![]() |
- பேராசிரியர் க.கைலாசபதி - |
ஒஹியோ மாநிலத்திலுள்ள சென்ரல் ஸ்டேட் யுனிவேர்சிடியில் (Central State University) சுற்றுச்சூழல் பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இரமணிதரன் கந்தையா (Ramanitharan Kandiah) புகலிடத் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவர். இரமணிதரன் கந்தையா, சித்தார்த்த சே குவேரா என்னும் பெயரில் சிறுகதை, கவிதை எழுதி வருபவர். பதிவுகள் இணையத் தளத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் இடம் பெற்ற விவாதத்தளத்தில் திண்ணை தூங்கி என்னும் பெயரில் விவாதங்கள் பலவற்றில் பங்கு பற்றியவர்.
செயற்கைத் தொழில் நுட்பம், 'கிராபிக்ஸ்' மென்பொருட்கள் பாவித்து இவர் உருவாக்கி வரும் டிஹிட்டல் ஓவியங்கள், அனிமேஷன்கள் முகநூலில் பலரையும் கவர்ந்தவை. அண்மைக்காலமாக இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகள் பலரின் புகைப்படங்களை மேற்படி தொழில் நுட்பங்களைப் பாவித்து , உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் டிஜிட்டல் ஓவியங்களாக்கி வருகின்றார். அவற்றில் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். வாழ்த்துகள் இரமணி!
இவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு:
இரமணிதரன் கந்தையா (Ramanitharan Kandiah) ஒரு குறிப்பிடத்தக்க ஈழத்து எழுத்தாளர் ஆவார். ஒஹியோ மாநிலத்திலுள்ள சென்ரல் ஸ்டேட் யுனிவேர்சிடியில் (Central State University) சுற்றுச்சூழல் பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர் அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான விருதினைப் பெற்றுள்ளார்.
கல்வி
இரமணிதரன் இலங்கையில் உள்ள திருகோணமலையைச் சேர்ந்தவர். இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் குடிசார்ப் பொறியியற் துறையில் இளமானிப் பட்டம் பெற்றவர். சீனாவிலுள்ள Hohai University இல் நீர்வள மற்றும் சுற்றுச்சூழல் பொறியியற் துறையில் முதுகலைப்பட்டம் பெற்றவர். Tulane University இல் குடிசார்ப்பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.
வெளிவந்த நூல்கள்
Introduction to Water Resources - Sam L. Laki, Krishnakumar V. Nedunuri, Ramanitharan Kandiah
Kendall Hunt Publishing Company, Aug 28, 2014 - Nature - 206 pages
பேராசிரியர் இரமணிதரன் கந்தையாவின் 'டிஜிட்டல்' ஓவியங்கள்
![]() | |
- எழுத்தாளர் அ.ந.கந்தசாமி - |
![]() |
மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை |
![]() |
- எழுத்தாளர் டொமினிக் ஜீவா - |
![]() |
- எழுத்தாளர் எஸ்.பொ (எஸ்.பொன்னுத்துரை) - |
![]() | ||
- எழுத்தாளர் செ.கணேசலிங்கன் - |
![]() |
- எழுத்தாளர் மு.தளையசிங்கம் - |
No comments:
Post a Comment