'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Monday, August 18, 2025
அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்க்கோ ரூபியோவின் குதர்க்கமும், இந்தியா மீதான அமெரிக்காவின் மேலதிக வரி விதிப்பும்!
அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்க்கோ ரூபியோவின் இந்தியா மீதான மேலதிக வரி விதிப்பு பற்றிய கருத்து குதர்க்கமானது மட்டுமல்ல, இ ந்தியாவைக் களங்கப்படுத்துவதும் கூட. ருஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய்யை வாங்கி, சுத்திகரித்து அதை ஐரோப்பிய நாடுகளுக்கு விற்று இலாபம் சம்பாதித்து வருகின்றது சீனா. அதற்கு அமெரிக்கா மேலதிகத் தடை விதிக்கவில்லை. ஆனால், இந்தியாவுக்கு விதித்துள்ளது.
இதற்கு அவர் கூறும் காரணம் - அவ்விதம் மேலதிக வரியினைச் சீனாவுக்கு விதித்தால் அது சீனாவிடமிருந்து எண்ணெய்யைப் பெற்றுக்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளப் பாதிக்குமாம். ருஷ்யாவிடமிருந்து எண்ணெய்யைத் தன் நாட்டின் தேவைக்காக இந்தியா வாங்கினால், அது இந்தியா உக்ரேனுக்கு எதிரான ருஷ்யாவின் போருக்கு உதவுகின்றதாம்,. அதற்காக வரி விதிக்கின்றார்களாம். ஆனால் இந்தியாவை விட அதிகமாக எண்ணெய்யை வாங்கும் சீனாவின் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை ஐரோப்பிய நாடுகள் வாங்குகின்றன. ஆனால் இது உக்ரேனுக்கு எதிரான ருஷ்யாவின் போருக்கு உதவ வில்லையாம். இதைவிடக் குதர்க்கத்தனமான பதில் வேறென்ன இருக்க முடியும்?உலக அரங்கில் வலிமையில், தொழில் நுட்பத்தில் உயர்ந்து நிற்கும் இந்தியாவை உலக நாடுகள் பலவும் வியந்து நோக்குகின்றன. இந்நிலையில் இந்தியாவின் இந்நிலையை விரும்பாத, அங்கீகரிக்காத போக்கையே ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை பிரதிபலிக்கின்றது. அமெரிக்காவின் இப்போக்குக்குக் காரணம் தன்னைப்போல் இந்தியா உலகபெரும் ஜனநாயக நாடென்று வாய்க்கு வாய் கூறிக்கொள்ளும் அமெரிக்காவின் கபடத்தனமா அல்லது இந்தியாவின் உலகநாடுகள் மத்தியிலுள்ள உயர் நிலையினை அங்கீகரிக்காத் உதாசீனமா? இத்தனைக்கும் இந்தியாவில் குறிப்பாக வட் இந்தியாவில் பெரும்பாலான அமெரிக்கர்கள் குடியரசுக் கட்சியினருக்கே ஆதரவளித்து வருபவர்கள் என்பதும் அதனால்தான் அவர்கள் ஜோர்ஜ் புஷ் யூனியர், ட்ரம்ப் ஆகியோர் இந்தியா வந்தபோது பெரும் ஆதரவுடன் கூறிய வரவேற்பினை அளித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு - https://www.ndtv.com/world-news/marco-rubio-on-why-us-tariffed-india-over-russian-oil-but-not-china-9105726
Subscribe to:
Post Comments (Atom)
அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்க்கோ ரூபியோவின் குதர்க்கமும், இந்தியா மீதான அமெரிக்காவின் மேலதிக வரி விதிப்பும்!
அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்க்கோ ரூபியோவின் இந்தியா மீதான மேலதிக வரி விதிப்பு பற்றிய கருத்து குதர்க்கமானது மட்டுமல்ல, இ ந்தியாவைக் கள...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
No comments:
Post a Comment