல் நிலையங்களை அமைக்கலாம். இலாப , நோக்கற்ற அமைப்புகளை உருவாக்கி அவற்றின் மூலமும் இப்பணிகளைச் செய்யலாம்.
இப்பதிவு இவ்வகையில் உங்களைத் தூண்டுவதற்னான ஒரு முதற் படியே. ஓர் ஆலோசனையே. ஒரு சிறு பொறியே. இது நிச்சயம் சமூதாயப் பிரக்ஞை மிக்க இளைஞர்களில் சிலரையாவது தட்டியெழுப்பும் , சிந்திக்க வைக்கும், செயற்பட வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயம் உண்டு. இன்றுள்ள இளைஞர்கள் நாளைய தலைவர்கள். உங்களால்தான் ஆக்கபூர்வமான மாற்றங்கள் ஏற்படுத்த முடியும், இளைஞர்களே! சிந்தியுங்கள்! செயற்படுங்கள்! மாற்றங்களை, ஏற்றங்களை ஏற்படுத்துங்கள்!
* ஓவியம் - AI
நன்றி: பதிவுகள்.காம் - https://www.geotamil.com/index.php/78-2011-02-25-12-30-57/9309-2025-08-30-18-00-45
No comments:
Post a Comment